23. திருவழுந்தூர்
	


		
 
	
 
7:05:35 PM         Saturday, February 29, 2020

23. திருவழுந்தூர்

23. திருவழுந்தூர்
23. திருவழுந்தூர் 23. திருவழுந்தூர் 23. திருவழுந்தூர் 23. திருவழுந்தூர் 23. திருவழுந்தூர் 23. திருவழுந்தூர் 23. திருவழுந்தூர் 23. திருவழுந்தூர்
Product Code: 23. திருவழுந்தூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                         திருவழுந்தூர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். மேலும் குடந்தையிலிருந்து மாயவரம் செல்லும் பேருந்தில் சென்று இத்தலத்தை அடையலாம். மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இரண்டாவது இரயில் நிலையத்தில் உள்ள இத்தலம் தற்போது தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.

மூலவர். : தேவாதிராஜன் 

தாயார் : செங்கமலவல்லி

உற்சவர் : ஆமருவியப்பனுடன் உபயநாச்சியார்

தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி, காவேரி

விமானம் : கருட விமானம்.

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 45 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: இவ்வூரை 'பஞ்ச கிருஷ்ண தீர்த்தம்' என்று அழைப்பார்கள் கம்பராமாயணத்தை இயற்றிய கம்பர் பிறந்தது இவ்வூரே. மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார் மூலவருக்கு இடதுபுறம் கருடாழ்வாரும் வலதுபுறம் சேவிக்கும் காட்சியையும் இங்குக் காணலாம். இடது கையில் ஊன்றிய கதை இடதுபுறம் காவேரித்தாய் மண்டியிட்டு சேவிக்கிறான்.

பிரகலாதன் நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயந்து பெருமானின் சொந்த சொரூபத்தைக் காட்ட வேண்டுமென்று வேண்டிய போது சினம் தணிந்து சிங்கபெருமாள் காட்சி தந்தும் பிரகலாதனின் அச்சம் குறையாதிருக்க இத்தலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாகவும் காட்சி தந்தார். தேவேந்திரன் ஒரு சமயம் கருடனை அழைத்து ஒரு வைர முடியினையும் ஒரு விமானத்தையும் தந்து அவைகள் எந்தப் பெருமாளுக்கு உகந்தவையோ அவரிடம் சேர்ப்பிக்குமாறு வேண்ட திருநாராயணபுரத்தில் (மைசூர்) உள்ள பெருமாளுக்கு வைரமுடியினையும் இந்த தேவாதிராஜனுக்கு விமானத்தையும் அளித்தார். அதனால் இப்பெருமாள் கருடனைத் தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார்.

 கோபுரத்தின் உட்புறம் கம்பனும் அவர் மனைவியும் சிலை வடிவில் நிற்கின்றனர் எதிரில் தெளிந்த நீருடன் பெரிய புஷ்கரிணி இருந்தது ஆனால் தற்போது இல்லை. இது கம்பன் அவதார ஸ்தலம். கோயிலுக்கு தென்மேற்கே கம்பன் மேடு என்ற இடத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம் செய்த பெருமாள் இவர்.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : குத்தாலம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×