13. திருவிண்ணகர்
	


		
 
	
 
5:44:58 PM         Sunday, March 29, 2020

13. திருவிண்ணகர்

13. திருவிண்ணகர்
13. திருவிண்ணகர் 13. திருவிண்ணகர் 13. திருவிண்ணகர் 13. திருவிண்ணகர் 13. திருவிண்ணகர் 13. திருவிண்ணகர் 13. திருவிண்ணகர் 13. திருவிண்ணகர்
Product Code: 13. திருவிண்ணகர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோயில்)                                                                                                                                              
 
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் குடந்தையிலிருந்து கிழக்கே 6 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம் கும்பகோணம் திருநாகேஸ்வரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது
 
மூலவர் : ஒப்பிலியப்பன்

தாயார் : பூமிதேவி (பூமி நாச்சியார்)

தீர்த்தம் : அஹோராத்ர புஷ்கரிணி ஆர்த்தி புஷ்கரிணி

விமானம் : விஷ்ணு விமானம் சுதானந்தா விமானம்.

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 34 பாசுரங்கள்,பேயாழ்வார் - 2 பாசுரங்கள் ,நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
                                 மொத்தம் : 47 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: இத்தலத்தில் பெருமாள் ஒப்பற்றவனாக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் பூமிதேவி பெருமாளுக்கு வலதுபுறம் கீழே மண்டியிட்டு வணங்கி திருக்கோலத்தோடு சேவை சாதிக்கிறார். இடதுபுறம் மார்க்கண்டேயர் பெருமாளைச் சேவித்த வண்ணம் அமர்ந்துள்ளார்.

 ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) ஸ்ரீனிவாசன் என்ற பெயர் வெங்கடாசலபதியைப் போன்று அதே தோற்றத்துடன் நின்ற திருக்கோலம். மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்ற சரமச்லோப்பகுதி எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. கிழக்கே திருமுக மண்டலம்.

முன்பு வைகுண்டத்திலிருந்த திருமால் அடியார்கட்கு அருள்புரியும் பொருட்டுத் திருவேங்கடம் திருவரங்கம் திருப்பாற்கடல் அழகிய புஷ்பங்களில் வண்டுகள் கிளறக்கூடிய திருகடிகை திருவிண்ணகர் ஆகிய திவ்ய தேசங்களில் இளமை குன்றாது திகழ்கின்றான். என்று பேயாழ்வாரால் அருளப்பட்டது இத்திருத்தலம். மிருகண்டு மகரிஷியின் புதல்வரான மார்க்கண்டேயர் திருமகள் தனக்கு மகளாகவும் திருமால் தனக்கு மாப்பிள்ளையாகவும் வரவேண்டும் என்றெண்ணி நீண்ட நாள் பேராவல் கொண்டவராயிருந்தார். பக்தருக்கருளுவதற்காக இலக்குமி தேவி மழலைக் குழந்தையாகத் திருத்துழதயாய்ச் செடி அடியில் தோன்ற மார்க்கண்டேயர் அவளை தன் மகளாக வளர்க்கிறார். திருமால் கிழவேடங்கொண்டு வந்து பெண் கேட்டார் உம் மகள் சமைக்கும் உப்பிலாப் பண்டமே எமக்கு உகப்பு நான் இப்பெண்ணை மணந்து கொள்ளாமல் இவ்விடம் விட்டு நகரமாட்டேன் என்று கூறி பெருமாள் அமர்ந்து விட்டார். செய்வதறியாது திகைத்த மார்க்கண்டேயர் ஆபத்தில் உதவும் பரந்தாமனை வேண்டி நிஷ்டையில் அமர்ந்தார் பிறகு கண்களை திறந்த பொழுது பெருமாள் காட்சி தருகிறார். உப்பில்லாப் பண்டத்தை உகந்து நாம் ஏற்போம் என்று பெருமாள் சொன்னதாலேயே இன்றும் உப்பிலாப் பண்டமே பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் உப்பில்லா நிவேதனம் படைக்கப்படுகிறது. திருப்பதி போக இயலாதவர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்கிறார்கள்.


குறிப்பு : இந்த கோயிலில் பிரார்த்தனை, திருக்கல்யாண உத்ஸவம், கருடஸேவை, மூலவர் திருமஞ்சனம் முதலியன தேவஸ்தானத்துக்கு உரிய தொகை செலுத்தி செய்யலாம். ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தன்று சிரவண தீபம் எடுத்துக் குறி சொல்வது விசேஷம். பங்குனிமாதம் ப்ருஹ்மோத்ஸவமும் ஐப்பசி மாதம் கல்யாண உத்ஸவமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 


விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : கும்பகோணம்

 பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×