27. திருக்காவளம் பாடி
	


		
 
	
 
6:25:55 PM         Saturday, February 29, 2020

27. திருக்காவளம் பாடி

27. திருக்காவளம் பாடி
27. திருக்காவளம் பாடி 27. திருக்காவளம் பாடி 27. திருக்காவளம் பாடி 27. திருக்காவளம் பாடி 27. திருக்காவளம் பாடி 27. திருக்காவளம் பாடி 27. திருக்காவளம் பாடி
Product Code: 27. திருக்காவளம் பாடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                    திருக்காவளம் பாடி

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 8 கி.மீ தொலையில் உள்ளது. சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது திருவெண்காட்டிலிருந்தும் பஸ்ஸில் வந்து 1 கி.மீ. நடைபயணத்தின் மூலம் இத்தலத்தை அடையலாம். திருநாங்கூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் திருநகரியிலிருந்து நடக்கும் தொலைவிலேயே உள்ளது.

மூலவர் : கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்)

தாயார் : மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்.

தீர்த்தம் : தடமலர்ப்பொய்கை

விமானம் : சுவயம்பு விமானம்

ப்ரத்யக்ஷம் : சேனைத் தலைவர் ருத்ரன்.

மங்களாசாசனம்: 10 பாசுரங்கள்

இங்கு மூலவர் ருக்மணி ஸத்யபாமாவுடன் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சியளிக்கிறார்.

திருத்தல புராணம் : கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனை அழித்தான். இந்திரன் வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்களுக்கே மீட்டுக் கொடுததான். வெகுநாளைக்குப் பின்பு இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரைச் சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் இம்மலரைக் கேட்டான் இந்திரன் கொடுக்க மறுத்தான். எனவே சினங்கொண்ட கண்ணன் அவனோடு போர் செய்து அவனது காவளத்தை அளித்தான் 11 எம்பெருமான்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான் இருக்க காவளம் போன்ற சோலையை தேடினான். அந்த இடம் இக்காவளம்பாடி என்பதை அறிந்து இத்தலத்தில் கண்ணன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். துவாரகாபுரியிலிருந்து கண்ணபிரான் சத்தியபாமாவுடன் இங்கு வந்ததால் இது துவாரகைக்குச் சமமான தலமாகிறது.

இங்கு வசதிகள் ஒன்றும் இல்லை. அர்ச்சகருடன் சேவைக்கு செல்ல வேண்டும். திருமங்கையாழ்வார் அன்னதான கைங்கர்யம் செய்த மங்கை மடமும் அவரின் அவதாரஸ்தலமான திருக்குறையலூரும் அருகே உள்ளது.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : மயிலாடுதுறை

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×