பீமசங்கரம்
	


		
 
	
 
5:56:38 AM         Thursday, August 06, 2020

பீமசங்கரம்

பீமசங்கரம்
பீமசங்கரம் பீமசங்கரம் பீமசங்கரம் பீமசங்கரம் பீமசங்கரம் பீமசங்கரம்
Product Code: பீமசங்கரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                                        பீமாசங்கர் கோயில்

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள போர்கிரி எனும் ஊரில் சஹயாத்திரி குன்றுகளின் மீது அமைந்துள்ளது. 

இறைவன் : பீமாசங்கர்

இறைவி :  கமலாச்சி பச்சிஸ்டா டேவி

தீர்த்தம் : மோட்ச குண்டம்,  சர்வ தீர்த்தம்,  குட சாரண்ய தீர்த்தம், பீமா ஆறு

ஜோதிர்லிங்கம் என்பது இந்து மதத்தில் சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள், திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 கோயில்கள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள 6 ஜோதிர்லிங்க கோயில்கள் தமிழ்நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளன.

தல சிறப்புகள் : கருவறையின் வெளியே கால பைரவரையும், நேர் எதிரே சனி பகவானையும் தரிசிக்கலாம். இத்தலத்தில் கடல் ஆமை பிரசித்தி பெற்றதாகும். வாயிலின் எதிரே நந்தியும் அதன் பிறகு கடலாமையும் மூலவரைப் பார்த்தவாறு காட்சித் தருகின்றன. கருவறையின் முன் பெரிய முற்றமும், மக்கள் கூட்டம் அதிகமானால் கட்டுப்படுத்த கம்பி வேலிகளும் எதிரே பெரிய மணியும் உள்ளன. தற்போதைய வடிவம் நானா பட்னாவிஸ் என்ற மன்னரால் எழுப்பப்பட்டதாகும், மேலும் சிவாஜி மகாராஜாவும் பல புனரமைப்புகள் செய்துள்ளார். கோயில் அருகே ஒரு கிணறும் தண்ணீர்க் குழாய்களும் உள்ளன. அந்தக் கிணறு அபிஷேக நீர் பிடிக்கும் இடத்தைப் போல மக்கள் பயன்படுத்துமாறு இல்லை. அருகிலுள்ள சீதாராமபாபா ஆஷ்ரமத்தில் ஷீரடி சாய்பாபா, ராமர், லெக்ஷ்மனர், கிருஷ்ணர், துர்கை, விநாயகரைத் தரிசிக்கலாம். அதன் அருகே தான்தோன்றி நாகபாணீ தீர்த்தக் குளமும் உள்ளது.  கோயிலுக்கு வரும் பாதையில் ஒரு அனுமான் கோவிலும் உள்ளது. இந்தப்  பகுதியிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பீமா ஆற்றின் தோற்றவாய்ப்  பகுதியில் குப்த் பீமாஷங்கர் லிங்கத்தைக் காணலாம். பொதுவாக பக்தர்கள் இங்கு வருவது கடினம்.  கரடுமுரடான ஒற்றையடிப் பாதை உள்ளது.

கோவில் அமைப்பு : இக்கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில் அடர்ந்த காடுகளிடையே, பீமா ஆற்றங்கரையில் உள்ளது. சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன. இக்கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது. இக் கோயிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவரால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளார். இப்பகுதியில் உள்ள பிற சிவன் கோயில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பீமன் என்ற அரக்கனை அழக்க சிவபெருமான் இங்கே தோன்றி சோதிலிங்கமாக  பீமசங்கரம் எனப் பெயர்பெற்றது.

இக்கோயிலைச் சுற்றி அகண்ட திருச்சுற்று அமைந்துள்ளது. கோயிலின் முன்மண்டபம் விசாலமானதுக உள்ளது. கோயிலின் துண்கள், கதவுகள், விதானம் போன்றவை கலைவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலானது புரு மண்டபம், சபா மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. கோயிலில் வித்தியாசமான இரு நந்திகள் உள்ளன. வெளிப்புற தரைமட்டத்துக்குக் கீழே கருவறை அமைந்துள்ளது. படிக்கப்படுகளில் இறங்கிச் செல்லவேண்டும். கருவறை தரையை ஒட்டியுள்ள ஆவுடையாரில் ஒரு அடி உயர லிங்க மூலவர் உள்ளார். பக்தர்கள் கருவறையில் லிங்கத்தை சுற்றி அமர்ந்து வழிபடுகின்றனர். கோயில் வளாகத்தில் சனின் சிற்றாலயம் அமைந்துள்ளது.

தல வரலாறு : கும்பகருணனின் பல மனைவிகளில் ஒருத்தி கற்கடி என்பவளாவாள். அவள் இப்பகுதியில் உள்ள காடுகளில் வாழ்ந்த அரக்கியாவாள். கற்கடிக்கு பீமன் என்ற மகன் உண்டு. பீமன் குழந்தையாக இருந்தபோதே அவனது தந்தையான கும்பகருணன் இராமனால் கொல்லப்பட்டான். பீமன் வளர்ந்து பெரியவனான பிறகு பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்து, பிரம்மனிடம் வரத்தை வாங்கி தன் வலிமையை பெருக்கிக்கொண்டான். பின்னர் பூவுலக மன்னர்களை வென்று, பிறகு இந்திர லோகத்தின்மீது படையெடுத்து அவர்களையும் வென்றான். இதனையடுத்து அவனுக்கு அஞ்சிய தேவர்கள் இந்த வனப்பகுதிக்கு வந்து சிவனை நோக்கி கடும் தவம் செய்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவனிடம் பீமனின் கொடுமைகளில் இருந்து விடுதலை வேண்டினர். பீமனை அழிப்பதாக சிவன் அவர்களுக்கு வரம் அளித்தார்.

அதேசமயம் காமரூப நாட்டு அரசனும், சிவபக்கனுமான பிரியதருமன் என்பவனை போரில் வென்ற பீமன் அவரை சிறையில் அடைத்துக் கொடுமைகள் செய்தான். கொடுமைகளுக்கு ஆளான பிரியதருமனும் அவன் மனைவியும் சிறையிலேயே சிவலிங்கத்தை வைத்து சிவபூசை செய்து வந்தனர். தங்களின் துன்பத்தைப் போக்குமாறு வேண்டிவந்தனர். இதை சிறைக் காவலர்கள் பீமனிடம் கூறினர். கடும் கோபம்கொண்ட பீமன் தன் சூலத்தை எடுத்துக்கொண்டு பிரியதருமனைக் கொல்ல சிறைக்கு வந்தான். அங்கு சிவபூசை செய்துகொண்டிருந்த பிரியதருமன்மீது சூலத்தை ஏவினான். அப்போது லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான் அவன் விட்ட சூலத்தை தன் சூலத்தால் உடைத்தார். இதனையடுத்து சிவனிடம் போரில் ஈடுபட்ட பீமனை தன் நெற்றிக்கண்ணால் சிவன் எரித்து அழித்தார். இதனையடுத்து பிரியதருமன் தான் பூசித்த இந்த லிங்கத்தில் சோதியாகத் தங்கியிருந்து என்றும் மக்களைக் காக்குமாறு வேண்டினார். அவ்வாறே சிவபெருமான் அந்த லிங்கத்திலேயே சோதிவடிவில் ஐக்கியமாகி பக்கத்களைக் காத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

பூனா ரயில் நிலையத்திலிருந்து பேருந்து  வசதி உண்டு. சாலைகள் மூலமாக பல நகரங்களுடன் பீமாஷங்கர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் தொடர்ச்சியான போக்குவரத்து வாகனங்களும்,வாடகை வண்டிகளும் கிடைக்கின்றன.

அருகிலுள்ள விமான நிலையம்  : புனே

அருகிலுள்ள ரயில் நிலையம் : கர்ஜத் 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×