43. திருக்கச்சி (அத்திகிரி)
	


		
 
	
 
3:21:54 AM         Wednesday, April 01, 2020

43. திருக்கச்சி (அத்திகிரி)

43. திருக்கச்சி (அத்திகிரி)
43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி) 43. திருக்கச்சி (அத்திகிரி)
Product Code: 43. திருக்கச்சி (அத்திகிரி)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                   திருக்கச்சி (அத்திகிரி)

திருத்தல இருப்பிடம் :    இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன காஞ்சிபுரத்தில் உள்ளது. அத்தியூர் என்றும், சத்யவ்ரத சேத்திரம் என்றும் பெயர்பெற்றது.

மூலவர்    :    வரதராஜப் பெருமாள், பேரருளாளன், தேவாதிராஜன்,

தாயார்    :    பெருந்தேவித் தாயார் (மகாதேவி)

தீர்த்தம்    :    வேகவதி நதி, அனந்தஸரஸ், சேஷ வராஹப்ருஹம, 
பத்ம, அக்னிகுசலம்

விமானம்    :    புண்யகோடி விமானம்        

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் - 4 பாசுரங்கள்
        பூதத்தாழ்வார் - 2 பாசுரங்கள்
        பேயாழ்வார் - 1 பாசுரங்கள்
மொத்தம்    :    7 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்    :    மூலவர் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயாருக்கு தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார். 24 படிகள் மேல் சிறிய குன்றின் மேல் கோயில் அமைந்துள்ளது. மலையடியின் குகையில் நரசிம்மர், புஷ்கரிணி கரையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி விசேஷம். கருடனை வாகனமாகவும், ஆதிசேடனைப் படுக்கையாகவும் கொண்டு அறிதுயில் செய்பவன், அவன் தான் இந்த அத்தியூரான்.

ஒரு சமயம் சரஸ்வதி தேவியின் துணையின்றி, பிரம்மன் உலக நன்மைக்காக ஒரு யாகத்தை ஆரம்பிக்க, சரஸ்வதி அந்த யாகத்தை தடுக்க முயற்சிக்கிறார். பிறகு பிரம்மன் திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்ய, திருமால் ஜ்வாலையாக காட்சி கொடுத்து யாகத்தைத் தொடரச் செய்தார். யாகத்தில் கிடைக்கும் அவிர்ப்பாகத்தை பிரம்மா எம்பெருமானுக்கு அளிக்க, தேவர்களுட்பட, அனைவருக்கும் கேட்கும் வரமெல்லாம் கொடுத்ததால், எம்பெருமானுக்கு வரதர் என்னும் திருநாமம் உண்டாயிற்று. ஸ்ரீஆளவந்தார், இராமானுஜர், ஸவாமி தேசிகன், மணவாள மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், பெரிய நம்பிகள், இத்தலத்து பெருமாளை தரிசித்துள்ளனர்.
    
பொய்கையாழ்வார், ஸ்ரீஸவாமி தேசிகன் அவதார ஸ்தலம். ஸ்ரீரங்கத்தை போலவே உபய வேதாந்த வித்வான்களின் காலN~பங்களாலும் மற்ற பல அற வழிகளாலும் வைணவம் வளர்க்கப்பட்ட திவ்யN~த்திரம் ஆகும்.

எம்பெருமானின் வைகாசி விசாக கருட சேவை மிகபிரசித்தி பெற்றது.

ஐராவதமே மலையுருவில் எம்பெருமானைத் தாங்கினமையால், இதற்கு அத்திகிரி (வேதகிரி) என்று பெயர் வந்ததாம்.

இங்கு பிரம்மா செய்த யாகத்திற்கு உகந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜன் என அழைக்கப்படுகிறார்.

இங்கு குளத்தில் மூழ்கிக் கிடத்தப்பட்டிருக்கும் அத்திவரதர் என்ற அத்தி மரத்தாலான சிலை 40 வருடங்களுக்கொருமுறை வெளியில் எடுக்கப்பட்டு 10 தினங்கள் சேவைக்கு வைக்கப்படுகிறது. மேலும், நோயுற்றவர்கள் ஸ்ரீவரதனை சேவித்து, பல்லிகளைத் தொட்டு வியாதியிலிருந்து நிவர்த்தியடைகிறார்கள். இது முக்தி தரும் ஏழு நகரங்களில் தெற்கே உள்ளது காஞ்சி மட்டுமே.

விமானதளம்       :    சென்னை

ரயில் நிலையம்   :    காஞ்சிபுரம்

பஸ் வசதி             :    உண்டு

தங்கும் வசதி       :    உண்டு

உணவு வசதி       :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×