திருச்செங்கோடு





	


	



























	




 




	








 




12:02:40 AM         Wednesday, January 20, 2021

திருச்செங்கோடு

திருச்செங்கோடு
திருச்செங்கோடு திருச்செங்கோடு திருச்செங்கோடு திருச்செங்கோடு திருச்செங்கோடு திருச்செங்கோடு திருச்செங்கோடு திருச்செங்கோடு திருச்செங்கோடு திருச்செங்கோடு
Product Code: திருச்செங்கோடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                       அர்த்தநரேஸ்வரர் கோயில், திருச்செங்கோடு

திருக்கோயில் அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த தெய்வீகச் சிறப்பு மிக்க திருசெங்கோடு திருத்தலம். நாமக்கல்லில் இருந்து 37 கி.மீ தொலைவிலும், ராசிபுரத்தில் இருந்து 36 கி.மீ தொலைவிலும்,  திருச்சியில் இருந்து 130  கி.மீ தூரத்திலும் அமையப்பெற்றுள்ளது.

சுவாமி : அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவப் பெருமாள்

அம்பாள் : பாகம்பிரியாள்

மூர்த்தி : முருகன்

தல விருட்சம்: இலுப்பை மரம்

தல தீர்த்தம்: தேவ தீர்த்தம், கணபதி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், குமார தீர்த்தம், பாவநாச தீர்த்தம், தீன்ம தீர்த்தம், வைரவ தீர்த்தம், வாண தீர்த்தம், சண்முக தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம், சப்தகன்னியர் தீர்த்தம், நாக தீர்த்தம்

தலவிருட்சம் : இலுப்பைமரம்

பாடியோர் : திருஞானசம்பந்தர்

தலச் சிறப்பு : இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமான தோற்றத்தில் அமைந்துள்ளது. நாகரின் முழு உடலிலும் பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து பூசி உள்ளனர். இவ்வாறு மஞ்சள் குங்குமம் தடவி வழிபடும்போது நாக தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. படமெடுத்த நிலையில் அமைந்துள்ள ஆதிசேஷன் லிங்க வடிவைத் தாங்கி நிற்பது சிறப்பு. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றும் சிறப்புடன் அமையப் பெற்ற திருத்தலம். சிவனும் சக்தியும், அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில், அம்மையப்பன் எனும் தோற்றத்தில் இறைவன் எழுந்தருளி உள்ளது உலகிலேயே இத்தலத்தில் மட்டும்தான். 

திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமாகும். தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப்பெற்ற சிவ தலம், தற்போது ‘திருச்செங்கோடு’ என்று கூறப்படுகிறது. அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர், சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள். படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

அம்மையும் அப்பனுமாக ஒருசேர விளங்கும்,  கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறார் அம்மையப்பன். இந்த அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தை மணிவாசகப் பெருமான், தொன்மைக்கோலம் என்று அழைக்கிறார். இங்கிருத்து நாகேஸ்வரர் சன்னதியை அடைந்த பின், ஸ்ரீதேவி தாயார், பூமா தேவி தாயார் உடனுறை ஆதிகேசவ பெருமாள், நின்ற கோலத்தில் அருள்பாலிப்பதை காணலாம். இதே மண்டபத்தின் தரையில் ஆமை மீது ஒரு மண்டபம் எழுப்பட்டுள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்பகுதி மரத்தால செய்யப்பட்டது. திருவிழாக் காலங்களில் உற்சவ பெருமானை இந்த மண்டபத்தில் வைத்துதான் பூஜைகள் நடைபெறும். நாரி கணபதி சன்னதிக்கு அருகே தாண்டவப்பத்திரை விலாச மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும், ஆலங்காட்டுக் காளியும் எதிர் எதிரே அமையப் பெற்றுள்ளன.

தல வரலாறு : ஒரு சமயம் கயிலை மலை மீது பார்வதி தேவியுடன், சிவபெருமான் அமர்ந்திருந்தார். அப்பொழுது சிவனைக் காண வந்த பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்கி வலம் வந்தார்.  ஆனால் பார்வதி தேவியை வணங்கவில்லை.  அதனால் பார்வதி தேவி கோபமடைந்தார்.  சினம் கொண்ட பார்வதி தேவி பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் இரத்தம் நீங்குமாறு சாபமளித்தார்.  பிருங்கி முனிவர் சதையும் இரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார். சிவன் தம்முடைய தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார்.  சிவன் பிருங்கி முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார்.

ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து, சிவனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார்.  இதனைக் கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி சிவனில் பாதி உருவை அடையவேண்டும் என்று கருதி சிவனை நோக்கிக் கடுமையான தவத்தினை மேற்கொண்டார். சிவன் மனமகிழ்ந்து தம்முடலில் பாதியினைத் தருவதாக வரமளித்தார்.  பார்வதி தேவி சிவனுடன் ஒன்றிணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார்.  பிருங்கி முனிவர் இருவரையும் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வணங்கினார்.

ஆதி காலத்திலே ஆதி சேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே உண்டான சண்டையில் யார் பெரியவன், வலியவன் என்ற வாக்குவாதத்தில், இருவரும் போர் புரிந்து கொண்டனர். இப்போரினால் உலகமெங்கும் பேரழிவுகள் உண்டாயின. இது போதாதென்று மேரு மலையின் உச்சியை பலம் கொண்ட மட்டும் ஆதிசேஷன் அழுத்திப் பிடிக்க, வாயுதேவன் அந்தப் பிடியினை தளர்த்திட வேண்டும் என்பற்கு இருவருக்கும் ஏற்படத் ஒப்பந்தம். அவ்வாறு நடந்த வேளையில், இவர்களது சண்டையால் உலகம் அழிந்து விடப்போகிறது எனும் பயத்தில் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து நாகரை வணங்கி இந்தப் போரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களது பேச்சிற்கிணங்க ஆதிசேஷனும் தன பிடியினை சற்று தளர்த்த, இதுதான் சமயம் என்று வாயு அடித்த வேகத்தில் மேரு மலையின் ஒரு சிகரப் பகுதியும், ஆதிசேஷனின் ஒரு தலையும் பெயர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு தென்திசைப் பக்கமாக வந்து விழுந்தன. இவ்வாறு ஆதிசேஷனின் தலையுடன் மோதிய வேகத்தில் அதன் இரத்தம் தோய்ந்து செந்நிற மலையாக மாறியது. இதுவே திருச்செங்கோடு மலையாக உள்ளது. இவ்வாறு பறந்து வந்து தென் திசையில் விழுந்த மேருமலையானது, மூன்று பாகங்களாக சிதறி ஒன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், இன்னொன்று திருசெங்கோடாகவும் உருமாறியது.

ஒரு சமயம் திருக் கைலாயத்தில் பிரம்மன், விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் புடை சூழ, பரமசிவன் பார்வதி ஒன்றாய் வீற்றிருந்தனர். அனைவரும் சக்தி சிவன் என இருவரையும் வணங்கிய வேளையில் பிருங்கி முனிவர் மட்டும் சக்தியை விடுத்து சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். இதனைக் கண்டு மனம் வருந்திய உமையவள், தன் பதியிடம் தன் மன வருத்தத்தைக் கூறினார். பார்வதி தேவியின் மன வேதனையை புரிந்து கொண்ட சிவபெருமான், பிருங்கி முனிவரிடம் சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தி இல்லை என்ற உண்மையை பிருங்கி மகரிஷிக்கு எடுத்துரைத்தார். தன் தவறை உணர்ந்த மகரிஷி, அங்கேயே தங்கி அம்மையப்பனுக்கு சேவை செய்து கொண்டுள்ளார்.

கோவில் அமைப்பு : ஏறக்குறைய 2000 வருடங்களைத் தாண்டி இன்றும் செந்நிற மலை மேலே கம்பீரமாய் அமையப் பெற்றுள்ளது. இந்த திருச்செங்கோடு திருமலை சோணகிரி, இரத்தகிரி, சேடமலை, வாயுமலை, மேருமலை என பல்வேறு பெயர்களைக் கொண்டு விளங்குகிறது. மலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ  தூரத்திற்கு மலையிலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது. செங்குத்தான பெரியமலை, வாகன வசதி மலைமேல் செல்ல உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் கால் அடியில் தண்ணீர் ஊற்று உள்ளது. இத்திருக்கோயில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி பரிவார தெய்வங்கள் என மூன்று தனித்தனி கோயில் அமைப்புடன், ஒரே திருக்கோயிலாய் அமையப் பெற்ற திருத்தலம்.  சாலைவழியாக மட்டுமல்லாது, சுமார் 1210 படிகளைக் கடந்தும் மலைக்கோயிலைச் சென்றடையலாம். நாமக்கல் செல்லும் பாதையில் சிறுது தூரம் சென்று மலையடிவாரத்தை அடைந்து படி வழியாகச் செல்லலாம். முதற்படியில் விநாயகப் பெருமான், அருகிலேயே ஆறுமுகப் பெருமானது கோயில் அமைந்துள்ளது. 

மேலே செல்லும் வழியில் செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் மடம், திருமுடியார் மண்டபம், தைலி மண்டபம் போன்றவை அமைந்துள்ளன. அதனை அடுத்து வீரபத்திர சுவாமி திருக்கோயில் உள்ளது. அதன் மேல்புறம் நந்தி கோயில் உள்ளது. இங்கு பால், பசுக்கள் சம்பந்தமாக அவற்றின் வளம் பெருகி குடும்பங்கள் செழித்து எல்லா நலன்களையும் பெற்று வாழ இங்குள்ள நந்தி பகவானுக்கு பொங்கலிட்டு, வெண்ணை சாற்றி வேண்டி வழிபடுவர். நந்தி கோயிலில் இருந்து சற்றே கீழிறங்கினால் நந்தி மலைக்கும், நாக மலைக்கும் இடையே ஒரு பள்ளம் அமைந்துள்ளது. அதுவே நாகர் பள்ளம் என அழைக்கப்படுகிறது. பின் உயரே சென்றால் சிங்க மண்டபம் உள்ளது. இதற்கு அடுத்து அமைந்துள்ளது அறுபதாம்படி என்னும் சத்தியவாக்குப் படிகள். இந்தப் படிகளின்மேல் நின்று யாரும் பொய்யாக சத்தியம் செய்யமுடியாது. இந்த சத்தியவாக்குப் படிகளின் முடிவு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலின் ஆரம்பமாக உள்ளது. 

இங்கு அமைந்துள்ள நடராஜர் சன்னதிக்கு அருகே தலவிருட்சமான இலுப்பை மரம் உள்ளது. பொதுவாக எல்லா ஆலயங்களிலும் சக்தி நிலைகள், மூலஸ்தான கருவறை, கொடிமரம் என இவற்றிற்கு அடுத்து தலவிருட்சம் மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோயிலில், நடராஜருக்கும், சஹஸ்ர லிங்கத்திற்கும் இடையே இக்கோயில் தல விருட்சமான இலுப்பை மரம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு அமைப்பாகும். பக்தர்கள் தங்களது வாழ்வு வளம் பெற இந்த புனித மரத்தினையும் சுற்றிவந்து வழிபட்டு நலம் பெறுகின்றனர். இந்த இலுப்பை மரத்தை அடுத்து பஞ்ச லிங்கங்கள், விஸ்வநாதர், மல்லிகார்ஜுனர், தென்முகக் கடவுள், கொற்றவை, சூரிய பகவான், நாக ராஜா, பைரவ மூர்த்தி போன்ற பரிவார தெய்வங்களின் சந்நதிகள் அமையப் பெற்றுள்ளன.

இந்த மலையில் சுமார் 350 ஏக்கர் நிலம் உள்ளது, இது கடல் மட்டத்திலிருந்து 2000 அடி. மலையின் உச்சியில், 5 அடுக்குகளைக் கொண்ட பிரதான கோபுரம் மலையின் வடக்குப் பகுதியில் உள்ளது. கோயிலின் கூட்டுச் சுவர் கிழக்கிலிருந்து மேற்காக 260 அடி நீளமும், வடக்கே தெற்கே 170 அடி நீளமும் கொண்டது.  பிரதான தெய்வத்தின் உருவம் 6 அடி உயரம், படத்தின் வலது பாதி ஆணாகவும், படத்தின் இடது பாதி பெண்ணாகவும் இருக்கும். எனவே பிரதான தெய்வம் அர்த்தநாரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. சுப்பிரமண்யாசெங்கொட்டு வேலார் என அழைக்கப்படுகிறது, இது மலையின் மேல் ஒரு தட்டையான மேற்பரப்பில் அமைந்துள்ளது. இந்த செங்கொட்டு வேலார் சன்னதி பிரதான கருவறைக்கு பின்புறம் உள்ளது.  செங்கொட்டு வேலார் சன்னதிக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் காணப்படும் சிற்பங்கள் சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் பணித்திறன் கொண்டவை. இந்த அர்த்தத்தில் அர்த்த ஜாம பூஜை இரவு நேர வழிபாட்டு சேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமாவாசை நாட்களும் சிறப்பு நிகழ்வுகளாக கருதப்படுகின்றன. வருடாந்த திருவிழா தமிழ் மாதமான வைகாசியில் கொண்டாடப்படுகிறது,  இத்திருத்தலத்தில் கேதார கௌரி விரதம் 21 நாட்கள் கொண்டாடப்பட்டு, புரட்டாசி அமாவாசையன்று எழுந்திருத்தும் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

காலை 6.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை, மாலை 3.00 மணி  முதல் இரவு 7.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை,  திருச்சி, கோயம்புத்தூர்  

அருகிலுள்ள ரயில் நிலையம் : நாமக்கல் , இராசிபுரம் 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×