07. திருக்கண்டியூர்
	


		
 
	
 
6:51:36 PM         Sunday, March 29, 2020

07. திருக்கண்டியூர்

07. திருக்கண்டியூர்
07. திருக்கண்டியூர் 07. திருக்கண்டியூர் 07. திருக்கண்டியூர் 07. திருக்கண்டியூர் 07. திருக்கண்டியூர் 07. திருக்கண்டியூர்
Product Code: 07. திருக்கண்டியூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருக்கண்டியூர் (கண்டியூர்)

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் 9 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.

மூலவர் : ஹரசாபவிமோசனப் பெருமாள்

தாயார் : கமலவல்லி

தீர்த்தம் : கபால மோக்ஷபுஷ்கரிணி. பத்ம தீர்த்தம் 
கபால தீர்த்தம் குடமுருட்டி நதி.

உத்ஸவர் : கமலநாதன்

சந்நிதிகள் : சக்கரத்தாழ்வார்  லெட்சுமி நரசிம்மர் 
  வேதாந்த தேசிகர்

மங்களாசாசனம் : திருமங்கைஆழ்வார் - 1 பாசுரம்.

விமானம் : கமலக்குறுத்தி விமானம்.

திருத்தலச் சிறப்புகள் : மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சி தருகிறார். இங்கு பிரம்மா சிவன் விஷ்ணு ஆகியோருக்குத் தனி கோயில்கள் அருகில் இருக்கின்றன. ஆதலால் இத்தலம் மும்மூர்த்தி சேத்திரம் என பெயர் பெற்றது.. 
திருக்கரம்பனூரில் சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பட்ட பிறகும் தன் கையை விட்டு கபாலம் நீங்காததால் அவ்விடத்திலிருந்தே பெருமாளை வணங்கினார். பெருமாள் தன்னைக் கண்டியூர் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி அங்கே எழுந்தருளியுள்ள கமலவல்லி நாச்சியாரோடு தன்னை வணங்கினால் கபாலம் நீங்கப்பெறும் எனக் கூறினார். அவ்வண்ணமே கண்டியூர் வந்து பத்ம தீர்த்தத்தில் சிவன் நீராடி எழுந்ததும் கபாலம் அகன்றது.  இவ்வாறு ஹரன் சாபம் தீர்ந்ததால் 'ஹரசாப விமோசனப் பெருமாள்' எனப்பெயர் உண்டாயிற்று இத்தலம் பஞ்சகமல சேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஐந்து கமலங்கள் உள்ளன. கமலா சேத்திரம். கமலா புஷ்கரிணி கமல விமானம் கமலநாதன் கமலவல்லி நாச்சியார் ஆகியவை ஐந்து கமலங்கள் ஆகும். நினைத்த காரியத்தை நிறைவேறச் செய்யும் வரப்பிரசாத வடிவமான மகாசுதர்சனநரசிம்மன் சிலை அழகிலும். அருளிலும் பொலிவுற்றுத் திகிழ்கின்றது.


விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : தஞ்சாவூர்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×