26. திருஇந்தளூர்
	


		
 
	
 
6:59:51 PM         Saturday, February 29, 2020

26. திருஇந்தளூர்

26. திருஇந்தளூர்
26. திருஇந்தளூர் 26. திருஇந்தளூர் 26. திருஇந்தளூர் 26. திருஇந்தளூர் 26. திருஇந்தளூர் 26. திருஇந்தளூர் 26. திருஇந்தளூர் 26. திருஇந்தளூர்
Product Code: 26. திருஇந்தளூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                               திருஇந்தளூர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை என்ற மாயவரம் நகர எல்லைக்குள்ளேயே இருக்கின்றது. மயிலாடுதுறை ரயில்நிலையத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலவர் : பரிமள ரங்கநாதர், சுகந்தவன நாதன்

தாயார் : பரிமள ரங்கநாயகி, சந்திர சாப விமோசனவல்லி, புண்டரீக வல்லி

தீர்த்தம் : இந்து புஷ்கரிணி

விமானம் : வேதசக்ர விமானம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 11 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் : மூலவர் நான்கு புஜங்களுடன் ஆதிசேடன் மீது வீரசயனமாக கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். மரகதக் கல்லால் ஆனவர் என்பர். இங்குள்ள பெருமாளின் தலைமாட்டில் காவிரித் தாயும் சூரியனும் கால் மாட்டில் கங்கைத் தாயும் சந்திரனும் அமர்ந்திருக்கின்றனர். சூரியன் சந்திரன் சக்கரத்தாழ்வார்களுக்கு தனிச் சந்நிதிகள் உள்ளன. தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்தை நீக்குவதற்காக சந்திரன் இந்த தலத்தில் பெருமாளைக் குறித்து தவஞ்செய்ய தோஷம் நீங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சந்திரனுக்குத் தோஷம் நீக்கப்பட்ட இத்தலம் இந்தளூர் எனப் பெயர் பெற்றது. இந்த இந்தளூர்ப் பெருமாளின் முன்னை வண்ணம் பாலின் வண்ணம் என்றும் கிரேதாயுகத்தில் பகவான் பால் நிறத்தவனாய் இருந்திருக்கிறான் என்றும் பின்னை வண்ணம் எண்ணுங்கால் பொன்னின் வண்ணன் என்றும் திரேதாயுகத்தில் பகவான் பொன் நிறமாகப் பொலிந்து பின்னர் மணியின் வண்ணம் என்றும் சொல்கிறார். துவாபரயுகத்தில் நீலமேனியன் இப்படி மாறுப்பட்ட வண்ணம் காட்டி மயக்குகிறாயே என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த ஸ்தலம் குழந்தைப் பேறுக்கு பிரார்த்தனை ஸ்தலமாக இருக்கிறது.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : மயிலாடுதுறை

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×