25. திருத்தலைச் சங்க நாண்மதியம்
	


		
 
	
 
5:37:57 PM         Saturday, February 29, 2020

25. திருத்தலைச் சங்க நாண்மதியம்

25. திருத்தலைச் சங்க நாண்மதியம்
25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம் 25. திருத்தலைச் சங்க நாண்மதியம்
Product Code: 25. திருத்தலைச் சங்க நாண்மதியம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                          திருத்தலைச் சங்க நாண்மதியம் (தலைசங்காடு)   

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழியிலிருந்து ஆக்கூர் வழியாக பஸ்ஸில் தலைச்சங்காடு நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து மண்சாலை வழியாக 1 கி.மீ. தொலைவில் வயலுக்கு நடுவே இக்கோயில் உள்ளது.

மூலவர் : நாண்மதியப் பெருமாள், வெண்சுடர்ப் பெருமாள்

தாயார் : தலைசங்க நாச்சியார்

தீர்த்தம் : சந்தர புஷ்கரிணி

விமானம் : வேதசக்ர விமானம்

மங்களாசாசனம் :  திருமங்கையாழ்வார் - 2 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் : இங்குள்ள ஆண்டாள் விக்கிரகம் பேரழகு பெற்றதாகும். இரவில் நமக்கு ஒளிதரும் நாண்மதியாகிய சந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் தீர்ந்தமையால் இங்குள்ள பெருமாளுக்கு நாண்மதியப் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார்.

 இத்தலத்தில் எம்பெருமானுக்கு அமைந்துள்ள பெயர் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். எம்பெருமானின் திருமுகத்தை தண் (குளிர்) என்னும் சந்திர ஒளிக்கு உவமானமாக ஆழ்வார்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். இத்தலத்தில் பெருமானின் கையில் உள்ள சங்கு மிகவும் பேரழகு வாய்ந்தவை. வெண்சுடர்ப் பெருமாள் (மூலவர் நாண்மதியாராகிறார் உற்சவர் வெண்சுடர் பெருமாள் ஆகிறார்) நீளா தேவியுடனும் நிலமகளுடனும் பேரழகுடன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள செப்புச் சிலைகள் மிக்க கலை நுணுக்கம் வாய்ந்தவை. எம்பெருமானை முழுமதியாகவும் உதிக்கின்ற செங்கதிராகவும் ஒரு சேரக் காண்கிறார் ஆழ்வார். பகவான் அமுதைப் பொழியும் வெண்ணிலவு போலக் கருணையைப் பொழிபவன். செங்கதிரோ எல்லா உயிர்களும் இயங்க ஆராத சக்தியாகிறான். சங்கருணாகேஸ்வரர் கோயில் அருகில் உள்ளது.

தனிச்சிறப்பு:
 
இத்தலத்தில் பெருமாளின் கையில் உள்ள சங்கு மிகுந்த விலை உயர்ந்ததாகும். இங்கு  ஆண்டாளின் விக்ரகம் மிக அழகாக உள்ளது.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : சீர்காழி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×