சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு
	


		
 
	
 
6:12:13 AM         Thursday, August 06, 2020

சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு

சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு
சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு
Product Code: சிறுவாபுரி - சென்னை - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

  சிறுவாபுரி - திருஊரக பெருமாள்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி வட்டத்தில் பொன்னேரிக்கு மேற்கே சுமார் 12 கி.மீ தொலைவில் சிறுவாபுரி என்ற கிராமம் அமைந்துள்ளது மேலும் சென்னை - கும்மிடிபூண்டி ரயில் பாதையில் பொன்னேரியில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலமாக இவ்வூரை அடையலாம்.

மூலவர் : தேவாதிராஜர், தேவராஜபெருமாள், வரதராஜர்

இறைவி : ஸ்ரீ பூபிராட்டியார்.

விமானம் : புண்யகோடி விமானம்

தீர்த்தம் : பத்மசரஸ்

பெயர் காரணம் : சரவணாசுர அரக்கர்கள் முக்தியடைந்த தலமாதலால் சரவணம் பேடு என்று பெயர் பெற்று பின் இதுவே திரிந்து சரவரம்பேடு என்றும், குசலவர்களாகிய சிறுவர் இருவர் அம்பெடுத்துப் பயிற்சி செய்ததால் சிறுவரம்பேடு என்றும், குசலபுரி என்றும் பல பெயர்களால் இவ்வூர் பல்வேறு காலங்களில் வழங்கப் பெற்றுள்ளது.

தல வரலாறு : குசலபுரி என்று ஒரு காலத்தில் வழங்கப்பட்ட இவ்விடம் வடக்கில் ஆரண்ய நதிக்கும் தெற்கில் குசஸ்தலி நதிக்கும் இடையில் அடர்ந்த காட்டின் நடுவே ரம்யமான சோலைகளின் நடுவில் தவத்தில் திளைத்த முனிவர்கள் பலரின் ஆசிரமங்களுடன் அமைந்திருந்தது. மணிகர், சுச்வாசர் முதலான முனிவர்கள் தம் மாணவர்களுடன் வேள்விகள் பல நடத்தி தவ வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தனர்.

ஒருநாள் மாலை வேளையில், சுச்வாசர் முதலான முனிவர்கள் ஆரண்ய நதிக்குச் சென்று நீராடி தமது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு திரும்பினர். அப்போது அவர்களுடைய ஆசிரமத்தின் நந்தவனம் அழிக்கப்பட்டு வேள்விகள் செய்யும் யாகசாலை முழுவதும் ரத்த மாமிசங்கள் சிதறியிருப்பது கண்டு சுச்வாச முனிவர் அதிர்ச்சி அடைந்தார். தமது யோக திருஷ்டியால் சரவணாசுரன் என்ற ஓர் அரக்கனின் வேலையிது என்றும், அவன் சில காலம் முன்பு தண்டக வனத்திலிருந்து வந்தவன் என்றும் அறிந்து கவலையுற்றார். தமது சிஷ்யர்களைக் கொண்டு வேறு யாகசாலையை ஏற்படுத்தி அக்னிஷ்டோமம் என்ற யாகத்தை ஆரம்பித்தார். முனிவர்களின் வேதகோஷத்தை மீறிய பேரிடி முழக்கம் ஒலிக்க பெருஞ் சூறாவளியுடன் மண்மாரி பொழிய ஆரம்பித்தது. சில நொடிகளில் பர்வதத்தை நிகர்த்த பெரும் சரீரத்துடன் கோரை பற்கள் விளங்க விகார ரூபத்துடன் வாயில் அக்னி ஜுவாலை விளங்க  சரவணாசுரன் யாகவேதிகையை நோக்கி ஓடிவந்தான். இளம் முனிவர்கள் சிதறி ஓடினர். யாக சாலையில் ரத்த மழையைப் பொழிந்த அரக்கன் முனிவர்களை நெருங்க முற்பட்டபோது முனிவர் தலைவரான மணிகர் கோபத்தை வரவழைத்து, ஹூம்காரம் செய்து அரக்கனைத் துரத்தினார். முனிவர்கள் தம் தவ வலிமையால் அரக்கனைச் சபித்து அழிக்க முடியும் என்றாலும், தம் தவத்தை இழக்க விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் சரவணாசுரனின் அட்டகாசங்கள் தொடர்ந்தன. யாகங்கள் தடைபட்டது. முனிவர்கள் அனைவரும் மிகுந்த கவலையுற்றனர்.

சுச்வாஸர் ஓர் நாள் ப்ருந்தாரண்யத்தில், ஆரண்ய நதிக்கரையில் தவத்தில் ஈடுபட்டிருந்த கண்வர் என்ற முனிவரைக் கண்டு குசல ப்ரச்னத்தில் ஈடுபட்டு சரவணாசுரனின் கொடுமைகளை கூறுகையில் கண்வர் தாம் முன்பு நைமிசாரண்யத்தில் வசித்துவரும் காச்யப முனிவரிடம் பெற்ற உபதேசத்தை சுச்வாச முனிவரிடம் அறிவித்து யாகமூல புருஷனாகிய விஷ்ணுவை அர்ச்சாரூபியாய் விக்ரஹ வடிவத்தில் ஆராதித்து ப்ரபத்தியைப் பண்ணும்படி உபதேசித்தார். சுச்வாசரும் தமது ஆசிரமத்தை அடைந்து கண்வ முனிவரின் உபதேசப்படி மறுநாள் காலை சிஷ்யர்களைக் கொண்டு யாகசாலையை நிர்மாணித்து வாயிலின் மேற்கு துவாரத்தில் மணிகர் என்ற முனிவர் தலைவரை தம் பத்னி ஸந்த்யா தேவி ஸமேதராய் வீற்றிருக்க ஆசனமளித்து மேற்கு திசையை அரக்கனிடமிருந்து ரக்ஷித்து வருமாறு பிரார்த்தித்து, தாம் கிழக்கு த்வாரத்தில் யோகத்தில் அமர்ந்தார். காலம் பல சென்றது.

நீண்டகாலம் யோகத்தில் ஆழ்ந்து ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து தவம் செய்து வருகையில் அம்முனிவரின் நாபி வரையில் மண் நிறைந்து அந்த நாபிப்ரதேசத்திலிருந்து தர்பையும் முளைத்தது. அதன் காரணமாகவே அவருக்கு குசநாபர் என்ற பெயர் ஏற்பட்டது. அவரின் ப்ரார்த்தனைக்கு இணங்கி ஸ்ரீமன்நாராயணனின் அனுக்ரகத்தால் விச்வகர்மா தோன்றி குசநாபரின் வேண்டுகோளை ஏற்று, கைகளில் உளி முதலானவற்றை ஏந்தி கிழக்கு திசை நோக்கி தம் இதய கமல மத்தியில் பிரம்ம விஸ்வரூபத்தை தியானித்து சிலாரூபமாக எம்பெருமானை வடிக்க எத்தனிக்கையில், தியானம் செய்த அக்கணத்திலேயே சங்கு சக்கர கடிக அபயஹஸ்தங்களுடன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ பூபிராட்டியார் சமேதமாக ஸ்வர்ணமயமான கிரீடத்துடன் ஒளிமயமாக மேற்கு நோக்கிய வண்ணம் எம்பெருமான் ஸேவை சாதிக்க, பிரம்மாநித்யரும், முனீந்தரருமான மணிக முனிவர் தம் பத்னி ஸந்த்யா தேவி சமேதராய் ஸ்ரீதேவாதிராஜரை மனமுருகி வேண்டி திருக்கோயில் வாயிலில் தேவி சமேதராக த்வாரங்களில் காவலராக நித்ய கைங்கர்ய சேவையைச் செய்து வருகையில், குசநாப முனிவரின் தலைமையில் முனிவர்கள் யாகங்களை செய்ய ஏற்பாடு செய்யும் பொழுது, சரவணாசுரனும், அவனது சகாக்களும் முனிவர்களை பயமுறுத்தத் தொடங்கினர். ஆனாலும் மகாபலம் பொருந்தி தம் தேஜஸினால் ஜொலித்த மணிக முனிவரை நெருங்க அரக்கர் கூட்டம் பயந்து தொலைவிலிருந்தே யாகசாலையை நோக்கி மரங்களை முறித்து வீச ஆரம்பித்தனர். முன்பு பிரம்மாவிடம் வரம் பெற்ற பலத்தின் கொழுப்பினால் சரவணாசுரன் மட்டும் யாக சாலையை நெருங்கி ரத்த மாமிசங்களை பொழிய ஆரம்பித்தான்.

அரக்கர்கள் யாகத்தை கெடுக்க வந்திருப்பதை உணர்ந்த குசநாபர் ஸ்ரீதேவாதிராஜரின் திருவடிகளில் சிரம் தாழ்த்தி வேத மந்திரங்களால் அவரைத் துதித்து துஷ்ட நிக்ரஹத்தை யாசித்த அக்கணமே எம்பெருமானின் திருவாழியிலிருந்து பெரும் ஒளியுடன் மின்னல் வேகத்தில் ஓர் அக்னி ஜ்வாலை புறப்பட்டு சரவணாசுரனின் மார்பை பிளந்து பெருங்குரலுடன் பர்வதம் போன்ற அந்த அரக்கன் விழுந்து மாண்டான். எஞ்சிய அரக்கர் சேனையும் சிதறி ஓடியது.

திருத்தல சிறப்புகள் : மணிகர் குசநாபர் வால்மீகி போன்ற முனிவர்கள் வழிபட்ட தலம். மூலவர் மேற்கே திருமுக மண்டலமாக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இவருக்கு ஜலமோ எண்ணையோ சேர்த்து திருமஞ்சனம் செய்யக்கூடாது. வெகுகாலமாக சாம்பிராணி தைலத்தினால் திருக்காப்பு சாத்துவதே வழக்கு. இதனாலேயே இவர் தீண்டாத்திருமேனியர் என்று வழங்கப்பட்டு வருகிறார்.

ஆரண்ய நதியில் குசலவர்கள் ஸ்நானம் செய்ய மூழ்கிய போது ஸ்ரீராமபிரான் தேவாதி ராஜராக ஆதிசேஷன் குடைபிடிக்க குநாபமுனிவர் ஆராதிப்பது போன்று சேவை சாதித்தது ஓர் சித்ராபெளர்ணமி தினத்தன்று. அந்த வழக்கில் சான்றாக இன்றும் ஸ்ரீவரதராஜபெருமாளுக்கு ஆரண்ய நதிக்கரையில் பழமையான திருஊரல் மண்டபம் ஒன்று உள்ளது. இது புதுவாயல் மற்றும் நல்லூர் என்ற இடங்களுக்கு மத்தியில் நதிக்கரையோரத்தில் இன்றும் காட்சியளிக்கிறது.

எந்த ஒரு திவ்யதேசத்திலும் இல்லாத காட்சியாக எம்பெருமானுக்கு நேர் எதிரில் ஸ்ரீவைஷ்ணவிதேவி சங்கு சக்ரகடிக அபய ஹஸ்தங்களுடன் பிரசாந்தமான புன்னகையுடன் திருவடிகோயில் ஸ்தானத்தில் பிரபத்தி செய்த வண்ணம் காட்சியளிக்கிறார். கிழக்கே திருமுகமண்டலமாக ஸ்ரீநிவாசப் பெருமாள் லாவண்யமான ரூபசௌந்தர்ய லக்ஷணங்களுடன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ பூபிராட்டியார் சமேதராக எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீலக்ஷ்மிநாராயணர் தெற்கு நோக்கியும் ஸ்ரீ பெருந்தேவித்தாயார் சக்கரத்தாழ்வார் பெரிய திருவடிகள் கோதை நாச்சியார் ஸ்ரீபக்தாஞ்சனேயர். ஆழ்வாராசார்யர்களும் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளனர்.

கிராமத்து தென்பாகத்தில் வடக்கு நோக்கி ஆஸனமாக என்ற பாடலுக்கு இணங்க ப்ராஹ்மீ மாகேஸ்வரி கௌமாரி இந்திராணி வராஹி சாமுண்டி ஆகிய சப்தமாத்ருக்கள் அமர்ந்த கோலத்தில் கோயில் கொண்டிருப்பது. மிகப்பழமையான இந்த தலத்தின் பெருமைக்கு ஒரு சான்றாகும். வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

கோயில் அமைப்பு :  இக்கோயில் மிகவும் பழமையானது கி.பி 11ம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கூறப்படுகின்றது. புராண வரலாறும் வரலாற்று சிறப்பும் கொண்ட இக்கோயில் கிராமத்திற்கு நடுநாயகமாக அமைந்துள்ளது.

கோயில் உள்ளே நுழைந்த உடனே நம் கண்ணுக்கு முதலில் தென்படுவது 16 கால் மண்டபம். மண்டபத்திற்கு எதிரில் மேற்கு நோக்கி சிறிய திருவடி சன்னதி உள்ளது. சிறிய திருவடி சன்னதிக்கு பக்கத்தில் பன்னிரு ஆழ்வார்கள் சந்நிதி உள்ளது. அவர்களை வணங்கி விட்டு மேற்கு நோக்கி சென்றால் தாயார் அம்பாளுக்கு தனியாக சந்நிதி உள்ளது. தாயார் சந்நிதிக்கு பக்கத்தில் சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது. அவருக்கு பக்கத்தில் ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். அவருக்கு பக்கத்தில் கோதை நாச்சியார் சந்நிதி தனியாக உள்ளது.

கோதை நாச்சியாரை வணங்கிவிட்டு நேராக 16 கால் மண்டபத்திற்குள் நுழைந்தால் நம் கண்களுக்கு கம்பீரமாக காட்சி தருவது ஸ்ரீனிவாச பெருமாள். இரண்டு துணைவியாரும் நம் கண்களுக்கு காட்சி தருகின்றனர். இங்குள்ள சிற்பங்கள் மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

அடுத்து நாம் பார்ப்பது லஷ்மிநாராயணர். அவரை வணங்கிவிட்டு திரும்பினால் நாம் பார்க்க இருப்பது திருஊரகப்பெருமாள். அவருக்கு எதிரில் பெரிய திருவடி சன்னதி அமைந்துள்ளது. திருஊரகப்பெருமாள் இரண்டு துணைவியாருடன் அருள் பாலிக்கின்றார். இந்த எம்பெருமானுக்கு அபிஷேகம் கிடையாது. ஆண்டுக்கு ஒரு முறை சாம்பிராணி தைலம் சாத்துவார்கள். இந்த எம்பெருமான் திருமேனி சுதையினால் ஆனது.

திருக்கோயில்களில் பொதுவாக கொடிமரம் மேற்கு நோக்கி இருக்கும். ஆனால் இந்த திருக்கோயிலில் கொடிமரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ஒரு தனிச்சிறப்பு.

விமானதளம் : சென்னை

ரயில் நிலையம் : பொன்னேரி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

 
Mail this page Printable view
×
×
×
×
×
×
×