09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)
	


		
 
	
 
6:42:51 PM         Sunday, March 29, 2020

09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)

09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)
Product Code: 09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                           09. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்திற்கு வடக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது. குடந்தையிலிருந்து திருவையாறு வழியாக 15 கி.மீ பஸ்ஸில் பயணம் செய்ய இந்த திவ்ய தேசத்திற்கு வரலாம்.

 
மூலவர் : கஜேந்திரவரதர்
 
தாயார் : ரமாமணிவல்லி

தீர்த்தம் : கஜேந்தர புஷ்கரிணி கபில தீர்த்தம்

விமானம் : ககநாக்ருதி விமானம்

ப்ரத்யக்ஷம் : சிறிய திருவடி கஜேந்த்ரன்.

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்

திருத்தலச் சிறப்புகள் : இத்தலம் பஞ்ச கிருஷ்ணாரண்யதலங்களுள் ஒன்று. ஆதிமூலமே என்று அழைத்தபோது கஜேந்திரனுக்கு அபயம் அளித்த ஸ்தலம். காவிரிக்கரையில் இருப்பதால் இப்பெருமானை ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்பர்.
 
  108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்குகளுக்கு காட்சி கொடுத்தது இந்த ஒரு தலத்தில் தான். ஆஞ்சநேயருக்கு பிரத்தியட்ச தலமாகும் இது 'திருக் கபித்தலம்" என்ற திருநாமம் பெற்றது. காலப்போக்கில் இது "கவித்தலம்" என்றாயிற்று. இந்த பகுதியில் ஆஞ்சநேயர் கஜேந்திரவரதன் மற்றும் சக்கரத்தாழ்வார்களுக்கு தனிச் சந்நிதிகள் உள்ளன.

திருத்தலச் சிறப்புகள் : இந்திராதயும்னன் என்னும் மன்னன் மிகச் சிறந்த விஷ்னு பக்தன் ஒருமுறை துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். வெகுநேரமாகியும் மன்னன் பக்திக்குடியலை விட்டு வரவில்லை சினங்கொண்டு முனிவர் நீ யானையாக மாறி ஒரு முதலை உன் காலைக் கவ்வ உனக்கு மோட்சம் உண்டாகும் என்றார். ஒரு கந்தர்வன் தேவலர் எனும் முனிவரால் முதலையாகச் சபிக்கப்பட்டார். இந்த கபிஸ்தலத்தில் கோயிலின் முன்பு கிழக்குத் திசையில் அமைந்துள்ள கபில தீர்த்தம் எனும் குளத்தில் ஒருநாள் கஜேந்திரன் நீரருந்த இறங்கும்போது முதலை கவ்வ யானை பிளிற கருடன் மீது வந்த மகாவிஷ்னு தம் சக்ராயுதத்தால் முதலையைக் கொன்று யானைக்கு மோட்சமளித்ததாக வரலாறு

 அர்ச்சகர் வரும் நேரம் தெரிந்து செல்வது நல்லது.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : தஞ்சாவூர்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×