31. திருச்செம்பொன்செய்கோயில்
	


		
 
	
 
6:54:50 PM         Saturday, February 29, 2020

31. திருச்செம்பொன்செய்கோயில்

31. திருச்செம்பொன்செய்கோயில்
31. திருச்செம்பொன்செய்கோயில் 31. திருச்செம்பொன்செய்கோயில் 31. திருச்செம்பொன்செய்கோயில் 31. திருச்செம்பொன்செய்கோயில் 31. திருச்செம்பொன்செய்கோயில் 31. திருச்செம்பொன்செய்கோயில் 31. திருச்செம்பொன்செய்கோயில்
Product Code: 31. திருச்செம்பொன்செய்கோயில்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                             திருச்செம்பொன்செய்கோயில்

                                                                                                                                                                                                                      திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீகாழியில் 8 கி.மீ. தொலைவில் திருநாங்கூரின் கீழ்ப் பகுதியில் இத்தலம் அமைந்திருக்கிறது.

மூலவர் : பேரருளாளன்

உத்ஸவர் : ஹேமரங்கர்  செம்பொன்னரங்கர்

தாயார் : அல்லிமாமலர் நாச்சியார்

தீர்த்தம் : நித்ய புஷ்கரிணி கனக தீர்த்தம்

விமானம் : கனக விமானம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் : பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என்றும் இங்கு வந்து நம்மோடு இருப்பதால் பேரருளாளன் எனவும் பெயர் பெற்றார்.

இராவண சம்காரம் முடிந்தபின் இராமபிரான் இத்தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணருக்குத் தானம் செய்தார். அதைக் கொண்டு இத்தலம் கட்டியபடியால் இதற்கு செம்பொன்செய்கோயில் எனப் பெயராயிற்று. செம்பொன் அரங்கர் கோயில் என்று புகழ் வாய்ந்தது ருத்திரனின் பிரார்த்தனைப்படி விஷ்ணு பதினோரு ரூபத்துடன் ருத்திரனுடன் நித்யவாஸம் செய்து கொண்டு பக்தர்களின் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பது வரலாறு. இதை முன்னிட்டு தைமாதம் அம்மாவாசை கழிந்து மறுநாள் ராத்திரி 11 திவ்ய தேச எம்பெருமான்களும் திருமணிமாடத்திலிருந்து தொடங்கி 11 கருட வாகனங்களில் எழுந்தருளி திருநாங்கூரில் 11 கருடசேவை உத்ஸவம் மிகச் சிறப்பாக வருடாவருடம் நடைபெற்று வருகிறது. இந்த திவ்ய தேசம். இழந்த செல்வத்தைத் திரும்பப் பெற விரும்புவோருக்கு இத்தலத்தின் பெருமாளைச் சேவிப்பது மிக்க பயனும் வெற்றியும் தரும் என்பது ஐதீகம். திருநாங்கூர் வந்த எம்பெருமான்களில் இவர் உறையூரின் அழகிய மணவாளப் பெருமான் ஆவார். இவரே பேரருளான் என்னும் திருநாமத்தோடு இங்கே எழுந்தருளியுள்ளார்.

திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களும் ருத்திரன் பூஜிப்பதற்காக ஏற்பட்டவை. இங்கு காலை 9 மணிக்குள்ளும். மாலை 5 முதல் 7 மணிக்குள்ளும் தரிசிக்கலாம்.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : சீர்காழி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×