38. திருவெள்ளக்குளம்
	


		
 
	
 
6:33:57 PM         Saturday, February 29, 2020

38. திருவெள்ளக்குளம்

38. திருவெள்ளக்குளம்
38. திருவெள்ளக்குளம் 38. திருவெள்ளக்குளம் 38. திருவெள்ளக்குளம் 38. திருவெள்ளக்குளம் 38. திருவெள்ளக்குளம் 38. திருவெள்ளக்குளம் 38. திருவெள்ளக்குளம்
Product Code: 38. திருவெள்ளக்குளம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                              திருவெள்ளக்குளம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருநாங்கூர், சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலவர்    :    ஸ்ரீனிவாசன், கண்ணன் நாராயணன், அண்ணன் பெருமாள்

தாயார்    :    அலமேல்மங்கை

தீர்த்தம்    :    திருவெள்ளக்குளம், ஸ்வேத புஷ்கரிணி

விமானம்    :    தத்வத்யோக விமானம்.

மங்களாசாசனம்    :    திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் : இப்பதியை 'தென் திருப்பதி' என்றும் அழைப்பர். இங்கே திருப்பதி போல் தலைமுடி காணிக்கை செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இக்கோயிலில் கல்யாணமும் நடத்திக் கொள்கின்றனர். இங்கே மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுகம் கொண்டு காட்சி தருகிறார். 
 
திருத்தல புராணம் : ஒரு சமயம் சூரிய வம்சத்தில் துந்துமாரன் என்ற மன்னனுக்குச் சுவேதன் என்றொரு புத்திரன் இருந்தான். அவனுக்கு ஒன்பதாவது வயதில் மரணகண்டம் என்று சாஸ்திர வாதிகளால் அறிந்ததும், அதற்கு பிராயச்சித்தம் காண தன்குல குருவான வசிட்டரை அணுக, அவரோ இவ்விடத்திற்குச் சென்று தவம் செய்யக் கூறினார். எனவே இவ்விடம் வந்த சுவேதன், மருத்த முனிவர் ஆசிரமம் சென்று ஆயுள் விருத்தி மந்திரத்தை பயிற்சி பெற்று, இங்குக் கடுந்தவம் இயற்றினார். இதைக் கண்ட மகாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்து மரண கண்டத்தை இல்லாததாக்கி மார்க்கண்டேயனைப் போல் நீண்ட ஆயுளை நல்கினார். ஆதலால் இத்தலத்தின் எதிர்புறம் அமைந்துள்ள சுவேத புஷ்கரிணி திருவெள்ளக்குளம் என்ற பெயர் பெற்றது. இந்த சுவேத புஷ்கரிணியில் உள்ள குமுத மலர்களை கொய்து செல்லத் தேவகுலப் பெண்கள் வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு ஒரு சமயம் வந்த தேவகுலப்பெண்களில் மானிடப் பார்வைக்கு இலக்காகி இங்கேயே நின்று விட்ட குமுதவல்லியைத் தான் திருமங்iகாழ்வாருக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கப்பட்டது. இங்கு குமுத வல்லிக்கு ஒரு தனிச் சந்நிதி உள்ளது.

காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை சேவிக்கலாம், மேலும் அர்ச்சகர் வீடு கோயிலின் அருகில் உள்ளது.

விமானதளம்         :    திருச்சி

ரயில் நிலையம்    :    சீர்காழி

பஸ் வசதி             :    உண்டு

தங்கும் வசதி       :    உண்டு

உணவு வசதி       :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×