19. திருநாகை
	


		
 
	
 
6:01:14 PM         Saturday, February 29, 2020

19. திருநாகை

19. திருநாகை
19. திருநாகை 19. திருநாகை 19. திருநாகை 19. திருநாகை
Product Code: 19. திருநாகை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                            திருநாகை

திருத்தல இருப்பிடம் :  இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரான நாகப்பட்டினம் ரயில்நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் இந்தக் கோயிலின் அருகாமையிலேயே செல்கின்றன.மூலவர் : நீலமேகப் பெருமாள்

உத்ஸவர் : சௌந்தர்யராஜன்
 
தாயார் : சௌந்தர்ய வல்லி, கஜலெட்சுமி

தீர்த்தம் : ஸாரபுஷ்கரிணி

விமானம் : ஸௌந்தர்ய விமானம்

மங்களாசாசனம்: 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: இங்கு மூலவர் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். நாகராஜனுக்குப் பிரத்தியக்ஷ்ம் ஆன பதியாதலால் நாகை என நாமம் பெற்றது. இக்கோவிலுக்குத் திருப்பணி செய்தவர்களில் முதலிடம் வகித்தவர்கள் நாகர்கள்.
  
இங்கு வீற்றிருந்த கோலத்தில் கோவிந்தராஜரும் சயனக் கோலத்தில் ரங்கநாதனும் காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் காட்சி அளித்திருக்கிறார். ரங்கநாதர் சந்நிதியில் அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கலச் சிலை இருக்கிறது. ஒரு கரம் பிரகலாதனை ஆசீர்வாதம் செய்வது போலவும் இன்னொரு கரம் அபய முத்திரையாகவும் மற்ற எல்லாக் கைகளாலும் இரண்யனை வதம் செய்வது போலவும் காட்சி தருகிறார். சந்தான கிருஷ்ணனின் சிலையும் சந்நிதியில் உள்ளது. தாயார் ஆண்டாள் சந்நிதிகளுக்கு தவஜஸ்தம்பக்கள் தனியாக இருப்பது சிறப்பு.

108-19 இத்தலத்தின் கோபுரம் 15 விமானங்களைக் கொண்டு மிக உயரமாக கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது. இங்கு மூலவர் சந்நிதி 5 கலசங்களை கொண்டுள்ளது.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : நாகப்பட்டினம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×