36. திருத்தெற்றியம்பலம்
	


		
 
	
 
5:56:19 PM         Saturday, February 29, 2020

36. திருத்தெற்றியம்பலம்

36. திருத்தெற்றியம்பலம்
36. திருத்தெற்றியம்பலம் 36. திருத்தெற்றியம்பலம் 36. திருத்தெற்றியம்பலம் 36. திருத்தெற்றியம்பலம் 36. திருத்தெற்றியம்பலம் 36. திருத்தெற்றியம்பலம்
Product Code: 36. திருத்தெற்றியம்பலம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                            திருத்தெற்றியம்பலம்

திருத்தல இருப்பிடம்    :    இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் திருநாங்கூரின் மேற்கு பகுதியில் இத்தலம் அமைந்திருக்கிறது. சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. பள்ளிகொண்ட பெருமாள் என்றே ப்ரஸித்தம்.

மூலவர்    :    செங்கண்மால், அரங்கநாதன், ஸ்ரீலட்சுமிரங்கர்,

தாயார்    :    செங்கமலவல்லி

தீர்த்தம்    :    சூரிய புஷ்கரிணி

விமானம்    :    வேத விமானம்

ப்ரத்ய~ம்    :    நாச்சியார், அநந்தாழ்வார்.

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் – 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்    :    “பள்ளி கொண்ட பெருமாள் கோயில்” என்று அழைப்பார்கள். 108 திவ்ய தேசங்களில் இத்தலம் மட்டுமே அம்பலம் எனக் குறிக்கப்படுகிறது.

நான்கு புஜங்களுடன் ஆதிசேடன் மீது சயனத் திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு இருக்கும் இப்பெருமான் செங்கண்மால் என்ற பதத்திற்கு ஏற்பக் கண்ணழகு மிக்கவர். இப்பெருமானைச் சேவிப்பவர்கள் அரசாளும் வல்லமை பெறுவார்கள். அரசு பதவி சம்பந்தமான வேண்டுதல்கள் இப்பெருமானை வேண்டியவர்கட்குச் சித்திக்கிறதென்பது ஐதீகம். திருநாங்கூர் வந்த பதினொரு எம்பெருமானிகளில் இவர் ஸ்ரீரங்கத்து ரெங்கநாதனாவார். அதனால்தான் அரங்கனைப் போல ஆதிசேடன் மேல் சயனித்துப் பேரழகு வாய்ந்தவராக காணப்படுகிறார். இத்தலத்துத் திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மாலைத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தலத்துச் செங்கண்மாலைச் சரணடைவதால் எந்தத் துன்பமும் இல்லை. ஏனென்றால் ஊழி வெள்ளத்தையே தன் வயிற்றில் ஒடுக்கி, சகல லோகங்களையும் காத்த மூர்த்தி ஆவார்.

விமானதளம்        :    திருச்சி

ரயில் நிலையம்   :    சீர்காழி

பஸ் வசதி             :    உண்டு

தங்கும் வசதி        :    உண்டு

உணவு வசதி         :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×