20. திருத்தஞ்சை மாமணிக்கோயில்
	


		
 
	
 
7:11:20 PM         Saturday, February 29, 2020

20. திருத்தஞ்சை மாமணிக்கோயில்

20. திருத்தஞ்சை மாமணிக்கோயில்
20. திருத்தஞ்சை மாமணிக்கோயில் 20. திருத்தஞ்சை மாமணிக்கோயில் 20. திருத்தஞ்சை மாமணிக்கோயில் 20. திருத்தஞ்சை மாமணிக்கோயில் 20. திருத்தஞ்சை மாமணிக்கோயில் 20. திருத்தஞ்சை மாமணிக்கோயில் 20. திருத்தஞ்சை மாமணிக்கோயில் 20. திருத்தஞ்சை மாமணிக்கோயில்
Product Code: 20. திருத்தஞ்சை மாமணிக்கோயில்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                     திருத்தஞ்சை மாமணிக்கோயில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சாவூர் மாநகரின் வடக்கே 4 கி.மீ தொலைவில் உள்ள வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்தலம். கும்பகோணம் - தஞ்சாவூர் பஸ்ஸில் வரும்போது தஞ்சை ஊர் எல்லையில் வெண்ணாற்றங்கரையில் இறங்கிக் கொள்ளலாம். தஞ்சையிலிருந்தும் பஸ்ஸில் வரலாம். மூன்று திருத்தலங்கள் அருகருகே அமைந்து ஒரே திவ்யதேசப் பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றன.

1. தஞ்சை மாமணிக்கோயில்

மூலவர் : நீலமேகப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம்  கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் : செங்கமலவல்லி

தீர்த்தம் : அம்ருத தீர்த்தம் கன்னிகாபுஷ்கரிணி வெண்ணாறு.

விமானம் : ஸௌந்தர்ய விமானம்.

உற்சவர் : ஸ்ரீமந்நாராயணர்

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் -3 பாசுரங்கள், பூதத்தாழ்வார் - 1பாசுரம், நம்மாழ்வார் - 1 பாசுரம்
                                   மொத்தம் - 5 பாசுரங்கள்

2. மணிக்குன்றம்

மூலவர் : மணக்குன்றம. வீற்றிருந்த திருக்கோலம்  கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் : அம்புஜவல்லி

தீர்த்தம் : ஸ்ரீராமதீர்த்தம்

விமானம் : மணிக்கூட விமானம்.

3. தஞ்சையாளி நகர்

மூலவர் : நரசிம்மன்  வீற்றிருந்த திருக்கோலம்   கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் : தஞ்சைநாயகி

தீர்த்தம் : சூர்ய புஷ்கரிணி ஸ்ரீராமதீர்த்தம்

விமானம் : வேதஸுந்தர விமானம்.

திருத்தலச் சிறப்புகள் : வெண்ணாற்றங்கரையில் இப்போது மூன்று கோவில்கள் உள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று பெருமாள்கள் எழுந்தருளியுள்ளனர். மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரு திவ்ய தேசமாகவே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

என் அண்ணலாகிய எம்பிரானின் நாமமாகிய நாராயணா என்னும் நாமமே நான் கடைத்தேறக் கண்டுகொண்ட நாமம் என்று திருமங்கை ஆழ்வரால் பாடப்பட்ட திருத்தலம் இது.

திருத்தலப் புராணம் : கிரேதாயுகத்தில் தஞ்சகன் தண்டகன் கஜமுகன் என்னும் ஆசுரர்கள் சாகவரம் பெற்று செருக்குற்றுத் திரிந்தனர். அப்போது பராசரர் என்னும் முனிவர் செய்த தவத்தை அழித்தனர். எனவே பராசரர் ஹரியை அழைக்கத் திருமால் சக்ராயுதத்தால் தஞ்சகனை அழிக்க தன் பெயரிலேயெ அந்த நகரம் திகழ வேண்டும் என்று தஞ்சகன் கேட்க அதுவே தஞ்சாவூர் ஆனது. இத்திருத்தலத்திற்குப் பராசரசேத்திரம் வம்புலாஞ்சோலை அழகாபுரி கருடாபுரி சமீவனம் தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு. பகவான் தஞ்சக யானையை பிளக்க நரசிம்மாவதாரம் எடுத்து நகங்களால் குத்தி கிழித்தபோது தஞ்சகன் வேண்டிக் கொண்டபடி நரசிம்ம உருவத்தோடு சேவை சாதிப்பதால் தஞ்சாபுரி என்ற பெயர் உண்டாயிற்று. தஞ்சையை பார்த்தபடி விக்ரகஹங்கள் அமைந்திருப்பதால் தஞ்சையை காத்தருளும் தெய்வம் என வழங்கப்பட்டது.

அருகில் சாளக்கிராமத்தில் செய்யப்பட்டுள்ள கோதண்டராமர் கோயில் உள்ளது.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : தஞ்சாவூர்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×