30. திருவண் புருடோத்தமம்
	


		
 
	
 
5:35:06 PM         Saturday, February 29, 2020

30. திருவண் புருடோத்தமம்

30. திருவண் புருடோத்தமம்
30. திருவண் புருடோத்தமம் 30. திருவண் புருடோத்தமம் 30. திருவண் புருடோத்தமம் 30. திருவண் புருடோத்தமம் 30. திருவண் புருடோத்தமம் 30. திருவண் புருடோத்தமம் 30. திருவண் புருடோத்தமம்
Product Code: 30. திருவண் புருடோத்தமம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                    திருவண் புருடோத்தமம்                                                                                                                                                                                                                                                                                                                   திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருநாங்கூருக்கு வடக்குப் பகுதியில் உள்ள இத்தலம் புருஷோத்தமன் கோயில் என்று வழங்கப்படுகிறது.

மூலவர் : புருஷோத்தமன்  

தாயார் : புருஷோத்தம நாயகி

தீர்த்தம் : திருப்பாற்கடல் தீர்த்தம்

விமானம் : ஸஞ்ஜீவிவிக்ரஹ விமானம்.

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: இங்கு மூலவர் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் குழந்தைக்கு வரும் துன்பத்தைத் தாய்தந்தை போக்குவர். அதுபோல் தம்மிடம் தோன்றிய பிரம்மா முதலிய தேவாதி தேவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் போக்கித் தம்மை எதிர்ப்பவர்களை அழித்து உலகத்தைக் காக்கும் புருடோத்தமன் இவனே வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட தன் அருளை வாரி வழங்குதலால் வண்புருடோத்தமன் என்ற பெயர் இந்தப் பெருமாளுக்கு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் புருஷோத்தமன் என்ற பெயரில் பெருமாள் எழுந்தருளியிருப்பது இங்குமட்டும்தான். திருநாங்கூர் பதிகளில் மிக முக்கியமான திவ்ய தேசம் இது. உத்ஸவ பெருமாளின் திருவுருவம் மிக அழகாக காணப்படுகிறது.

அயோத்தி எம்பெருமான் - கடலடைத்த பெருமாள் இங்கு பதினொரு பேரில் ஒருவராக எழுந்தருளினார். அயோத்தி ராமன் புருடோத்தமனல்லவா அவனே இத்தலத்தில் எழுந்தருளியுள்ள புருடோத்தமன் என்று திருமங்கையாழ்வார் கூறுகிறார். இத்தலத்தின் தாயார் புருடோத்தம நாயகி வண்புருடோத்தமனைப் பார்க்க திருப்பாற்கடலை வரவழைத்துக் குழந்தைக்குப் பாலைப் புகட்டி உபமன்யுவுக்கும் வியாக்ரபாத முனிவருக்கும் இத்தலத்தில் பெருமாள் காட்சி அளித்து அனுக்கிரகம் செய்ததாக இத்தலத்து வரலாற்றில் கூறப்படுகிறது.ஒவ்வொரு தைஅமாவாசைக்கு அடுத்த நாள் கருடசேவை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருமணிமாடக் கோயில் திருஅரிய விண்ணகரம் திருத்தெற்றியம்பலம் திருவண்புருடோத்தமம் இந்நான்கும் திருநாங்கூரின் ஒரே தெருவின் பக்கங்களில் உள்ளன.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : சீர்காழி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×