21. திருநந்திபுர விண்ணகரம்
	


		
 
	
 
6:36:35 PM         Saturday, February 29, 2020

21. திருநந்திபுர விண்ணகரம்

21. திருநந்திபுர விண்ணகரம்
21. திருநந்திபுர விண்ணகரம் 21. திருநந்திபுர விண்ணகரம் 21. திருநந்திபுர விண்ணகரம் 21. திருநந்திபுர விண்ணகரம் 21. திருநந்திபுர விண்ணகரம் 21. திருநந்திபுர விண்ணகரம் 21. திருநந்திபுர விண்ணகரம் 21. திருநந்திபுர விண்ணகரம்
Product Code: 21. திருநந்திபுர விண்ணகரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
 

                                                                                        21. திருநந்திபுர விண்ணகரம்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்குத் தென்மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம் வழியாக நாதன் கோயிலுக்கு மினி பஸ் செல்கிறது.

மூலவர் : ஜகந்நாதன்  நாதநாதன், விண்ணகரப் பெருமான், யோக ஸ்ரீனிவாசன்

தாயார் : செண்பகவல்லி

தீர்த்தம் : நந்தி தீர்த்த புஷ்கரிணி

விமானம் : மந்தார விமானம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: தக்ஷ்ண ஜகந்நாதம் என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. மூலவர் வீற்றிருந்த கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். உற்சவரின் பெயரில் இவ்வுர் நாதன் கோயில் என வழங்கப்படுகின்றது.

இத்தலம் நந்திவர்மன் ஏற்படுத்திய ஊர் என்றும் அவன் கட்டிய கோயில் என்றும் இதனைக் கூறுவர். நந்தி பணி செய்த நகர் என்றார் திருமங்கையாழ்வார். இதே காரணத்துக்காக புஷ்கரிணிக்கும் நந்தி புஷ்கரிணி என்றே பெயர். சந்நிதியின் இடது பக்கச் சுவற்றில் அதிகார நந்தி இருக்கிறார். நந்தி இவ்விடத்தில் தவம் செய்து சாபவிமோசனம் பெற்ற ஸ்தலமாதலால் நந்திபுரம் என்றும் பகவானுக்கு நந்திநாதன் என்றும் பெயர் உண்டாயிற்று.  பாவ விமோச்சனத்துக்கு தை அம்மாவாசையன்று இங்கே ஸ்நானம் செய்யலாம் என்று நம்பிக்கை.
  
பாற்கடலில் எம்பெருமாளின் பாதார விந்தங்களை பற்றிக் கொண்டிருந்த பிராட்டிக்கு எம்பெருமானின் திருமார்பிலேயே எப்போதும் நித்திய வாசம் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கொண்டும் செண்பகாரணயத்தில் தவம் செய்யலானாள். தேவியின் பிரிவால் வாடிய எம்பெருமான் பிராட்டிக்குக் காட்சி கொடுத்துத் திருமார்பில் திருமகளை ஏற்றுக்கொண்டார். பெருமாள் கிழக்கு நோக்கித் தவஞ்செய்தவளை எதிர்கொண்டு ஏற்றுக்கொண்டதால் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். ஆதலால் இப்பெருமாளுக்கு யோகஸ்ரீனிவாசன் எனப் பெயராயிற்று சிபி மன்னர் புறாவிற்காக தன்னையே அளித்த திருத்தலம். நாதன் கோயிலில் அவர் உருவம் வலது பக்க சுவரில் உள்ளது.

 குழந்தைப் பேறுக்காக ஐப்பசி சுகலபசத்தில் தாயாருக்குத் திருமஞ்சனைச் செய்கிறார்கள். காலை 8.30 மணி முதல் 11.30 வரையும் மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரையும் சேவிக்க முடியும். ஏனெனில் அர்ச்சகர் மேலும் பல கோயில்களுக்குச் சென்றுவிடுவதனால் மாலை விளக்கேற்றும் நேரத்தில் செல்வது நல்லது.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : கும்பகோணம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×