15. திருச்சேறை
	


		
 
	
 
4:58:52 AM         Wednesday, April 01, 2020

15. திருச்சேறை

15. திருச்சேறை
15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை 15. திருச்சேறை
Product Code: 15. திருச்சேறை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                                             திருச்சேறை                                                                                                      

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் குடந்தைக்குத் தென்கிழக்கில் 11 கி.மீ தொலைவிலும் நாச்சியார் கோயிலிலிருந்து 4 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த இடத்திற்கு பேருந்துகள் மூலம் செல்லலாம். குடவாசல் என்னும் டவுன் மிகவும் அருகில் உள்ளது.

மூலவர் : சாரநாதன் 

உத்ஸவர் : மாமதலைப் பிரான் தவழும் திருக்கோலமூர்த்தி

தாயார் : சாரநாயகி (சாரநாச்சியார்)

தீர்த்தம் : ஸாரப்புஷ்கரிணி

விமானம் : ஸார விமானம்

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 13 பாசுரங்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                             திருத்தலச் சிறப்புகள் : இங்கு மூலவர் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். பெருமாள் நாச்சியார் விமானம் தீர்த்தம் நிலம் என்ற ஐந்து சாரமுள்ள பொருள்கள் ஒரு சேர இணைந்திருப்பதால் இந்தத் திவ்ய தேசம் பஞ்சஸார க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

ஓரு காலத்தில் விந்திய மலையின் அடிவாரத்தில் கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி கோதாவரி ஆகிய நதிகள் கூடி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த கந்தர்வன் வணங்க இந்த வணக்கம் யாருக்கு என்று நதிகள் கேட்க உங்களில் யார் பெரியவரோ அவருக்கே இந்த வணக்கம் என்று கந்தர்வன் கூறினார். மற்றவர்கள் விலக காவேரியும் கங்கையும் தான்தான் பெரியவர் என்று போட்டிப் போட்டுக் கொண்டனர். அப்போது பிரம்மன் திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுத்து கங்கை தான் பெரியவள் என்றார். எனவே காவேரி ஸாரபுஷ்கரிணியில் தவம் செய்து தைப்பூசதன்று பெருமாள் சிறு குழந்தையாக அவள் முன் தோன்றி அருள் புரிந்து காவேரிக்கு மேன்மை அளித்தார். பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி மகாலட்சுமி ஸார நாயகி ஆகிய ஐந்து நாச்சியார்களோடு சேவை சாதிக்கிறார்.

 புஷ்கரிணிக்கு மேற்குக் கரையில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இவர் மிகவும் வரப்ரஸாதி பெற்றவர் என்று வரலாறு கூறுகிறது. இந்த புஷ்கரிணியில் நீராடி பெருமாள் தாயாரை வணங்கினால் எல்லா அபீஷ்டங்களும் நிறைவேறும் என்பதாக ஐதீகம். நரசிம்மா ஸ்ரீநிவாசர் மணவாள மாமுனிகளுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. ஈசான்யத்தில் செந்நெறியப்பர் என்ற பெயரில் சாரபரமேச்வரர் சந்நிதியும் உள்ளது.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : கும்பகோணம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×