04. திருவெள்ளறை
	


		
 
	
 
5:16:08 PM         Sunday, March 29, 2020

04. திருவெள்ளறை

04. திருவெள்ளறை
04. திருவெள்ளறை 04. திருவெள்ளறை 04. திருவெள்ளறை 04. திருவெள்ளறை 04. திருவெள்ளறை 04. திருவெள்ளறை 04. திருவெள்ளறை 04. திருவெள்ளறை
Product Code: 04. திருவெள்ளறை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

04. திருவெள்ளறை (வேதகிரி. சுவேதகிரி)

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தில் திருவரங்கத்திற்கு வடதிசையில் 13 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. 

   மூலவர் : புண்டரீதாக்ஷன் (தாமரைக் கண்ணன்)

  தாயார் : செண்பகவல்லி.  பங்கயச்செல்வி

  தீர்த்தம் : திவ்ய கந்த. க்ஷீரபுஷ்கரிணி குச சக்ர புஷ்கல பத்ம 
  வராஹ மணிகர்ணிகா.

  மங்களாசாசனம்: பெரியாழ்வார் - 11 பாசுரங்கள் , திருமங்கையாழ்வார் -13

 மொத்தம் : 24 பாசுரங்கள்

 விமானம் : விமலாக்குறுத்தி விமானம்.                                                                                                                                                                                                                                                                                                                              

திருத்தலச் சிறப்புகள் : இங்கு உத்தராயண வாசல் தக்ஷிணாயன வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகச் செல்ல வேண்டும். ஆனி முதல் மார்கழி வரை தக்ஷிணாய வாசல் வழியாகச் செல்ல வேண்டும். இம்முறை அங்கு தவறாமல் பின்பற்றப்படுகிறது.

 திருவரங்கத்திற்கு முந்தியதான இதன் தொன்மையைக் குறிக்கவே ஆதி வெள்ளறை என்று இது அழைக்கப்படுகின்றது. திரு என்பது உயர்வைக் குறிக்கும். வெள்ளறை என்பது வெண்மையான பாறைகளால் ஆன மலைகள் என்று பொருள். வெண்மையான பாறைகள் குன்றுகள் போல் குவிந்திருக்கின்றன சந்நிதியும் 30 மீட்டர் உயரத்தில் ஒரு குன்றின்  மீதே கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் மதிலுள்ள ஏழு தீர்த்தங்கள் உண்டு. இங்கு ஸ்வஸ்திக் குளம் என்று சொல்லப்படும் சக்ரகுளம் ஒன்று உள்ளது. முன்னன் சிபிச்சக்கரவர்த்தி மார்க்கண்டேயரின் வேண்டுகோளின் படி வடநாட்டில் வாழ்ந்து வந்த 3700 ஸ்ரீவைஷ்ணவர்களை இங்கே கொண்டு வந்து குடியேற்றிக் கோயிலையும் கட்டிப் பெருமாளையும் பிரதிஷ்டை செய்தார்.

 மூலஸ்தானத்திற்கு செல்வதற்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ஒன்று உத்தரயான்யா வாசல் என்றும் மற்றொன்று தக்ஷ்ணாயனா வாசல் என்றும் அழைக்கப்படுகிறது. 
 
(ஜனவரி 15 முதல் ஜூன் 15 வரை உத்திரவாயான்யா வாசல் வழியாகவும் அடுத்த ஆறு மாதங்கள் தக்ஷணாயனா வாசல் வழியாகவும்) எப்பொழுதும் ஒரு வாசல் திறந்த நிலையிலும் மற்றொரு வாசல் மூடிய நிலையிலும் இருக்கும்.

வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் திருச்சியிலேயே தங்கி சேவிக்கலாம். இக்கோயில் பெரிய மதில்களுடன் கூடிய விசாலமானது. இங்கு சக்கரத்தாழ்வார் உடையவர் ஆண்டாள் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : திருச்சி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×