17. திருக்கண்ணபுரம்
	


		
 
	
 
6:06:09 PM         Saturday, February 29, 2020

17. திருக்கண்ணபுரம்

17. திருக்கண்ணபுரம்
17. திருக்கண்ணபுரம் 17. திருக்கண்ணபுரம் 17. திருக்கண்ணபுரம் 17. திருக்கண்ணபுரம் 17. திருக்கண்ணபுரம் 17. திருக்கண்ணபுரம் 17. திருக்கண்ணபுரம்
Product Code: 17. திருக்கண்ணபுரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                       திருக்கண்ணபுரம்                                                                                              

திருத்தல இருப்பிடம் :  இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து கோயில் வாசல் வரை பேருந்து செல்கிறது.

மூலவர் : நீலமேகப் பெருமாள், சௌரிராஜன்

உத்ஸவர் : சௌரிராஜப்பெருமாள்

தாயார் : கண்ணபுரநாயகி, ஆண்டாள் பத்மினி

தீர்த்தம் : நித்ய புஷ்கரிணி

விமானம் : உத்பலாவதக் விமானம்

மங்களாசாசனம்: பெரியாழ்வார் - 1பாசுரம், ஆண்டாள் - 1 பாசுரம், குலசேகரப்பெருமாள் - 11 பாசுரங்கள்
                                  நம்மாழ்வார் - 11 பாசுரங்கள், திருமங்கையாழ்வார் - 104 பாசுரங்கள்
                                 மொத்தம்  128 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் : மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சி தருகிறார். இத்தலம் கிருஷ்ணாரண்யம் பஞ்ச கிருஷ்ண சேத்திரம் ஸப்த புண்ணிய சேத்திரம் என்றும் வழங்கப்படுகிறது. அபயஹஸ்தத்துக்குப் பதிலாக வரதஹஸ்தம் விளங்குகின்றது. ப்ரயோக சக்ரம் உபயநாச்சியாருக்கு அப்பால் இடதுபுறம் கிரீடத்துடன் ஆண்டாளும் வலதுபுறம் பெருமாள் மணந்துகொண்ட பத்மாவதியின் தாயார் என்ற செம்படவ அரசகுமாரியும் உள்ளனர்.

  தலம்  வனம் நதி கடல் நகரம் தீர்த்தம் விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள தலமாகும். இந்த அமைப்பில் உள்ள இடத்தில் அஷ்டாட்சர மந்திரம் சித்திக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் பெருமாள் திருவஷ்டாட்சர எழுத்துக்களின் மொத்தச் சொரூபமாக இருக்கின்றார். விபீடணன் பெருமாளிடம் நீ கிடந்த பேரழகைத் திருவரங்கத்திலே கண்டு மகிழந்தேன். நின் நடையழகைக் காணவேண்டும் என்று கேட்க கண்ணபுரத்தில் காட்டுவோம் வாவென விபீடணனுக்கு நடையழகு இங்கு காட்டியதாக ஐதீகம். 108 திவ்ய தேசங்களில் "கீழை வீடு" என்று குறிக்கப்படுவது இத்தலம்தான். திருமங்கை ஆழ்வார் திருமந்திர உபதேசம் பெற்றது இங்குதான். கோயில் முன் உள்ள பெரிய அழகிய புஷ்கரிணி மண்டபத்தின் அருகில் உள்ளது. ஆஞ்சநேயர் சந்நிதியும் தசாவதார வண்ண சித்திரங்களும் விஷேசமாகும். இதிலிருந்து 'சௌரிராஜன்' என்று இப்பெருமாள் அழைக்கப்படுகிறார். ஸ்ரீமந்நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்த க்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால் இது ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹா மந்த்ரஸித்தி க்ஷேத்திரம் என்ற பெயர் பெற்றது.

 நன்னிலத்தில் தங்கி சேவிக்கலாம் இங்கு ஊரே வைகுந்தமாக இருப்பதால் பரமபதவாசல் கிடையாது. எட்டெழுத்து மந்திரத்தின் எழுத்துக்களின் உருவமாக கோலம் தரும்பெருமாள் உறையும் தலம்.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : திருவாரூர்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×