37. திருமணிக்கூடம்
	


		
 
	
 
7:06:53 PM         Saturday, February 29, 2020

37. திருமணிக்கூடம்

37. திருமணிக்கூடம்
37. திருமணிக்கூடம் 37. திருமணிக்கூடம் 37. திருமணிக்கூடம் 37. திருமணிக்கூடம் 37. திருமணிக்கூடம் 37. திருமணிக்கூடம் 37. திருமணிக்கூடம்
Product Code: 37. திருமணிக்கூடம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருமணிக்கூடம்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருநாங்கூருக்குக் கிழக்கே 1 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மூலவர்    :    வரதராஜன் (மணிக்கூட நாயகன்), 

தாயார்    :    திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி

தீர்த்தம்    :    சந்திர புஷ்கரிணி

விமானம்    :    கனக விமானம்

ப்ரத்ய~ம்    :    பெரிய திருவடி, சந்திரன்

மங்களாசாசனம்    :    திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: வரதராஜப் பெருமாள் கோயில் என அழைக்கப்படுகிறது. திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கே மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுகமண்டலம் கொண்டு காட்சி தருகிறார்.

    காஞ்சி வரதராஜப் பெருமாள் போலவே இப்பெருமாளும் வரந்தருவதில் வல்லவராகிறார். பெரியதிருவடி, சந்திரன், இவ்விருவருக்கும் பெருமாள் இத்தலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம், நாங்கூர் மணிக்கூடத்திலே, எங்கும் தென்றல் உலவுகிறது என்றும், அந்தத் தென்றலும், மணங்கொண்டு உலவுகிறது என்றும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். மலர் மணத்தைக் குறிப்பிடாமல் இப்பெருமாளின் தெய்வீக மணத்தைத்தான் இப்படிக் குறிப்பால் ஆழ்வார் உணர்த்துகிறார். இத்தலத்திலுள்ள பகவானை எந்தை என்று உரிமையோடும், பாசத்தோடும் அழைக்கிறார். ஆழ்வார் பெருமாளை அவனே குன்றம் எனவும், அவனே மண் எனவும், அவனே குளிர் புனல் எனவும், அவனே திங்கள் எனவும், அவனே வெண்சுடர் எனவும், அவனே எல்லாம் எனவும், பகவானின் அளப்பரிய தன்மையை எடுத்துரைக்கிறார்.

திருநாங்கூரிலிருந்து அர்ச்சகரை அழைத்துச் செல்ல வேண்டும்.

விமானதளம்    :    திருச்சி

ரயில் நிலையம்    :    சீர்காழி

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×