08. திருக்கூடலூர்
	


		
 
	
 
5:58:33 PM         Sunday, March 29, 2020

08. திருக்கூடலூர்

08. திருக்கூடலூர்
08. திருக்கூடலூர் 08. திருக்கூடலூர் 08. திருக்கூடலூர் 08. திருக்கூடலூர் 08. திருக்கூடலூர் 08. திருக்கூடலூர்
Product Code: 08. திருக்கூடலூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                                    

                                                               திருக்கூடலூர் (ஆடுதுறைபெருமாள் கோயில்)
 
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சையிலிருந்து திருவையாறு சென்று அங்கிருந்து கிழக்கே 11 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மேலும் மதுரையைத் தென்திருக்கூடலூர் என்றும் இதனை வடதிருக்கூடலூர் என்றும் அழைப்பர். ஆடுதுறையில் பெருமாளை எழுந்தருளச் செய்ததால் ஆடுதுறைப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.

மூலவர் : வையங்காத்த பெருமாள் ஜகத்ரட்சகன் உய்யவந்தார்

உத்ஸவர் : அதே பெயருடன் கையில் செங்கோல் தாங்கி நிற்கிறார்.

தாயார் : பத்மாஸனி புஷ்பவல்லி

தீர்த்தம் : சக்ர தீர்த்தம் காவிரி நதி

விமானம் : சுத்தஸ்த்வ விமானம்

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: ஒரு சமயம் புண்ணிய நதிகள் எல்லாம் தம்மில் பலரும் நீராடி பாவக்கறை மிகுந்து போயிருப்பதைப் போக்கும் பொருட்டு பிரம்ம லோகத்திற்குச் சென்று பிரம்மனிடம் முறையிட்டனர். காவேரியின் அலங்கோல நிலையைக் கண்டு அனைவரும் எள்ளி நகையாடப் பிரம்மனால் ஆற்றுப்படுத்தப்பட்டு இந்தப் புனித சேத்திரத்துக்கு வந்து இப்பெருமாளிடம் தவமிருந்து தன் ஒளியை தன் மகிமையை மீண்டும் பெற்றதாக ஐதீகம். இச்செய்திகள் பற்றி கேள்விப்பட்ட தேவர்களும் நந்தக முனிவரோடு கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டதால் இதற்கு கூடலூர் எனப் பெயர் ஏற்பட்டதாக கூறுவர். சங்கம் சேத்திரம் என்ற பெயரும் உண்டு. இக்கோயிலில் உற்சவங்களில் ரத உற்சவம் (அம்பரீஷ ரதம்) சிறப்பாகக் கருதப்படுகிறது.

  ஏற்கனவே பொன்னியின் கரையிலிருந்து அழிந்து போன திருக்கோயில் இன்றைய ஆடுதுறைப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் மண்மேடிட்டு உள்ளது. இப்பகுதியை பெருமாள் பெட்டல் என்றே இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். ஆஞ்சநேயர் ஒரு சமயம் விண்வெளியில் சென்று கொண்டிருக்கும் போது இக்கோயிலில் இருந்த ஜனத்திரளைக் கண்டு வியந்து இது என்னவென்று பார்க்க வந்தவர் தனது தெய்வம் ஸ்ரீராமமூர்த்திக்கே மக்கள் இங்கு வழிபாடு கொடுக்கிறார்கள் என்று தாமும் அவர்களுடன் கலந்து ஆனந்தக் கூத்தாடி மூச்சித்துக்கிடக்க ஒளிமயமாக பெருமாள் ஆஞ்சநேயருக்கு காட்சி கொடுத்தாராம். ஆதலால் இக்கோயிலின் முன் கூத்தாடும் பாவனையில் ஆஞ்சநேயருக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது.

  இங்கு தங்கும் வசதிகள் இல்லாத காரனத்தால் அர்ச்சகர் வரும் நேரம் தெரிந்து பெருமாள் சேவையை செய்து கொள்ளலாம்.


விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : திருவையாறு

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×