12. திருக்குடந்தை
	


		
 
	
 
6:37:06 PM         Sunday, March 29, 2020

12. திருக்குடந்தை

12. திருக்குடந்தை
12. திருக்குடந்தை 12. திருக்குடந்தை 12. திருக்குடந்தை 12. திருக்குடந்தை 12. திருக்குடந்தை 12. திருக்குடந்தை 12. திருக்குடந்தை 12. திருக்குடந்தை 12. திருக்குடந்தை 12. திருக்குடந்தை
Product Code: 12. திருக்குடந்தை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

12. திருக்குடந்தை (சாரங்கபாணி சுவாமி கோயில்)                                                                                                                                      

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சைத் தரணியில் இத்தலம் தனிப்பெருமை வாய்ந்தது.

மூலவர் : சாரங்கபாணி ஆராவமுதன் அப்ரயாப்தாம்ருதன் 
 
தாயார் : கோமளவள்ளி

தீர்த்தம் : ஹேம புஷ்கரிணி காவேரி நதி அரசலாறு

விமானம் : வைதீக விமானம் (வேத விமானம்)

மங்களாசாசனம்: ஸ்ரீ ஆண்டாள் - 1 பாசுரம் ,பெரியாழ்வார்-3 , திருமழிசையாழ்வார்-7,  
                                  பூதத்தாழ்வார்-2,  பேயாழ்வார்-2 , நம்மாழ்வார்-11, திருமங்கையாழ்வார்  25
                                  மொத்தம் : 51 பாசுரங்கள்

திருததலச் சிறப்புகள்: இங்கு மூலவர் ஆதிசேஷசயனம் (உத்தான சயனம்) கிழக்கே திருமுக மண்டலம் திருமழிசையாழ்வாருக்காகக் கிடந்தவாறெழுந்திருக்க முயலும் நிலையிலிருப்பதால் உத்தாநசாயீ என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் தாயார் ஒருபோதும் வெளியில் உலாவராது இறைவன் திருப்பணியிலேயே அயராது ஈடுபட்டிருப்பதால் படிதாண்டாப் பத்தினி என்ற பெயர் உண்டாயிற்று. இத்தலத்தில்தான் நாதமுனிகள் ஆரவமுதே என்று தொடங்கும் திவ்யமொழிப் பாசுரத்தைக் கேட்டு தெய்வீக உணர்வு பெற்று திவ்ய பிரபந்தத்தைத் தொடங்க ஆரம்பித்தார்.
 

இங்குள்ள பெருமாளை நதி தேவதைகள் சேவித்து நிற்கின்றன. சிருஷ்டிக்கு வேண்டிய மூலப்பொருட்கள் அமைந்துள்ள அமிர்த கும்பம் இங்குத் தங்கிவிட்டதால் அது கும்பகோணம் என்றும் குடந்தை என்றும் பெயர் பெற்றது. திருமலைக்கும் அரங்கத்திற்கும் அடுத்து இங்குதான் அதிக அளவு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். 108 திவ்யதேசங்களில் இத்தலத்திற்கு மட்டுமே உபய பிரதான திவ்யதேசம் என்ற மற்றொரு திருப்பெயரும் உண்டு. இதற்கு உபயப் பிரதான திருப்பதி என்ற பெயரும் உண்டு.
 திருப்பதி ஸ்ரீநிவாசன் மகாலெட்சுமிக்கு பயந்து இங்கே ஒளிந்திருந்ததாக இங்கே உள்ள பாதாள ஸ்ரீனிவாசன் வரலாறு கூறுகிறது.

ஹேமரிஷியின் புத்திரியாகத் தோன்றித் தவம் புரிந்த கோமளவல்லித் தாயாரை மணந்ததாக ஐதீகம். திருமழிசையாழ்வார் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அவருக்கு ப்ரத்யக்ஷ்மாய் காட்சி தந்த கோலம் கருவறையில் காணலாம்.
 
பெருமாளின் அழகிய பெரிய சித்திரைத் தேர் உலக பிரஸித்தி பெற்றது. பெருமாள் சந்நதியே தேர் சக்கரங்களுடன் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. மகேந்திர பல்லவனால் கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. மேட்டு ஸ்ரீனிவாசன் ராமர் தேசிகன் மற்றும் பல சந்நிதிகள் உள்ளன. சென்ற 1964 ஆம் வருடத்திலும் சமீபத்தில் ஜூன் 1999லும் மிகச் சிறப்பாக சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. பாடல் பெற்ற சிவஸ்தலமான ஆதிகும்பேசுவரர் கோயிலும் நாகேசுவர சுவாமி கோயிலும் அருகில் உள்ளன.

ராமேஸ்வரி கோயிலும் சக்ரபாணி கோயிலும் இவ்வூரில் உள்ளன. சாரங்கபாணி அஷ்ட புஜங்களுடன் விளங்குகின்றார். இவருக்கும் இவரது தமையனாரெனக் கருதப்படும். சாரங்கபாணிக்கும் சேர்ந்து பல உத்ஸவங்கள் நடக்கின்றன. ராமஸ்வாமி கோயிலில் ராமன் பட்டாபிஷேகக் காட்சியில் குடையின்கீழ் வெண்சாமரம் வீசிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஆஞ்சநேயர் வீணாகானம் செய்து கொண்டு ராமாயண பாராயண புஸ்தகத்துடனும் காணப்படுகிறார். கோயில் பிரகாரத்தில் சித்திர ராமாயணத்தை வண்ணத்தால் வரைந்திருக்கிறார்கள். சிருஷ்டிக்கு வேண்டிய மூலப்பொருள்கள் அமைந்துள்ள (அமிர்த கும்பம்) குடம் இங்கு தங்கியமையால் திருக்குடந்தை என்ற பெயர் பெற்றது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் வரும் மாசிமகத்தன்று வெளியூர்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இவ்வூரிலுள்ள மகாமகக்குளத்தில் நீராடிப் பயன்பெறுகிறார்கள்.

குறிப்பு: ஆழ்வார்கள் அருளிய நாலாயிரம் பாசுரங்களையும் நிலைநிறுத்திய ஸ்ரீ ஆராவமுதப் பெருமாளுக்கு ஸ்ரீமந்நாதமுனிகள் ஆராவமுதாழ்வான் என்ற திருநாமம் சாற்றியருளினார். நம்மாழ்வார் திராவிட சுருதிதர்சகர் என்ற பெயர் சாற்றியருளினார்.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : கும்பகோணம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×