22. திருவெள்ளியங்குடி
	


		
 
	
 
5:53:46 PM         Saturday, February 29, 2020

22. திருவெள்ளியங்குடி

22. திருவெள்ளியங்குடி
22. திருவெள்ளியங்குடி 22. திருவெள்ளியங்குடி 22. திருவெள்ளியங்குடி 22. திருவெள்ளியங்குடி 22. திருவெள்ளியங்குடி 22. திருவெள்ளியங்குடி 22. திருவெள்ளியங்குடி
Product Code: 22. திருவெள்ளியங்குடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                      திருவெள்ளியங்குடி

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் வழியில் சேங்கனூர் சந்திப்பில் இறங்கி அங்கிருந்து மண்பாதை வழியாக சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது. தற்போது கும்பகோணத்திலிருந்து கோயிலுக்கு அருகில் பஸ்கள் செல்கின்றன.

மூலவர். : கோலவில்லி ராமன்

உத்ஸவர் : சுருங்கார சுந்தரன்
 
தாயார் : மரகதவல்லி 

தீர்த்தம் : சுக்ர,  பிரம்ம, இந்திர, பரசுராம் தீர்த்தங்கள்

ஸ்தல வ்ருக்ஷம் : கதலீ (வாழை)

விமானம் : புஷ்கலாவர்த்தக விமானம்.

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
 
திருத்தலச் சிறப்புகள் : மூலவருக்கு இருபுறமும் மார்க்கண்டேயரும் ஸ்ரீதேவியும் அமர்ந்துள்ளனர். 108 திவ்ய தேசங்களிலேயே இங்குதான் கருடாழ்வாருக்கு நான்கு கரங்கள் உள்ளன அதில் இரண்டில் சங்கு சக்கரங்கள் ஏந்தி உள்ளார். புஜங்கசயனம் கிழக்கே திருமுக மண்டலம் மிக அழகு வாய்ந்தவர்.

தவமிருந்த வெள்ளியாருக்கு (சுக்கிரனுக்கு) பெருமாள் அருள் பாலித்தார் என்பதால் இத்தலம் திருவெள்ளியங்குடி எனப் பெயர் பெற்றது. ஒரு காலத்தில் மயன் மனம் வருந்திய நிலையில் இருந்தான். கலியுகத்தில் தனக்குக் காட்சி கொடுப்பதாக திருமால் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வர மயன் அவ்விதமே இத்தலத்தில் கடுந்தவமியற்ற இறைவன் அவனுக்குச் சங்கு சக்ரதாரியாக மாகவிஷ்ணு கோலத்தில் காட்சியளித்தார். ஆனால் தனக்கு இந்தவிதமான திருக்கோலக் காட்சி வேண்டாமென்றும் இராமாவதாரத் திருக்கோலத்தையே தான் தரிசிக்க விரும்புவதாய் மயன் கூற தம் கரத்திலிருந்து சங்கு சக்கரங்களைக் கருடனுக்குக் கொடுத்துவிட்டு வில் அம்புகளுடன் அலங்காரக் கோலத்துடன் கோலவில்லி ராமனாக காட்சி அளித்தார்.

இக்கோயிலில் உள்ள மூலவர் அழகு வாய்ந்தவராகவும் உள்ளார் இக்கோயில் மிகவும் சுத்தமாக உள்ள கோயில். பெரியவாச்சான் பிள்ளையினுடைய அவதாரஸ்தலமாகும்.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : கும்பகோணம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×