34. திருவாலியும் திருநகரியும்
	


		
 
	
 
7:12:27 PM         Saturday, February 29, 2020

34. திருவாலியும் திருநகரியும்

34. திருவாலியும் திருநகரியும்
34. திருவாலியும் திருநகரியும் 34. திருவாலியும் திருநகரியும் 34. திருவாலியும் திருநகரியும் 34. திருவாலியும் திருநகரியும் 34. திருவாலியும் திருநகரியும் 34. திருவாலியும் திருநகரியும்
Product Code: 34. திருவாலியும் திருநகரியும்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                    திருவாலியும் திருநகரியும்

திருவாலி திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் சீர்காழி-திருவெண்காடு பஸ் சாலையில் இத்தலம் உள்ளது. இரண்டும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ, தொலைவிலும் திருநாங்கூரிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவிலும், கீழச்சாலையிலிருந்து 6 கி.மீ தொலைவிலும் உள்ளது. 

திருவாலி மூலவர்    :    லட்சுமி நரசிம்மர், வயலாளி, 

உத்ஸவர்    :    கல்யான ரங்கநாதன்

தாயார்    :    அமிர்தகடவல்லி

திருநகரி திருத்தல இருப்பிடம் : திருவாலியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் நெப்பத்தூர் வழியாக கப்பிப்பாதையில் செல்ல வேண்டும். திருநாங்கூரிலிருந்து நேர் பாதையும் உள்ளது. சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பஸ் திருநகரி வழியாக செல்கிறது, கிழக்கே திருமுகம் கொண்டு காட்சி தருகிறார். 

திருநகரி மூலவர்    :    வேதராஜன் (வயலாளி மணவாளன்) வீற்றிருந்த கோலம்

தாயார்    :    அமிர்தவல்லி

தீர்த்தம்    :    இலா~ணி புஷ்கரிணி

மங்களாசாசனம்    :    குலசேகராழ்வார் - 1 பாசுரம்,
                                      திருமங்கையாழ்வார் - 41 பாசுரங்கள்
மொத்தம்    :    42 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் : திருவாலி தலத்தில் லெட்சுமி தேவியுடன் பெருமாள் நரசிம்ம ரூபமாய் எழுந்தருளியிருப்பதால் லட்சுமி நரசிம்ம சேத்திரம் என்றும் இப்பெயர் பெறக் காரணமாயிற்று. பெருமாள் நரசிம்ம அவதாரம் செய்த போது இரண்யனை வதம் செய்து சீற்றம் அடங்காமல் இருக்க கண்டு தேவர்களும், ரஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்;டும் என்று பிராட்டியை வேண்டி பிராட்டி பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தார். பெருமாளைப் பிராட்டியிhர் ஆலிங்கணம் செய்து கொண்ட தலமாதலால் இதற்குத் 'திருவாலி' எனத் திருநாமம் உண்டாயிற்று. லட்சுமிபுரம், பில்வாரண்ய சேத்திரம் என்றும் அழைப்பர்.
        
திருநகரியில் வேதராஜப் பெருமாள் திருமணக்கோலத்தில் மணவாளனாக இத்தலத்திற்கு எழுந்தருளி (ஆலி மணவாளனாக) பூர்ண மகரிஷியிடம் வளர்ந்த திருமகளை மணம் புரிந்துகொண்டு திருவாலிக்கும், திருநகரிக்கும் இடைப்பட்ட தேவராஜபுரம் என்ற இடத்தில் வரும்போது திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் செவிகளில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தார். இன்றும் இச்செய்தியை உணர்த்தும் வேடுபறி உற்சவம், இங்கு நடைபெறுகிறது. கல்யாணக் கோலத்தில் பெருமாள், ஆழ்வாருக்குக் காட்சி கொடுத்ததால் கல்யாண ரெங்கநாதர் என்ற பெயராயிற்று.

 திருவாலியிலிருந்து திருநகரிக்கு 5 கி.மீ தொலைவில் இருந்தாலும் ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது.

விமானதளம்         :    திருச்சி

ரயில் நிலையம்    :    சீர்காழி

பஸ் வசதி              :    உண்டு

தங்கும் வசதி         :    இல்லை

உணவு வசதி          :    இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×