32. திருமணிமாடக் கோயில்
	


		
 
	
 
6:21:47 PM         Saturday, February 29, 2020

32. திருமணிமாடக் கோயில்

32. திருமணிமாடக் கோயில்
32. திருமணிமாடக் கோயில் 32. திருமணிமாடக் கோயில் 32. திருமணிமாடக் கோயில் 32. திருமணிமாடக் கோயில் 32. திருமணிமாடக் கோயில்
Product Code: 32. திருமணிமாடக் கோயில்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருமணிமாடக் கோயில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழியிலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ தொலையில் உள்ளது. திருநாராயணப் பெருமாள் கோயில் என்று பிரசித்தம்.

மூலவர் : நாராயணன் , நந்தா விளக்குப் பெருமாள்

உத்ஸவர் : நாராயணன்  அளத்தற்கரியான் என்று வீற்றிருக்கும் மற்றொரு உத்ஸவரும் உண்டு.

தாயார் : புண்டரீகவல்லி 

தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி, ருத்ர புஷ்கரிணி

விமானம் : ப்ரணவ விமானம்

ப்ரத்யக்ஷம் : இந்திரன்  ஏகாதச ருத்ரர்கள்

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 12 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் : பெரிய திருமேனி ஒருவராலும் தூண்டா விளக்காகத் திருமங்கையாழ்வார் இங்கே பெருமாளை விளக்குகிறார்.

அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் 'திருமணிமாடக்கோயில்' என்று பெயர் பெற்றது. திவ்ய தேசங்கள் 30லிருந்து 40 வரை. 11 பதிகளும் 'திருநாங்கூர் திருப்பதிகள்' என்று அழைக்கப்டுகின்றன. இந்தப் பதியை நாராயணப் பெருமாள் கோயில் என்பர். எம்பெருமான் சிவனின் நடனத்தை நிறுத்த திருநாங்கூரில் பிரவேசித்த போது இந்த தலத்தினருகில் சிவன் நடனம் புரிந்துகொண்டு இருந்ததாகவும் ஸ்ரீமந் நாராயணனைப் பரமபத நாதனாகக் கண்ட பரமேசுவரன் தன்னைப் போல் 11 உருக்கொண்டு பெருமாள் காட்சி தர வேண்டுமென விண்ணப்பம் செய்ய அவ்விதமே எம்பெருமான் 11 திருக்கோலங்களில் திரநாங்கூர் பதிகளில் காட்சி தந்துள்ளார். இந்தத் திருநாங்கூரில் தை அம்மாவாசைக்கு மறுநாள் கருடசேவைத் திருவிழா நடைபெறும் 11 எம்பெருமாள்களுடன் கருடன் மேல் இங்கு எழுந்தருள அம்ச வாகனத்தில் திருமங்கையாழ்வார் ஒவ்வொரு பெருமானையும் வலம்வந்து (மாலை மரியாதையுடன்) மங்களாசாசனம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும். திருமந்திரத்தை இராமானுஜருக்கு உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு எழுந்தருளியிருக்கிறார். ஒரே அர்ச்சகரே இரண்டு மூன்று கோயில்களுக்கு செல்வதால் அவருடனே சேவையை முடித்துக்கொள்ள வேண்டும்.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : சீர்காழி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×