கோமதி துவாரகை

	


		
 
	
 
1:54:45 PM         Friday, May 14, 2021

கோமதி துவாரகை

கோமதி துவாரகை
கோமதி துவாரகை கோமதி துவாரகை கோமதி துவாரகை கோமதி துவாரகை கோமதி துவாரகை கோமதி துவாரகை கோமதி துவாரகை கோமதி துவாரகை கோமதி துவாரகை கோமதி துவாரகை
Product Code: கோமதி துவாரகை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                                       கோமதி துவாரகை 

திருத் தல அமைவிடம் : இந்தியாவின் வடமேற்கு உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில்  கோமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

பஞ்ச துவாரகை : துவாரகை குஜராத் மாநிலத்தின் தேவபூமி. ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்தது. முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகை நகரம் ஒன்று. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான துவாரகை மடம் இங்கு அமைந்துள்ளது. கோமதி ஆற்றின் கரையில் துவாரகை நகரம் அமைந்துள்ளது. துவாரகை என்றால், கோமதி, பேட் துவாரகையை குறிக்கும். எனினும், கிருஷ்ணர் பிறந்த இடம், வசித்த இடம், வளர்ந்த இடம், லீலைகள் புரிந்த இடம், ஆட்சி செய்த இடம் என்று பல இடங்கள் உள்ளன. ஸ்ரீ கிருஷ்ணரின் தொடர்புடைய இடங்களாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன.  துவாரகைக்கு நிகரான பெருமைகள் கொண்ட  டாகோர் துவாரகை, கோமதி துவாரகை, பேட் துவாரகை, மூலத் துவாரகை, மோட்ச துவாரகை, சேர்த்து ‘பஞ்ச துவாரகைகள்’ என்றழைக்கப்படுகின்றது. பிற்காலத்தில் ரிஷிகளின் சாபத்தினால் யாதவர்களின் வம்சமே அழிவுற்றது. துவாரகாவின் பெரும் பகுதி கடலின் எழுச்சியால் மூழ்கியது. தற்போது புனித யாத்ரீகத் தலமாக போற்றப்படும் ஆதி துவாரகையின் நிழலாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன.  

பெருமாள் : கல்யாண நாராயணன், துவாரகா நாதன்-துவாராகாதீசன்.

தாயார் : கல்யாண நாச்சியார், ருக்மணி, அஷ்டமகிசிகள்

தீர்த்தம்  : கோமதி 

மங்களாசாசனம் : நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் , திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்,தொண்டரடிப்பொடியாழ்வார் 

தலச் சிறப்புகள் : ஜகத் மந்திர் எனப்படும் துவாரகைக் கண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவனது பட்டத்தரசிகளுக்கும் அண்ணன் பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள். கிருஷ்ணர் சங்கு சக்ர கதாபாணியாக பத்மத்துடன் ராஜ அலங்காரத்தில் ஜொலிக்கிறார். இங்கு அச்சுதனுக்கு திரிலோக சுந்தர் என்ற பெயரும் உண்டு. சதுர்புஜனின் விக்கிரகம் 2.25 அடி உயரம். பள பளவென்ற கருப்புக் கல்லால் ஆனது. தாய் தேவகியின் சன்னிதி, கிருஷ்ணரின் சன்னிதியை எதிர்நோக்குகிறது. அவரின் அருகேயே சந்தான கிருஷ்ணரும்,சின்ன கிருஷ்ணரும் உள்ளனர்.

கருவறையில் துவாரகாதீஷ் சிரசில் கொண்டையுடன் சியாமள வர்ணத்தில் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் சேவை சாதிக்கின்றார். வலமேற்திருக்கரத்தில் கதையும், இடமேற்திருக்கரத்தில் சக்கரமும், வலகீழ்திருக்கரத்தில் பத்மும், இடகீழ்திருக்கரத்தில் சங்கமும் ஏந்தி சர்வாங்க சுந்தரனாக எழிலாக சேவை சாதிக்கின்றார். கருப்பு நிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. காலையில் பாலகிருஷ்ணனாகவும் பகலில் மகாராஜாவைப் போலவும் மாலையில் பகவான் அலங்காரத்துடனும் துவாரகாதீஷ் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார்.  கோடைக் காலத்தில் மலர் அலங்காரம் செய்கின்றனர். சுவர்க்க துவாரத்திற்கு நுழைவதற்கு முன்னரே பலராமரின் சன்னதி அமைந்துள்ளது. இத்தலத்தில் கொடி ஏற்றுவது ஒரு பிரார்த்தனை  அக்கொடி இவர் பாதத்தில் வைத்து வணங்கிய பின்னரே ஏற்றுவதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றது. தினமும் அன்னதானம் நடைபெறுகின்றது அதற்காக பக்தர்கள் அரிசி தானம் இச்சன்னதியில் செய்கின்றனர். சங்கல்பம் செய்து கொண்டு தங்கள் சக்திக்கு ஏற்றவாறு அரிசியையும், பணத்தையும் கிருஷ்ணார்ப்பணம் என்று பலராமரின் பாதத்தில் சமர்ப்பிக்கின்றனர். துலாபார பிரார்த்தனையும் இவர் சன்னதியில் நிறைவேற்றப்படுகின்றது.  பலராமரது திருப்பாதங்களை தொட்டு வணங்கலாம்.

இந்த துவாரகையில் தான் கோமதி ஆறு கடலோடு கலக்கிறாள்.  இதன் கரையில்தான் பகவான் கண்ணபிரான் விஷ்வகர்மா உதவியுடன் அரண்மனை அமைத்து ஆண்ட இடம் என கூறப்படுகிறது.  இவ்விடத்தில் கண்ணபிரான் அருளோடு கோமதி சக்கரம் உருவானது என்று கூறப்படுகிறது. துவாரகையின் பரம பவித்ரமான கோமதி நதியில் அஷ்டலட்சுமியும் குடிகொண்டதால் தான் இந்நகரமே ஜொலித்தது.
முதலில் நாம் கோமதி மாதாவை அர்சித்து பூசிக்க வேண்டும் என்பது ஐதீகம். அன்னையை தரிசித்த பின்னரே துவாரகை யாத்திரை முழுமை பெறுகின்றது. கோமதி அம்மனுக்கு ஆற்றின் கரையிலேயே ஒரு சிறு சன்னதி உள்ளது. கருவறையில் பச்சை பட்டு, கிரீடம்,  முத்து, இரத்தின மாலைகள், வைரத் திலகம் என்று சர்வலங்கார பூஷிதையாக நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். அன்னைக்கு வெள்ளி சிம்மாசன மேடை அன்னையின் சன்னதியில் மஹாலக்ஷ்மித்தாயாரும் பொன் சிம்மாசன மேடையில் நின்ற கோலத்தில்  அருள் பாலிக்கின்றாள். கோமதிப்படித்துறையில் ராதா தாமோதர் கிருஷ்ண மந்திரும் அமைந்துள்ளது.  

கோவில் அமைப்பு : துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது. 57 படிக்கட்டுகள் ஏறித்தான் ஜகத்மந்திர் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும். இவ்வாலயத்திற்கு இரு பக்கம் வாயில்கள் உள்ளன. ஆயினும் கோமதி நதிப் பக்கம் உள்ள சொர்க்க வாயில் வழியாக உள்ளே சென்றுவிட்டு,  எதிர்பக்கம் உள்ள மோட்ச வாயில் வழியாக வெளியே வர வேண்டும் என்பது ஐதீகம்.  ஏனென்றால் குசேலர் துவாரகைக்கு தன்  குருகுல நண்பன் கண்ணனை காண வந்த போது இவ்வாசல் வழியாகச் சென்று அவல் கொடுத்து திருமகளின் பெருங்கருணைக்கு பாத்திரமானார் என்கிறார்கள்.

சுற்றிலும் உயர்ந்த மதிள் சுவர் இத்திருக்கோவில் கோபுரத்தின்  உயரம் 51.8 மீட்டர். கோபுரத்தின் மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கலசத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. சாளுக்கிய கட்டிடக்கலைஅமைப்பு.  இக்கோபுரம் ஐந்து மாடிகளைக் கொண்டது.  60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. உன்னதமான சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. கீழே சன்னிதானமும் மேல்மாடியில் கோபுரமும் உள்ளன. கோயிலின் நடுவில் 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமாக உள்ளது. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம். 
பலராமன், பட்டமகிஷிகள் எண்மர், மைந்தன், பேரன் ஆகியோருக்கும் சன்னதிகளும் அமைந்துள்ளன. ஆலயத்தின் உள்ளே கிருஷ்ணரின் வம்ச மரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்திற்கு பின் ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, நாக்நாஜ்தி, காளிந்தி, லக்ஷ்மணா, மித்ரவிந்தா, பத்ரா  சாய்பா ஆகிய எட்டு பட்டமகிஷிகளின் சன்னதிகள் ஒரே மண்டபத்தில் அமைந்துள்ளன. மேலும் ஆதி குக்கேஸ்வரர், சத்யநாராயணர், காயத்ரி, அம்பிகை, த்ரிவிக்ரமன், சரஸ்வதி, கோபால கிருஷ்ணர், தத்தாத்ரேயர், மகன் பிரத்யும்நன், பேரன் அநிருத்தன், மற்றும் துர்வாசருக்கும் ஒரு சன்னதி உள்ளது. துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். பக்த மீரா கண்ணனுடன் கலந்த தலம் கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது.
ஆலயத்தின் நான்காவது தளத்தில் அம்பிகைக்கு சந்நிதி உள்ளது. சபாமண்டபத்தில் பலதேவர் சந்நிதி உள்ளது. கருடன், ராஜபலி உள்ளிட்ட சந்நிதிகளும் காணப்படுகின்றன. ஆலயத்திற்கு மேற்கே அம்பிகை, புருஷோத்தமன், தத்தாத்ரேயர், தேவகி, லட்சுமி நாராயணன் கோவில்கள் அமைந்துள்ளன. கிழக்கே சத்யபாமா ஆலயம். அருகே சங்கராச்சாரியார்கள் அமரும் அறை சாரதா பீட மடமும் உள்ளது. 
துவாரகதீஷ் ஆலயத்தின் வடக்கு வாசல் அருகில் குசேஸ்வரர் என்னும் சிவன் கோவில் அமைந்துள்ளது. துவாரகை வரும் பக்தர்கள் இவ்வாலயத்தையும் கண்டிப்பாக வணங்கவேண்டுமென்பது நியதி. இவ்வாலயம் சத்ய யுகம் என்னும் கிருத யுகத்தோடு தொடர்புடையது. சத்யயுகத்தில் திரிவிக்ரம பெருமாள், அரக்கனுடன் போரிட அவனைக் கொல்லமுடியவில்லை. இறுதியில் அரக்கனை உயிரோடு பூமிக்குள் ஆழ்த்திவிடுகிறார் பெருமாள். அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அதுவே குசேஸ்வர் சிவலிங்கம் எனப்படுகிறது. அந்த அரக்கன் பூமிக்குள் ஆழ்ந்தபோது, “பக்தர்கள் இங்குவந்து வணங்கினால்தான் முழுப் பயனையும் அடைவர் என்றருள வேண்டும்’ என வரம் கேட்டானாம். திரிவிக்ரமரும் அவ்வாறே அருளினார்.
யாதவர்களும் கிருஷ்ணரும் மறைந்த பின்னர் அந்தப் பிராந்தியமே கடலில் மூழ்கியது. கிருஷ்ணரின் மாளிகை மட்டுமே மிஞ்சியது. கிருஷ்ணனின் கொள்ளுப் பேரனான வஜ்ரனபி என்பவன் அந்த மாளிகைக்கு அருகிலேயே ஒரு கோவிலைக் கட்டினான். இன்றைய துவாரகை கோமதி நதியும் அரபிக் கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமர்ந்துள்ளது. காசியைப் போலவே இதற்கும் அகன்ற படித்துறைகள் உண்டு.
கோமதி நதியில் கிடைக்கும் கோமதி சக்கர கல்லை வணங்கினால் முக்தி தரும் அயோத்தியா, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி, துவாரகை ஆகிய ஏழு ஷேத்திரங்களை வணங்கிய பலன் கிட்டும். அஷ்டலட்சுமிக்கு இணையாக பகவானால் உருவாக்கப்பட்ட மேலான செல்வமே கோமதி சக்கரம். கோமதி சக்கரத்தை வழிபட்டதால்தான் துவாரகை மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமுடனும் வாழ்ந்தனர். கோமதி சக்கர கல்லை பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள்.ஸ்ரீ கிருஷ்ணர் கோமதி கல் சுழியின் மீதமர்ந்தே ஆட்சி செய்ததாக ஐதீகம். துவாரகையில் கிருஷ்ணன் மக்கள் சங்கடம் போக்கி கொள்ள கோமதி சுழியை பதித்து கொடுத்துள்ளார் என்ற ஐதீகமும் உண்டு. லக்னோவில் கோமதி நதியும், அயோத்யாவில் சரயு நதியும் உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் அபூர்வமாக கோமதி சக்கரம் கிடைக்கிறது.
அதிஷ்டக் கற்கள் அனைத்திற்கும் முன்னோடியாகவும், நோய் தீர்க்கும் வைத்திய கற்களாகவும், வசிய கற்களாகவும் கோமதி சக்கர கல் பயன்படுகிறது. இதை பூஜித்துதான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோமதி சக்கரத்தை வைத்துக் கொண்டிருந்தாலே போதும். மன்னர்களும் சுல்தான்களும் இதை மோதிரமாகவும் டாலராகவும் வாஸ்து குறை, நோய்குறை ,தோஷ குறை நீக்க பயன்படுத்தினர்
கோமதி சக்கரத்தை வழிபாடு செய்தால் மூன்று லோகத்தையும் வழிபட்ட பலன் கிட்டும். சிவபெருமான் சிரசு முடியின் உச்சி கங்கை சுழியும் நம் தலையில் விழும் சுழியும் இதே திருவல சுழிதான். பசுவின் பார்வை வீட்டில் பட்டால் பல பாவங்கள் விலகும். பசுவின் திருஷ்டி சக்தியே இந்த கோமதி சக்கரமாகும். இது வீட்டின் எந்த பாகத்தில் வைத்தாலும் திருஷ்டி விலகும். நாகத்தின் சுழியும் இதுவேயாகும். இந்த சுழியில் நாகலட்சுமி குடிகொண்டுள்ளாள். எனவே நாகதோஷங்கள் விலகிவிடும். சிவப்பு வண்ண துணியின் மேல் வைத்து பயன்படுத்தினால் இந்த கோமதி சக்கரம் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும். சகல தோஷமும் கோமதி சக்கரத்தால் மறைந்துவிடும்.  ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் மூலம் சீதா தேவிக்கு அடையாளம் காட்ட கொடுத்த ரகுவம்ச கணையாழி கோமதி சக்கரம் பதித்தது.
இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 7 1/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து அமுதும் சிற்றுண்டியும் தரப்படுகிறது. அதன்பிறகு கனி வர்க்கங்கள் தரப்படுகின்றன. பிறகு செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் உறக்கம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு போக் என்று பெயர். துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. பக்த மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனுடன் இரண்டறக் கலந்தது இந்த தலத்திலேயே ஆகும். சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது.

அருகிலுள்ள விமான நிலையம் : ஜாம்நகர், அகமதாபாத்

அருகிலுள்ள ரயில் நிலையம்   : துவாரகை

பேருந்து வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×