28. திருக்காழிச்சீராம விண்ணகரம்
	


		
 
	
 
5:32:08 PM         Saturday, February 29, 2020

28. திருக்காழிச்சீராம விண்ணகரம்

28. திருக்காழிச்சீராம விண்ணகரம்
28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 28. திருக்காழிச்சீராம விண்ணகரம்
Product Code: 28. திருக்காழிச்சீராம விண்ணகரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                     திருக்காழிச்சீராம விண்ணகரம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 1கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் பேருந்துகள் இக்கோயிலின் வாயிலிலேயே நிற்கின்றது.

மூலவர் : திரிவிக்கிரமன்  தாடாளன் உலகளந்த திருவுருவம்

உத்ஸவர் : திரிவிக்ரம நாராயணன்

 தாயார் : லோகநாயகி  மட்டவிழ்குழலி
 
 தீர்த்தம் : சக்ர தீர்த்தம் சங்க புஷ்கரிணி

விமானம் : புஷ்கலாவர்த்த விமானம்

ப்ரத்யக்ஷம் : அஷ்டகோண மஹரிஷி

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: மூலவர் உலகளந்த உருவத்தோடு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். ஸ்ரீராமர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளதால் சீராம விண்ணகரம் எனப் பெயராயிற்று. இத்திருத்தலம் இருந்த பகுதிக்கு பாலீக வனம் என்றும் சேத்திரத்திற்கு "உத்தமசேத்திரம்" என்றும் உரோமசர் என்னும் மகாமுனிவர் இங்குத் தவமியற்றியதாகவும் முனிவரின் வேண்டுகோளுக்கு இசைந்து இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் திரிவிக்கிரம அவதாரம் எடுத்து தன் கால்களால் உலகம் அளந்தமையால் இப்பெருமாளுக்கு தாள்  ஆளம் ஸ்ரீ தாளாளன் - தாடாளன் என்ற திருநாமம் ஆயிற்று.

108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களைத் திருமங்கையாழ்வார் விண்ணகரம் என்று குறிக்கின்றார். விண்ணகரம் என்றால் விண்ணில் உள்ள பரமபதத்திற்குச் சமமான தலம் என்பது பொருள் . அந்த விண் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். மணவாள மாமுனிகள் இரண்டுமுறை இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார். ஒரு சமயம் இததலம் அழிவுற்றபோது உற்சவப் பெருமாளை மட்டும் ஒரு மூதாட்டி தவிட்டுப் பானையில் வைத்து காத்து தினமும் திருவாராதனம் முடித்து மீண்டும் தவிட்டுப் பானைக்குள்ளேயே வைத்து வந்தாள். திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம் அந்த மூதாட்டியின் கனவில் வந்த எம்பெருமான் தன்னை திருமங்கையிடம் ஒப்புவிக்குமாறு கூற அவ்விதமே திருமங்கையாழ்வாரிடம் கொடுக்க அவர் இங்கே பிரதிஷ்டை செய்தார்  என்பர். இங்கு செல்வ தெய்வநாயகன் சந்நிதி உள்ளது பிரம்மாவிற்கு ஆயுளைப்பற்றி கர்வம் ஏற்பட்டபொழுது ரோமச முனிவர் உன் ஆயுசும் என் ரோமமும் சமம் என்று கூறி அவர் கர்வத்தை அடக்கினார்.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : சீர்காழி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×