39. திருப்பார்த்தன் பள்ளி
	


		
 
	
 
5:43:23 PM         Saturday, February 29, 2020

39. திருப்பார்த்தன் பள்ளி

39. திருப்பார்த்தன் பள்ளி
39. திருப்பார்த்தன் பள்ளி 39. திருப்பார்த்தன் பள்ளி 39. திருப்பார்த்தன் பள்ளி 39. திருப்பார்த்தன் பள்ளி 39. திருப்பார்த்தன் பள்ளி
Product Code: 39. திருப்பார்த்தன் பள்ளி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                        திருப்பார்த்தன் பள்ளி

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில், உள்ள தஞ்சை மாவட்டத்தில் சீர்காழியிலிருந்து தென்கிழக்கே 11 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருவெண்காட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலவர்    :    தாமதையாள் கேள்வன் 

உத்ஸவர்    :    பார்த்தசாரதி

தாயார்    :    தாமரை நாயகி

தீர்த்தம்    :    சங்க ஸரஸ் (கங்கா தீர்த்தம்) 

விமானம்    :    நாராயண விமானம்.

மங்களாசாசனம்    :    திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் :     உற்சவர் கோலவல்லி ராமன் சங்கு, சக்கரம், கதை, வில்லு அம்பு ஏந்திய வண்ணம் அழகாய் மிளிருகிறார். இங்கு மூலவர் நின்ற திருக்கோலத்தில், மேற்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சி தருகிறார்.

    அர்ச்சுனன் இவ்விடத்திற்கு வந்த போது அதிகமாக தாக வேட்கை ஏற்பட்டு, இங்கே தவம் செய்து கொண்டிருந்த அகத்தியரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, அகத்தியர் கமண்டலத்தை நோக்க, அதில் இருந்த நீரும் வற்றிப்போனது. இது கண்ணனின் வேலையென்று தெரிந்து கொண்டு, அர்ச்சுணனை நோக்கி அர்ச்சுணா நீ எப்போதும் எந்த உதவி வேண்டுமானாலும் உன் ஆபத்பாந்தவனான கண்ணணையல்லவா அழைக்க வேண்டும் என்று கூற உடனே அர்ச்சுணனும் கண்ணனை நினைக்க கண்ணன் அங்கு வந்து கத்தி ஒன்றை அர்ச்சுணனிடம் கொடுத்தான். அக்கத்தியால் பூமியைப் பிளக்க உடனே கங்கை நீர் பெருகியது, தாகந்தீர்ந்த அர்ச்சுணன் கண்ணனால் இவ்விடம் சிறிது ஞானோபதேசமும் பெற்றான். பார்த்தனுக்காக அருளிச் செய்த தலமாதலால் பார்த்தன் பள்ளி ஆயிற்று. இங்கே கார்த்தனுக்கு (அர்ச்சுணன்) தனிச் சந்நிதி உள்ளது. பார்த்தசாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள பெருமாள் இரண்டு கைகளுடன் வீரம் ததும்பும் முகத்துடன் உள்ளார். இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் சாந்தம் தவழும் திருமுகத்துடன் காட்சியளிக்கிறார்.
    வசதிகள் ஒன்றுமில்லாத ஊர் எனினும் அர்ச்சகர் கோயில் அருகிலேயே குடியிருக்கிறார்.

தனிச்சிறப்பு:
    மூலவர், உற்சவர் இருவருக்குமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்று மூன்று தேவிகள் உண்டு.

விமானதளம்    :    திருச்சி

ரயில் நிலையம்    :    சீர்காழி

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    இல்லை

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×