35. திருத்தேவனார் தொகை
	


		
 
	
 
6:37:55 PM         Saturday, February 29, 2020

35. திருத்தேவனார் தொகை

35. திருத்தேவனார் தொகை
35. திருத்தேவனார் தொகை 35. திருத்தேவனார் தொகை 35. திருத்தேவனார் தொகை 35. திருத்தேவனார் தொகை 35. திருத்தேவனார் தொகை 35. திருத்தேவனார் தொகை
Product Code: 35. திருத்தேவனார் தொகை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                     திருத்தேவனார் தொகை

திருத்தல இருப்பிடம்    :    இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருநாங்கூர்க் கீழ்ச்சாலை என்று வழங்கப்படும் இத்தலம் திருநாங்கூரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் மணியாற்றின் தென்கரையில் உள்ளது.

மூலவர்    :    தெய்வநாயகன் 

உத்ஸவர்    :    மாதவப்பெருமாள்

தாயார்    :    கடல்மகள் நாச்சியார்

தீர்த்தம்    :    சோபன புஷ்கரிணி, தேவஸகா புஷ்கரிணி

விமானம்    :    சோபன விமானம்

ப்ரத்ய~ம்    :    வஸிஷ்டர்

மங்களாசாசனம்:    10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்    :    ஸ்ரீமந் நாராயணன் திருநாங்கூருக்கு வந்தபோது பிரம்மன் முதலிய தேவர்கள் அவன் அழகில் சொக்கி, அவனை சூழ்ந்து நிற்கின்றார்கள். அனைவருக்கும் பலனைக் கொடுக்கும் தேவதையாக (பலப்ரதனாக) பெருமாள் காட்சி அளிக்கிறார். இதனால் இத்திருத்தலம் தேவனார்த் தொகை என அழைக்கப்படுகிறது. மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுகம் கொண்டு காட்சி தருகிறார்.

    திருநாங்கூருக்கு எழுந்தருளியுள்ள 11 எம்பெருமான்களில் இவர் திருவிடவெந்தை எம்பெருமான் எனப் பெயர் பெற்றார். ஊற்சவ மூர்த்தியின் பெயரால் மாதவப் பெருமாள் கோயில் என்றே இத்தலம் அழைக்கப்படுகிறது. அத்தலத்து மூலவர் திருநாமம் 108 திவ்ய தேசத்தில் நடுநாட்டுத் திருப்பதியான திருவஹிந்திரபுரத்துக்கும், பாண்டி நாட்டுத்திருப்பதியான வானமாமலைக்கும் உண்டு. இதனால் இத்தலம் உற்சவரின் திருநாமத்திலேயே பெயர் பெறுகின்றது. தேன் சிந்தும் மலர்ப் பொழில் மட்டும் இங்கு இல்லை. அருட் தேன் சிந்தும் மாதவனும் இங்கு இருந்து அருளுகிறான் என்று பாடப்பட்டுள்ளது. இதை உணர்ந்து, ஆனாத பெருஞ்செல்வத்து அருமறையோர், அங்கு தங்கியதாகச் கூறுகிறார். அந்த மறையோர் தங்கியிருக்கும் இடத்தில் பெருமாளும் இருக்கினறான். அவன் விரும்பி இருக்கும் இடம் இதுவே எனக் கூறுகிறார்.

மேலும், இக்கோயில் அர்ச்சகர்  மேலும் பல கோயில்களில் கைங்கர்யம் செய்வதால், சேவிக்கும் நேரத்தை முன் கூட்டியே அமைத்துக்கொள்ள வேண்டும்.

விமானதளம்         :    திருச்சி

ரயில் நிலையம்    :    சீர்காழி

பஸ் வசதி              :    உண்டு

தங்கும் வசதி         :    இல்லை

உணவு வசதி         :    இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×