திருவேங்கடம் (திருப்பதி)

	


		
 
	
 
11:07:08 PM         Tuesday, January 19, 2021

திருவேங்கடம் (திருப்பதி)

திருவேங்கடம் (திருப்பதி)
திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடம் (திருப்பதி)
Product Code: திருவேங்கடம் (திருப்பதி)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                      வெங்கடாசலபதி கோயில், திருப்பதி

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.  இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. 

மூலவர் : ஸ்ரீநிவாஸன், வெங்கடாசலபதி (நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்)

உத்ஸவர் :  மலையப்ப சுவாமி

தாயார் : அலர்மேல் மங்கை, பத்மாவதி தாயார்

தீர்த்தம்  : ஷேசாசல சுவாமி புஷ்கரணி, பாபவிநாச தீர்த்தம், ஆகாச கங்கை, கோனேரி தீர்த்தம்

மங்களாசாசனம் : பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருப்பாணாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பொய்கையாழ்வார், குலசேகராழ்வார்

இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும். 

திருத்தல  சிறப்புகள் : வேங்கடாத்ரி, சேஷாத்ரி, நீளாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்னும் ஏழு மலைகளுக்கு நடுவில் இக்கோயில் அமைந்துள்ளதால் ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார். திருச்சானூர் என்று அழைக்கப்படும் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதித் தாயார் சன்னதியும் உள்ளன. இவருக்கு அலர்மேல் மங்கை என்னும் திருநாமமும் உண்டு. கீழ்த்திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி உள்ளது. ஸ்வாமி புஷ்கரிணியின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஆதிவராஹ பெருமாளுக்கு தளிகை சமர்ப்பித்த பிறகே ஸ்ரீநிவாஸனுக்கு தளிகை.

ஒரு சமயம் பிருகு முனிவர் திருமாலைக் காண வைகுண்டம் சென்றார். பள்ளி கொண்டிருந்த பெருமாள் அவர் வந்ததைக் கவனிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட முனிவர் பரந்தாமன் மார்பில் எட்டி உதைத்தார். உறக்கம் கலைந்த திருமால் முனிவரின் பாதங்களைப் பற்றி, 'பாதங்கள் வலிக்கின்றனவோ' என்று தடவிக் கொடுத்தார். சாந்தமடைந்த முனிவர் மன்னிப்புக் கேட்டார்.
முனிவர் இடது மார்பில் உதைத்ததால் அங்கு வசிக்கும் திருமகள், வருத்தம் அடைந்து பூலோகம் சென்று திருப்பதிக்கு அருகில் உள்ள 'கொல்லாபுரம்' சென்று மறைந்து வாழ்ந்தார். மகாலஷ்மி சென்று விட்டதால் களையிழந்த வைகுண்டத்தில் இருந்து திருமாலும் புறப்பட்டு பூலோகம் வந்து சேஷாசல மலையில் 'ஸ்ரீநிவாசன்' என்ற திருநாமத்தோடு வகுளாதேவியால் வளர்க்கப்பட்டு வந்தார்.

இராமாவதாரத்தில் சீதை வடிவில் துன்பங்களை அனுபவித்த வேதவதி, கலியுகத்தில் ஆகாசராஜன் மகளாகப் பிறந்து திருப்பதிக்கு சிறிது தொலைவில் உள்ள நாராயணவனம் என்னும் ஊரில் 'பத்மாவதி' என்ற பெயருடன் வளர்ந்து வந்தார். ஸ்ரீநிவாசனானத் திருமால் பத்மாவதியை மணந்துக் கொண்டார். நாரதர் மூலம் செய்தி அறிந்து அங்கு வந்த லஷ்மியை சமாதானப்படுத்திய பெருமாள், இருவரும் ஒன்றே என்பதை அறிய வைத்தார். அன்று முதல் ஸ்ரீநிவாசன் சேஷாசல மலையிலும், பத்மாவதித் தாயார் திருச்சானூருக்கும் சென்று பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.

வரலாறு : உலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.400-100 இல் எழுதப்பட்ட தமிழ் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன. இந்த மலைகளை பண்டைய தமிழகத்தின் வடபுறத்து எல்லையாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை. பல பேரரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் இக்கோவில் கருணாகரத் தொண்டைமான் என்ற பல்லவ மன்னரால் ஆக்கம் பெற்றது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பல்லவர்கள், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை சோழர்கள், கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் விசயநகர இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.விசய நகர பேரரசின் மிகப்பெரிய மன்னரான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்தக் கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.
வைணவம் பெரிதாக பின்பற்றப்பட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி, ஆழ்வார்களால்  வைகுண்டம் என்று போற்றப்பட்டது.  வைணவ சம்பிரதாயத்தில்திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம். பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன. இக்கோயிலின் நிர்வாகத்தினை திருப்பதி திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்கிறது. ஆங்கிலோயர் ஆட்சி காலத்தில் இக்கோயிலின் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தினை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932ல் மதராஸ் அரசாங்கத்தில் திருமலை இருந்தது. அப்போது 1933ல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை இசுலாமியர்களால் சூறையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தான். இந்த இசுலாமிய பிரவேசங்களின் பொழுது திருவரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறது. இசுலாமியர்களிடமிருந்து திருமலை கோயில் தப்பியதற்கு சுவாரசியமான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அந்த முகலாயப்படையினர் மலையின்மேல் என்ன கோயில் இருக்கிறது என்று கேட்டபோது அவர்களின் நோக்கத்தையும் பழக்க வழக்கங்களையும் நன்கறிந்த உள்ளூர் மக்கள் பன்றிக் கடவுளின் கோயில் என்றனராம். மக்கள் குறிப்பிட்டது வராஹப் பெருமாளின் திருக்கோயிலை. இந்தப் பெருமாளை தரிசித்தப்பின்னர்தான் ஏழுமலையானை தரிசிக்கவேண்டும் என்கிற சம்பிரதாயம் இருக்கிறது. பன்றிகளின் மீது முகலாயர்களுக்கு இருக்கும் வெறுப்பால் அவர்கள் திருமலைக்கு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர்.

கோயில் அமைப்பு : வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும். இக்கோயில் மூன்று பிரகாரங்களையும், ராஜ கோபுரத்தினையும் கொண்டது. இக்கோயிலில் உள்ள ரங்க மண்டபம் இசுலாமியர்களின் தாக்குதலில் இருந்து ரங்கநாதர் கோயிலை காக்க ரங்க நாதரை திருப்பதியில் கொண்டுவந்ததாக கூறப்படும் தொன்மத்தோடு தொடர்புடையது. திருப்பதி கோயிலின் முதல் பிரகாரம் சம்பங்கி பிரதட்சணம் எனப்படுகிறது. இதில் பிரதிம மண்டபம், ரங்க மண்டபம், திருமலைராய மண்டபம் , சாலுவ நரசிம்ம மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன. விமான பிரதட்சண பிரகாரம் என்பது இரண்டாவது பிரகாரமாகும். இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம் மற்றும் கர்ப்பகிரஹம் ஆகியவை உள்ளன. மூன்றாவது பிரகாரம் வைகுண்ட பிரகாரம் ஆகும். இது ஆண்டுக்கொரு முறை வைகுண்ட ஏகாதேசியின் பொழுது திறக்கப்படுகிறது.

கருவறை மண்டபத்தில் இருக்கின்றன ஒரு படி குலசேகர ஆழ்வார் படியென அழைக்கப்படுகிறது. மூன்றாவது பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் நான்கு கரங்களுடன், சங்கு சக்கரம் கொண்டு திருமாலினைப் போன்று காணப்படுகிறார். இவர் சிவாலயங்களில் இருக்கும் சண்டீசுவரரைப் போன்றவர். திருமாலுக்கு சமர்ப்பிக்கப்படும் மாலைகள், பிரசாதங்கள் விஷ்வக்சேனருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. பரகாமணி மண்டபம் என்றும் அழைக்கப்படும் மண்டபத்தில் கோயிலின் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வுண்டியல் காவாளம் எனப்படும் பித்தளை அண்டாவினைச் சுற்றி துணி கட்டி வைக்கப்படுகிறது.

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் நடைபாதை சிறப்பானதாகும். இப்பாதை கீழ்திருப்பதியிருந்து தொடங்குகிறது. இப்பாதையின் இருபுறமும் ஆழ்வார்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அலிபிரி பகுதியில் கருடாழ்வாரும், கபில தீர்ததமும் அமைந்துள்ளன. இதனைக் கடந்து செல்கையில் ஆஞ்சிநேயர் சிலையும், முழங்கால் முடிச்சு, காளிகோபுரம் போன்ற இடங்களும் காணப்படுகின்றன.
நடைபாதையில் வருகின்ற பக்தர்களுக்கு தர்ம தரிசனமும், தங்குமிடமும் இலவசமாக திருப்பதி தேவஸ்தானம் தருகிறது.
சுப்ரபாத சேவை - திருப்பதி வெங்கடாசலபதியை துயில் எழுப்ப சுப்ரபாத சேவை தினமும் செய்யப்படுகிறது. இந்நிகழ்வின் பொழுது தொட்டிலில் முதல் நாள் இரவு கிடத்திச் சென்ற ஸ்ரீநிவாஸ மூர்த்தியை மூலவருக்கு அருகே வைத்து அபிசேகங்களும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.

தல வரலாறு : கங்கை நதிக்கரையில் காஸ்யப முனிவரின் தலைமையில் முனிவர்கள் சிலர் யாகம் செய்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நாரதர் இந்த யாகம் யாருடைய நன்மைக்காக நடத்தப்படுகிறது என கேட்டார். ஆனால் அங்கிருந்த முனிவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. அதனால் பிருகு முனிவரிடம் உதவி கேட்டு சென்றனர்.

பிருகு முனிவரின் உள்ளங்காலில் ஒரு கண் இருந்ததால் அவருக்கு மற்ற முனிவர்களை விட ஞானம் சற்று அதிகம் இருந்தது. அவர் இதற்கு ஒரு தீர்வு காண நினைத்து பிரம்மனை தரிசிக்க சத்யலோகத்திற்கு சென்றார். அங்கே பிரம்மதேவர் சரஸ்வதி தேவியின் துணையுடன் தனது நான்கு முகங்களாலும் ஸ்ரீமன் நாராயணைப் போற்றி நான்கு வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார்.

அவர் பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முனிவர் இவர் வழிபாட்டிற்கு உகந்தவர் இல்லை என முடிவு செய்து சிவப்பெருமானை தரிசிக்க கைலாசம் சென்றார். ஆனால் சிவன் பார்வதிதேவியுடன் ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால் அவரும் முனிவரை கண்டுக் கொள்ளவில்லை. முனிவரைக் கண்ட பார்வதிதேவி சிவனிடம் கூற அவரோ தனது முக்கிய ஆலோசனையின் போது முனிவர் குறுக்கிட்டதைக் விரும்பாததால் அவரை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். அதனால் ஆத்திரமுற்ற பிருகு முனிவர் சிவப்பெருமானுக்கு சாபமிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

பின்னர் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தார். ஆனால் ஆதிசேஷன் குடை விரிக்க, மகாலட்சுமி காலடியில் அமர்ந்து பணிவிடை செய்ய ஆனந்த சயனத்தில் இருந்ததால் அவரும் முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் மதியிழந்த பிருகு முனிவர் மகாலட்சுமியின் உறைவிடமான மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எட்டி உதைத்தார்.

முனிவரின் கோபத்தை தணிக்க நினைத்த பெருமாள் எட்டி உதைத்த காலை சட்டென பிடித்து பாதங்களை மென்மையாக அழுத்திவிட்டார். அந்த இதத்தில் முனிவரின் கோபம் தணிந்தது. அதே சமயம் மகாவிஷ்ணு பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணை பறித்துவிட்டார். பாதத்தில் இருந்த கண் தான் அவருக்கு இத்தனை அகங்காரத்தை தந்தது. தனது தவற்றை உணர்ந்த முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்புக் கோரிவிட்டு மும்மூர்த்திகளில் சிறந்தவர் இவரே என முடிவு செய்தார்.

இருப்பினும், தனது மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்டதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்துக் கொண்டு சென்று இன்று மகாராஷ்டிராவில் உள்ள கோலாபூர் எனும் இடத்திற்கு சென்றுவிட்டார். அவரைத் தேடிப் பிடித்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்கு கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்பு புற்றின் மேல் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார்.

இதில் மனமுருகிய பிரம்மரும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர். இத்தனை சங்கதிகளையும் சூர்ய பகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றார். அவற்றை வாங்கிய சோழ மன்னனின் பணியாட்கள் அவற்றை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள்.

அங்கே ஒரு எறும்பு புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார். இதற்கிடையே அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின் தொடர்ந்து வந்தான். அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாலியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்றி அடியை தான் வாங்கினார். தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான்.

ரத்தக் கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின் தொடர்ந்தான். அஙகே எறும்பு புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு எதுமறியாமல் விழித்தான். அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த விஷ்ணு அவனது வேலைக்காரன் செய்த குற்றத்திற்கு மன்னனுக்கு சாபமிட்டார். ஆனால் மன்னன் மீது தவறேதுமில்லாக் காரணத்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் ஆகாய ராஜாவாக பிறப்பானென்றும் தனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடக்கும் சமயம் அவனது சாபம் தீரும் எனவும் ஆசி வழங்கினார்.

ஸ்ரீ வராகசுவாமி ஆலயம் : இந்த சம்பவங்கள் நடந்த காலக்கட்டத்தில் திருப்பதி மலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார். அவரும் மகிழ்ந்து இடமளித்தார். அதற்கு நன்றிக் கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது.

பத்மாவதி தாயார் : இது அனைத்தும் ஒரு ஜென்மத்து கதை. இக்கதை சோழ மன்னனின் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான். பிறந்து வளர்ந்து அனைத்து வளங்களும் பெற்று திகழ்ந்த அவனுக்கு பிள்ளைப் «பறு இல்லை அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் நிலத்தை உழுதப் பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதை அருகில் சென்று பார்த்தப்போது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது. அப்போது அதை எடுத்து வளர்த்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும் என அசரீரிக் கேட்டது. தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி எனப் பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தான்.

இதனிடையே சீனிவாசன் என்ற பெயரோடு வாழ்ந்து வந்த மகாவிஷ்ணு பத்மாவதியைக் கண்டார். உடனே பெற்ற தாய் போல தன்னை கவனித்து வந்த வகுலாதேவியிடம் சென்று பூர்வஜென்ம கதைகளைக் கூறி பத்மாவதியை தான் மணக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார். அதே சமயம் ஆகாச ராஜாவும் அவனது மனைவியும் கூட தங்களது மகள் வேங்கட மலையில் வசித்து வரும் சீனிவாசனை மணக்க விரும்புவதை அறிகிறார்கள். செல்வங்களுக்கு அதிபதியான குபரன் இத்திருமணச் செலவுகளுக்காக சீனிவாசனுக்கு கடன் தருகிறார்.

இரு வீட்டார் சம்மதத்துடன் தேவர்களும், சிவன், பிரம்மா புடைசூழ சீனிவாசன், பத்மாவதி திருமணம் நடைபெறுகிறது. இக்கதையும், இத்திருமணமும் நடைபெற்ற இடம் தான் திருவேங்கடமலை . அதனால் இன்றும் திருமலையில் தினமும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி இப்போதும் பிரம்மோற்சவம் நடக்கும் 9 நாட்களும், மஞ்சள், குங்குமம் மற்றும் சேலை திருப்பதியில் இருந்து திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாருக்கு எடுத்து செல்லப்படுகிறது.

பிரம்மோற்சவம் - பிரம்மோற்சவம் ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவினை பிரம்மா முதன் முதலாக நடத்தினார் என்பதால் பிரம்மோற்சவம் என்று பெயர் பெற்றது. பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது.  இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.  முடி செலுத்துவது பக்தர்களின் வேண்டுதல்களில் பிரதானமாக இருக்கிறது. இத்தலம் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயிலாக உள்ளது.

இக்கோயில் பின்னிரவு 12.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு அரை மணி நேரம் கழித்து 1 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை, திருப்பதி

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பதி 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×