தேவ பிரயாகை

	


		
 
	
 
6:58:19 AM         Thursday, February 25, 2021

தேவ பிரயாகை

தேவ பிரயாகை
தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை தேவ பிரயாகை
Product Code: தேவ பிரயாகை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

தேவபிரயாகை

அமைவிடம் : இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அலகநந்தாவும், பாகீரதி நதியும் சேர்ந்து கங்கையான ரிஷிகேஷில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. தேவ்பிரயாக் சராசரியாக 830 மீட்டர் உயரத்தில் உள்ளது. யாத்திரிகர்கள் இந்த சங்கமத்தில் இஸ்னானம் செய்வதற்கு மிகவும் பிரியப்படுவார்கள். பிண்டஸ் ராத்தம் செய்வது இந்துக்களுக்கு சிறப்பு. 
தேவப்பிரயாகையின் சிறப்பை பற்றி பாத்மபுராணம், மத்ஸயபுராணம், கூர்மபுராணம் அக்னிபுராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு பிராயாகை என்னும் பெயராயிற்று. திருமாலையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்ததால் தேவப்பிரயாகை என்று அழைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் உள்ளது. அலக்நந்தா நதியுடன் பாகீரதி நதி சங்கமம் ஆகும் இடமே தேவப்பிரயாகை , சரஸ்வதி ஆறும் இவ்விடத்தில் கலப்பதால் இது பஞ்சப் பிரயாகை என அழைக்கப்படுகிறது.
பாரதப்போரில் பாண்டவர்கள் தங்களது சகோதரர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க, மார்க்கண்டேய முனிவர் அறிவுரைப்படி இங்கு வந்து பிரயாகையில் நீராடி பாப விமோசனம் பெற்றனர். இந்த ஸ்தலத்தில் வேள்வி செய்து, பரத்வாஜ முனிவர் சப்தரிஷிகளில் ஒருவரானார். சந்திரபடணி கோயில், ரகுநாத்ஜி கோயில் ஆகியவை இங்குள்ள முக்கியமான கோயில்களாகும். பெரியாழ்வாரால்பாடல் பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 
சந்திரபாணி தேவி : தேவபிரயாக், பிரதாப்நகர் எல்லையில் அமைந்திருக்கும் சந்திரபாணி தேவி கோவில் 10 கி.மீ தூரத்தில் உள்ளது. தேவ்ரயாகிலிருந்து 22 கி.மீ மற்றும் நரேந்திர நகரிலிருந்து 109 கி.மீ தூரத்தில் உள்ளது.  சக்தியின் உடல் இங்கே விழுந்ததாகவும், அவளுடைய ஆயுதங்கள் எல்லா இடங்களிலுமே சிதறிவிட்டன என்று புராணக்கதை கூறுகிறது . எனவே, இன்றும் கூட பெரும் எண்ணிக்கையிலான இரும்புத் துண்டுகள் ,சில பழைய சிலை  இங்கு காணப்படுகின்றன. சர்கந்தா, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் சிகரங்கள் அழகாக காட்சியளிக்கின்றன. கோயில் மிகவும் சிறியது மற்றும் விக்கிரகத்திற்கு பதிலாக ஒரு தட்டையான கல்லில் செதுக்கிய ஸ்ரீயந்திரம் உள்ளது. பாரம்பரியமாக, ஒரு துணி, வருடத்திற்கு ஒரு முறை இந்த ஸ்ரீயந்திரத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது, 

தேவேந்திரன் இந்த தேவப்பிரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ஊழிக் காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதன் இலையில்தான் பெருமாள் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது. 
மூலவர் :  நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்  
இறைவி : புண்டரீக வல்லி, விமலா  
தீர்த்தம் : மங்கள தீர்த்தம், கங்கை நதி, பிரயாகை
பெரியாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். 
ரகுநாத் கோவில் : ஹரித்துவாரில் இருந்து 94 கி.மீ தொலைவில் பத்ரிநாத்திற்குச் செல்லும் வழியில் ரகுநாத் கோவில் 'ரகுநாத்ஜீ மந்திர்' என்று அழைக்கின்றனர். இந்துக் கடவுளான ராமிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இக்கோவிலும் ராம்-சீதா சிலையும் லட்சுமணன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தசரத மஹாராஜன், ராமன், முதலியோர் தவம் செய்த ஸ்தலம். இங்கே கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ரகுநாதனின் மூர்த்தியை ஆதிசங்கரர் ஸ்தாபித்தார். ரகுநாத்ஜீயின் கோயிலுக்கு அருகில் பத்ரிநாத், காலபைரவர். மஹாதேவர், ஹநுமார் முதலியோரின் அழகான மூர்த்திகளும் உள்ளன. இக்கோயில் மூலவர் இராமராக இருப்பினும், சீதை, விஷ்ணு, கிருஷ்ணர், அனுமார், சிவன்,பிரம்மா, துர்கை, பார்வதி ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதிகள் உண்டு. புராண இதிகாசங்களின்படிபிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் இராமனும் இங்கு தவமியற்றினார்கள். 
8 ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் கட்டப்பட்டதாகக் கருதப்பட்ட இந்த கோயில் , கர்வால் ராஜ்யத்தின் விரிவாக்கங்களுடன் கங்கை ஆற்றில் ஆகாங்குண்ட பாகிரீதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இராவணன் கொல்லப்பட்டதன் மூலம் சாபத்திலிருந்து தன்னை விடுவிப்பதற்காக ரகுநாத்ஜி தவம் செய்ததாக நம்பப்படுகிறது. 
தல வரலாறு : குளுவின் ராஜா ஜகத் சிங்கால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய கட்டிடம், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை நிறுவிய மஹாராஜா குலாப் சிங் என்பரால் 1835யில் தொடங்கப்பட்டு 1860ல் அவரது மகன் மஹாராஜா ரன்பீர் சிங் என்வரால் கட்டி முடிக்கப்பட்டது. கோவிலின் உள்சுவற்றில் மூன்று பக்கங்கள் தங்க தகடுகளால் பதிக்கப்பட்டு இந்துக் கடவுள்களான ராம் மற்றும் கிருஷ்ணா ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புகள் வரையப்பட்டிருக்கின்றன. இக்கோயில் ஏழு சன்னதிகள் கொண்டது. ஏழு சன்னதிகளுக்கும் தனித்தனி கோபுர விமானங்கள் உள்ளது. 
கோவில் அமைப்பு : ரகு நாதர் கோவிலின் மாடங்கள், வளைவுகள், முகப்புகள் முகலாய கட்டிட கலை பாணியை பிரதிபலிக்கின்றன. அனுமானின் சிலை மற்றும் ரன்பீர் மகாராஜாவின் உருவ படங்களும் கோவில் நுழைவு பகுதியில் காணப்படுகின்றன. ரகு நாதர் ஆலயத்தின் தங்க முலாம் பூசப்பட்ட உட்பகுதிகள் பிரம்மிக்கவைக்கின்றன. ரகு நாத் கோவிலில் பல்வேரு இந்து கடவுள்களின் சிலைகளும், பெண் கடவுள்களின் பல பெரிய சிலைகளுக்குமான கருவறை காணப்படுகிறது. மேலும் சிவனின் அடையாளமான லிங்கங்கள் இங்கு காணப்படுகின்றன.
அருகிலுள்ள இரயில் நிலையங்கள் ரிஷிகேஷில் உள்ளது. இருப்பினும், ரிஷிகேஷ் ரயில் நிலையமாக இணைக்கப்படாத ஒரு ரயில் நிலையமாகும். ஹரித்வார் ரயில் சந்திப்பு, ரிஷிகேஷில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது, 
சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுவதுமே தேவ்பிரயாக் வருகை தருகின்றனர். தேவ்பிரயாக் வானிலை மூன்று பருவங்கள் முழுவதும் இனிமையானதாக உள்ளது. கோடை மாதங்களில் புது தில்லியிலிருந்து ஹரித்வார், ரிஷிகேஷ் வழியாக யாத்ரீகர்கள் ஜோஷிமத், ரிஷிகேஷ் பஸ் ஸ்டாப்பில் இருந்து தேவ்பிரயாக் செல்லலாம்.
கரையோரமாக உள்ள பாதையில் பகவான், மலேதா, கீர்த்தி நகர் வழியாக சென்று 35 கி.மீ தொலைவில் ஸ்ரீ நகரை அடையாளம். வலதுகரை பாதையில் கார்கள் வாகனம் செல்லவும், இடது புறபாதையில் பாதசாரிகள் செல்லவும் ஏற்றவை. 
பயணிக்க உகந்த காலம் : ஏப்ரல் முதல் ஜூன் வரை
அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன் (ஜாலி கிராண்ட்) 114 கி.மீ, டெல்லி 306 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ் 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×