33. திருவைகுந்த விண்ணகரம்
	


		
 
	
 
6:41:32 PM         Saturday, February 29, 2020

33. திருவைகுந்த விண்ணகரம்

33. திருவைகுந்த விண்ணகரம்
33. திருவைகுந்த விண்ணகரம் 33. திருவைகுந்த விண்ணகரம் 33. திருவைகுந்த விண்ணகரம் 33. திருவைகுந்த விண்ணகரம் 33. திருவைகுந்த விண்ணகரம் 33. திருவைகுந்த விண்ணகரம் 33. திருவைகுந்த விண்ணகரம் 33. திருவைகுந்த விண்ணகரம்
Product Code: 33. திருவைகுந்த விண்ணகரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                             திருவைகுந்த விண்ணகரம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருநாங்கூருக்கு வடக்குப் பகுதியில் இத்தலம் அமைந்திருக்கிறது. இதை வைகுந்தநாதர் கோயில் என்று அழைப்பர். சீர்காழியிலிருந்து 8 கி.மீ தொலைவில் திருநாங்கூரிலேயே உள்ள தலம்.

மூலவர்    :    வைகுந்தநாதன், 

உத்ஸவர்    :    உத்ஸவர்களும் அதே கோலத்தில் உள்ளனர்.

தாயார்    :    வைகுந்தவல்லி

தீர்த்தம்    :    லட்சுமி புஷ்கரிணி, உதங்க புஷ்கரிணி, விரஜா தீர்த்தம்

விமானம்    :    அனந்தஸத்யவர்த்தக விமானம்

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் : பகவான் வைகுந்தத்தில், வீற்றிருந்த கோலத்தோடு இருப்பது போல இங்கும் இருப்பதால் இந்த ஸ்தலம் திருவைகுந்த விண்ணகரம் எனப் பெயர் பெற்றது. இங்கு மூலவர் தாமரைக்கண்ணுடைய பிரான் உபய நாச்சிமார்களும் வீற்றிருக்கின்றனர். கிழக்கே திருமுக மண்டலம்.
        
சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்தப் பரமபத நாதன் புறப்பட்டு வர அவனைப் பின்பற்றிப் பத்துப் பெருமாள்களும் இவ்விடத்துக்கு (திருநாங்கூர்) வந்தனர். பரமபதத்தில் இருந்து வந்ததால் அங்கு எவ்விதம் நித்ய சூரிகடகுக காட்சி கொடுக்கிறாரோ அதை போல் இங்கும் எழுந்தருளியுள்ளார். பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம், பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு விரஜை தீர்த்தமாக உள்ளது. இப்பெருமானும் திருநாங்கூரில் தை அம்மாவசை மறுநாள் நடைபெறும் கருட சேவைக்கு எழுந்தருளுவார். இங்கே உண்மை மிகு நல்ல கலைகள், நிறை பொறைகள், வண்மை மிகு மறையவர்கள் மலிந்திருக்கிறார்கள். மறையவர்கள் சூழத் திருநாங்கூரில் இருக்கின்ற வைகுந்த விண்ணகரப் பெருமானை வணங்கு நெஞ்சே என ஆழ்வார் தம் பாசுரத்தில் தெரிவித்திருக்கிறார்.

விமானதளம்         :    திருச்சி

ரயில் நிலையம்    :    சீர்காழி

பஸ் வசதி              :    உண்டு

தங்கும் வசதி         :    உண்டு

உணவு வசதி          :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×