ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்)

	


		
 
	
 
10:50:03 PM         Tuesday, January 19, 2021

ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்)

ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்)
ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்) ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்) ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்) ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்) ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்) ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்) ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்) ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்)
Product Code: ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                            அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கப்பட்டணம்

திருத்தல இருப்பிடம் :  இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகராகும். மைசூர் நகருக்கு அருகில் அமைந்த இடமாகும். மைசூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் இந்நகரம் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டிலிருந்து வெளிவரும் காவிரி 8 கி.மீ பயணித்து உண்டாக்கிய தீவில் இந்நகரம் உள்ளதால் இதை தீவு நகரம் எனலாம். காவிரியில் அமைந்த தீவுகளிலேயே இது தான் பெரிய தீவு ஆகும்.

சுவாமி  : ரங்கநாதர்

தாயார் : ரங்கநாயகி

தல தீர்த்தம் : காவிரி

சிறப்புகள் : கோயில் கர்ப்பகிரகத்தில், மகாலட்சுமி, பூமாதேவியுடன், ஆதிசேசன் மீது பகவான்விஷ்ணு பள்ளி கொண்ட பெருமாளாக காட்சியளிக்கிறார். மேலும் நரசிம்மர், கிருஷ்ணர், வெங்கடேஸ்வரர், அனுமான்,கருடன், பிரம்மா மற்றும் ஆழ்வார்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.

பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (திருமால்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவு அல்லது நதித்திட்டு ஆகும்.

ஸ்ரீரங்கப்பட்டனத்தில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருகிறது. இங்குள்ள அரங்கநாத சுவாமி ஆலயமே, ‘ஆதிரங்கம்’ எனப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். இதையடுத்து பெருமாள், அவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார். பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி முனிவர் வேண்டிக் கொண்டதன் பேரில், இறைவன் எழுந்தருளிய தலம்.

தல வரலாறு : மேலைக் கங்கர் குல அரச படைத்தலைவர் திருமலைய்யா என்பவரால், 984இல் இக்கோயில் கட்டப்பட்டது. 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்தன்ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை இராமானுஜருக்கு தானமாக வழங்கினார். இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கங்கர் வம்ச அரசர்களால் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்துஹோய்சாள மற்றும் விசயநகர மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்கு அமைந்த அரங்கநாதசாமி கோயிலின் காரணமாகவே இந்நகருக்கு ஸ்ரீரங்கப்பட்டணம் என்ற பெயர் ஏற்பட்டது. அரங்கநாதசாமி இங்குள்ளதால் இந்நகரம் வைணவர்களின் புனித இடமாகவும் விளங்குகிறது. இங்குள்ள அரங்கநாதசாமி கோயில் கங்க மன்னர்களால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின் வந்த போசள மற்றும் விஜய நகர அரசுகளால் மேலும் புணரமைக்கப்பட்டு அவர்கள் பாணி கட்டட கலையும் இக்கோயிலில் கலந்துள்ளது. இங்குள்ள அரங்கனை ஆதிரங்கன் எனவும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் எனவும் திருவரங்கத்தில் உள்ள அரங்கனை அந்தியரங்கன் எனவும் அழைப்பர்.

விஜய நகர பேரரசின் கீழ் ஸ்ரீரங்கப்பட்டணம் சிறப்பு இடத்தை பெற்றிருந்தது. பிற்காலத்தில் விஜய நகர பேரரசின் பலம் குறைந்ததை கண்டு மைசூர் மன்னர் இராஜா உடையார் விஜய நகர பேரரசை எதிர்த்து அவர்களின் ஸ்ரீரங்கப்பட்டண தளபதி இரங்கராயரை தோற்கடித்து விஜய நகர பேரரசிலிருந்து சுதந்திரம் அடைந்து மைசூர் பேரரசுக்கு அடிகோலினார். விஜய நகர பேரரசின் தளபதியை தோற்கடித்த பிறகு 1610 ல் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் 10 நாட்களுக்கு தசரா திருவிழாவை கொண்டாடி தன் பலத்தையும் மைசூர் அரசின் சுயசார்பையும் பறைசாற்றினார். ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் காலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம் அவர்களின் தலைநகராக விளங்கியது. திப்பு சூல்தானின் அரண்மனை மற்றும் ஜும்மா மசூதி ஆகியவை இந்திய இசுலாமிய கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளன.

காலை 7.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணி  வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள இரயில் நிலையம் : ஸ்ரீரங்கப்பட்டணம்

அருகிலுள்ள விமான நிலையம்  : மைசூர்

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×