ருத்ர பிரயாகை
	


		
 
	
 
5:02:14 PM         Saturday, August 08, 2020

ருத்ர பிரயாகை

ருத்ர பிரயாகை
ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை ருத்ர பிரயாகை
Product Code: ருத்ர பிரயாகை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

ருத்ரபிரயாகை

அமைவிடம் : இந்தியாவின்இமயமலையில் சிவாலிக் மலைத்தொடரில், உத்தராகண்டம் மாநிலத்தின் ஸ்ரீ நகரிலிருந்து 34 கி.மீ தொலைவில் ருத்ரபிரயாகை அமைந்துள்ளது. பத்ரிநாத் செல்வதற்கு உகிம வழியாகவும், ருத்ரபிரயாகை வழியாகவும் பாதை இருக்கின்றன. இங்கு ருத்ரநாத்ஜி மந்திர், ஜகதாம்பா தேவி மந்திர் இருக்கின்றன. தேவப்பிரயாகையுடன் மந்தாகினியும் சங்கமிக்கும் இடமே ருத்திரபிரயாகை.
'ருத்ரநாத்' என்ற வார்த்தைக்கு 'கோபத்துடன் இருப்பவர்' என்று பொருளாகும். பஞ்ச கேதார் என்று அறியப்படும் ஐந்து புனித இடங்களுக்கான பயணத்தில் ருத்ரநாத் மூன்றாவதாக வரும் இடமாகும். 
கேதார்நாத் கோயில், துங்கநாத், மத்தியமகேஸ்வரர் கோயில், மத்தியான தேவி, உகி, காளி மடம், கோடீஸ்வர் மகாதேவ் கோயில், உம்ர நாராயணன் கோயில், ஜக்தம்பா தேவி, தாரி தேவி கோயில், திரியுக நாராயணன் கோயில், ஹரியாலி தேவி கோயில், நாரி தேவி கோயில், கௌரிகுண்டம் அமைந்துள்ளது. 
ருத்ரநாத் கோவில்:  ருத்ரநாத் வடிவத்தில் சிவன் வழிபட்டிருக்கும் ருத்ரநாத்ஜி கோயிலாகும். நாரத முனிவர் இங்கு தான்  பல வருடங்களாக தவம் இருந்ததாக கூறப்படுகிறது. பஞ்ச் கேதர் ஆலயத்தின் கீழ் உள்ள ஐந்து கோவில்களில் ருத்ரநாத் கடினமான மலையில் உள்ளன.  சிவன் முகம் இங்கே கோபமாகவும், காலை நேரத்தில் முகம் ஒரு குழந்தை போலவும், பகலில் ஒரு இளைஞனைப் போலவும், ஆனால் மாலை நேரத்தில் வயதான மனிதனைப் போலவும் தோற்றமளிக்கிறார்.  கடல் மட்டத்திலிருந்து 2286 மீ உயரத்தில் ருத்ரநாத் கோவில் அமைந்துள்ளது. சிவபெருமானின் கோவிலான இது மிகவும் மத முக்கியத்துவம் வாய்ந்த தலமாகும். ருத்ரநாத் கோவிலில் சிவபெருமான் நீலகண்ட மகாதேவர் என்ற பெயரில் வணங்கப்பட்டு வருகிறார். 
இந்திய இதிகாச மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களால் இந்த கோவில் கட்டப்பட்டது. மகாபாரதப் போரில் கௌரவர்களைக் கொன்றதற்காக பாவ மன்னிப்பு கோருவதற்காக பாண்டவர்கள் சிவபெருமானை வணங்கச் சென்றதாகவும் எனினும், அவர்களைப் பார்க்க விரும்பாத சிவபெருமான் நந்தி எருதின் வடிவெடுத்துக் கொண்டு கார்வால் பகுதிகளில் மறைந்து கொண்டார். குப்தகாஷியில் அந்த நந்தி எருதினை பார்த்த பாண்டவர்கள் அதனை வலுக்கட்டாயமாக தடுத்து பிடிக்க முயன்ற போதும் அவர்களால் அதனை பிடிக்க முடியுவில்லை. அதன் பிறகு சிவபெருமானின் உடலில் ஐந்து பகுதிகள் வேறு வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. சிவபெருமானில் முகம் கண்டெக்கப்பட்ட இடத்தில் தான் ருத்ரநாத் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தைச் சுற்றிலும் சூரிய குந்த், சந்திர குந்த், தாரா குந்த் மற்றும் மன குந்த் என்ற நீர்நிலைகளும் உள்ளன. இந்த புனிதத் தலத்திலிருந்தவாறே ஹதி பர்வதம், நந்த தேவி, நந்த குன்டி மற்றும் திரிசூல் ஆகிய அழகிய சிகரங்களைக் காண முடியும். சாகர் மற்றும் ஜோசிமாத் கிராமங்களிலிருந்து மலையேற்றம் செல்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் இந்த கோவிலை அடைய முடியும். அனுசூயா மாதா கோவில் 3 கி.மீ. தொலைவில் ருத்ரநாத்தின் பாதையில் அமைந்துள்ளது. 
கேதர்நாத் கோவில் : இமயத்திலுள்ள கேதார்நாத், மத்யமகேஷ்வர், துங்கநாத் , கர்பேஷ்வார் , ருத்ரநாத் ஆகிய 5 பெருமைமிக்க சிவஸ்தலங்களை தரிசிப்பதே பஞ்ச கேதார் யாத்திரை எனப்படுகிறது. மந்தாகினி நதிக்கரையோரத்தில் உள்ள கௌரி குளத்தின் அருகே பிரம்மாண்டமான கேதார்நாத் கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயம் அந்தக் காலத்து கட்டயூரி வடிவமைப்பில் அமைந்துள்ளது. கோவிலின் கூரைகள் தேக்கு மரங்களால் வேயப்பட்டுள்ளது மிகவும் விசேஷமானது. கேதார்நாத்தில் நந்தியின் கழுத்துப் பகுதி விழுந்ததால், கோவிலின் பிரதான சந்நிதியில் நந்தி பகவான் கழுத்து பாகம் வரை மட்டுமே தெரியும். கேதார்நாத் கோயில் இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத்தலங்க தலங்களில்ஒன்றாகும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின்உகிமத் மடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட்என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். இந்தியாவிலுள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இது திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது. வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் கங்கையின் கிளை நதிகளுள் ஒன்றான மந்தாகினி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. இக்கோயில் ஒரு கவர்ச்சியான கல் கோயில் ஆகும். கருவறைக்கு எதிரே நந்தி சிலை உள்ளது.  கோயிலுக்குள் நுழைந்ததும் பாண்டவர்கள், கிருஷ்ணர், சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், சிவபெருமானின் காவலாளியான வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளைக் காணலாம். கோயில் கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இக்கோயிலின் முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதே போன்ற அமைப்பு, கேதார்நாத்திற்கு அருகில் உள்ள, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோயிலிலும் உள்ளது.  கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. 
மத்யமகேஸ்வரர் : கோவிலில் மக்கள் சிவபெருமானின் வயிற்றுப் பகுதியை வணங்குகிறார்கள். கேதார்நாத்திலிருந்து 21 கி.மீ தொலைவில் உகிமத் என்ற இடத்திலிருந்து வடகிழக்கு திசையில் 25 கி.மீ தொலைவு சென்றால் குப்தகாசி என்ற இடத்தை அடையலாம். குப்தகாசியிலுள்ள காளிமத் என்ற இடத்தில் மத்யமகேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. கோவில் நுழைவாயிலில் நந்தி பகவான் காட்சி கொடுக்கிறார். அடுத்து சிவபெருமான் பார்வதி தேவியோடு அருள் புரியும் சந்நிதியும் உள்ளது.
துங்கநாத் : உகிமத்திலிருந்து 37 கி.மீ தொலைவில், பத்ரிநாத் செல்லுன் வழியில் துங்கநாத் சிவஸ்தலம் உள்ளது. துங்கநாத் கோவிலில் சிவபெருமான் ஒரு அடி உயரத்தில் கருப்பு நிறமுடைய சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். துங்கநாத் கோவிலில் பீமனால் வீசி எறியப்பட்ட நந்தியின் புஜங்கள் விழுந்ததால், இங்குள்ள பிரதான சந்நிதியில் சிவபெருமான் புஜங்களோடு வெகு அழகாக தரிசனம் தருகிறார். இந்தக் கோவிலில் பார்வதி தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது. இந்த இடத்தில்தான் இராவணன் சிவபெருமானை நினைத்து தவம் செய்தான் என்று ராமாயணம் சொல்லுகிறது. நந்தியின் ஜடை மட்டும் கர்பேஷ்வர் கோவிலில் விழுந்ததால், இங்கு சிவபெருமான் ஜடையோடு தரிசனம் கொடுக்கிறார். இங்கு சிவபெருமான் ஜடாதாரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். கர்பேஷ்வர் கோவில் யுர்கம் என்ற பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதான சந்நிதியில் கருப்பு நிறத்தில் நந்தி பகவான் தரிசனம் கொடுக்கிறார். உலகத்தின் உயரமான இடத்தில் அமைந்த சிவன் கோயில் ஆகும். பஞ்ச கேதார தலங்களில் ஒன்றாகும். சிவாலிக் மலையில் 3680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. துங்கநாத் என்பதற்கு கொடுமுடிகளின் நாதர் எனப் பொருள்படும்.
ருத்ரநாத் : சிவபெருமானின் 5 ஆவது அங்கமான முகம் மட்டும் ருத்ரநாத் கோவிலில் விழுந்ததால் இங்கே அழகிய முகத்தோடு சிவபெருமான் காட்சி கொடுக்கிறார். இந்தக் கோவிலிலும் சுயம்பு லிங்கம் இடம் பெற்றுள்ளது. இடப்புறத்தில் 5 சிறுய லிங்கங்கள் உள்ளன. வலப்புறத்தில் சரஸ்வதி தேவி சந்நிதி உள்ளது. ருத்ரநாத் கோவிலின் அருகே சூர்யா குளம் , சந்திர குளம் , நட்சத்திரக் குளம் என்று மூன்று விசேஷமான குளங்களில் நீராடலாம். ருத்ரநாத் கோவிலின் அருகே வைதாரிணி என்ற நதியும் ஓடுகிறது. மறந்த ஆத்மாக்கள் பூலோகத்திலிருந்து தேவலோகத்திற்கு செல்லும்போது இந்த நதியைக் கடந்து செல்வதாக சொல்கிறார்கள். 
ஹரிலியலி தேவி : கடல் மட்டத்திலிருந்து 1400 மீ உயரத்தில் அமைந்துள்ள சக்தி  பீட கோயில் ஆகும்.  இந்து இதிகாசங்களின்படி, கான்சா மகாமாயாவில் தரையில் வீசப்பட்டபோது அவளுடைய பல உடல் பாகங்கள் பூமியில் பரந்து விரிந்தன. ஹரியியலி தேவியின் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. 
கோட்டேஷ்வர் மகாதேவ் :  இது ஒரு குகைக் கோயில் ஆகும்.  சிவபெருமான் பாண்டவர்களிடமிருந்து தன்னை மறைத்து கேதார்நாத் நோக்கி செல்கையில், கோட்டேஷ்வரில் சிறிது நேரம் தங்கியிருந்து தியானம் செய்தார்.      

பயணிக்க உகந்த காலம் : ஏப்ரல் முதல் நவம்பர்
அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன், டெல்லி   
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ்
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×