திருப்பேர்நகர்
	


		
 
	
 
6:55:25 AM         Thursday, August 06, 2020

திருப்பேர்நகர்

Product Code: திருப்பேர்நகர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருபேர்நகர் என்னும் இக்கோயில் திருச்சி மாவட்டத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது. அன்பிலில் இருந்து கொள்ளிடத்தின் மறுகரையை கடந்து சென்று சேர்ந்தால் இத்தலத்தை அடையலாம். குடந்தையிலிருந்து திருவையாறு வழியாகப் பேருந்தில் சென்றால் இக்கோவிலை அடையலாம். காவேரி நதியின் கரைமேல் ஒரு மேட்டின் மீது இக்கோயில் அமைந்திருக்கிறது.

மூலவர் : அப்பக்குடத்தான். அப்பாலா ரங்கநாதன் 
  
தாயார் : கமலவல்லி

தீர்த்தம் : இந்திர தீர்த்தம் கொள்ளிடம்

மங்களாசாசனம் : பெரியாழ்வார் - 2 பாசுரங்கள், திருமங்கையாழ்வார் - 19 பாசுரங்கள்
திருமாழிசையாழ்வார் - 1 பாசுரம், நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
மொத்தம் : 33 பாசுரங்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                    

திருத்தலச் சிறப்புகள் : பெருமானின் வலது திருக்கரம் உபமன்யு (மார்க்கண்டேயர்) முனிவருக்கு ஆசி வழங்குகிறது அருகே அப்பக் குடம் இருக்கிறது. புஜங்க சயனத்தில் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

 இத்தலத்தில் எம்பெருமான் பக்தர்களின் இதயத்தைவிட்டும் இத்தலத்தைவிட்டும் நீங்காமல் இருப்பேன் என்பதாக இத்தலம் தெரிவிப்பதால் இத்தலம் திருப்பேர்நகர் என்று அழைக்கப்படுகிறது.
 
 உபமன்யூ என்ற  ரிஷி குழந்தை பருவத்தில் பசியால் அழுது கொண்டிருக்கும்பொழுது சிவபெருமான் திருப்பாற்கடலை பாலாக கொடுத்தார் என்று சிவபுரணத்தில் விளக்கப்படுகிறது.

ஊபமன்யு என்னும் மன்னன் துர்வாச முனிவரின் சாபத்தால் தன்பலத்தை இழந்ததனால் அதற்குப் பரிகாரம் தேட இப்பலசவனம் தலத்தில் லட்சம்பேருக்கு அன்னதானம் அளித்தால் சாபம் தீரும் என்று தெரிவிக்க இத்ததலத்தின் அருகில் ஒரு அரண்மணையை உண்டாக்கி அன்னதானம் செய்யத் தொடங்கினார். ஒருநாள் ஸ்ரீமந்நாராயணனே பிராமண வேடந்தரிந்து இங்கு வந்து அன்னதானம் கேட்க அவருக்கும் அளிக்கப்பட்டது. மேற்கொண்டு உணவு தீர்ந்தமையால் வேறு என்ன வேண்டும் என்று மன்னன் நாராயணனைக் கேட்க ஒரு குடம் அப்பம் வேண்டும் எனச் சொல்ல அப்பம் தயார் செய்து கொடுக்கப்பட்டவுடன் உபமன்யு சாபம் தீர்ந்தது. ஆதலால் இப்பெருமானுக்கு அப்பக்குடத்தான் என்னும் பெயர் உண்டாயிற்று. நம்மாழ்வார் இப்பெருமானைப் பாடிவிட்டுதான் மோட்சத்திற்குச் சென்றார். இத்தலத்திலிருந்துதான் நம்மாழ்வார் பரமபதத்தை அடைய தம் பயனத்தை தொடங்கினார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இதுதான் என்ற சிறப்பும் பெற்றது. நம்மாழ்வாரோடு பெரியாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இந்த அப்பக்குடத்தானுக்குப் பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள்.

 மக்கட்பேறு இல்லாதவர்கள் இங்கே உள்ள பெருமாளை சேவித்து சந்தான கிருஷ்ணனை மடியில் வாங்கினால் பிள்ளைபேறு உண்டாகும். மேலும் இங்கு ஆஞ்சநேயர் பிள்ளையார் கோயில்கள் உள்ளன. 

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : திருச்சி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×