தேவம்பாடிவலசு

	


		
 
	
 
8:09:24 AM         Thursday, February 25, 2021

தேவம்பாடிவலசு

தேவம்பாடிவலசு
தேவம்பாடிவலசு தேவம்பாடிவலசு தேவம்பாடிவலசு தேவம்பாடிவலசு தேவம்பாடிவலசு தேவம்பாடிவலசு தேவம்பாடிவலசு தேவம்பாடிவலசு
Product Code: தேவம்பாடிவலசு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                       தேவம்பாடிவலசு, அமணீசுவரர்

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில்  கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தில் தேவம்பாடிவலசு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 

இறைவன் : அமணீசுவரர்

இறைவி : பார்வதி, கங்கா

தல விருட்சம் : வேம்பு

தல தீர்த்தம்:  கங்கா 

தல சிறப்புகள் : சிவன் தனது இரண்டு கண்களையும் பாதி மூடிய தவநிலையில், பூணூல் அணிந்து காட்சி தருகிறார். இவரது நெற்றியில் நட்சத்திர வடிவத்தில் நெற்றிக்கண்ணும், பாதங்கள் இரண்டும் ஒட்டியநிலையிலும் இருக்கிறது. அளவில் சிறிதாக இருக்கும் இக்கோயில் புல்வெளிக்கு மத்தியில் இயற்கை அழகுடன் அமைந்திருக்கிறது. மூலவர் எதிரில் நந்தி ருத்ராத்ரட்சத்துடன் காணப்படுகிறது.

தல வரலாறு : தன் மூதாதையர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யவேண்டும் என்பதற்காக பகீரதன் சிவனை வேண்டி, கங்காதேவியை ஆகாயத்திலிருந்து பூமிக்கு அழைத்து வந்தான். அவள் பெரும் ஆற்றலுடன் பூமியை நோக்கி வந்ததால் சிவன் அவளை தனது தலையில் தாங்கி, வேகத்தைக் குறைத்தார். பின், ஜடாமுடியை சாய்த்து பூமியில் பாயவிட்டார். தன்னைக் கட்டுப்படுத்திய சிவனின் தலையிலேயே கங்காதேவி குடி கொண்டாள். இதனால் இவளை சிவனது மனைவி என்றும் சொல்வர். இந்த நிகழ்வின் அடிப்படையில், இத்தலத்தில் சிவனுடன் பார்வதி, கங்காதேவி ஆகிய இருவரும் அருளுகின்றனர். இந்த தலத்தில் அனைத்து தெய்வங்களும் வசிப்பதாக நம்பிக்கை இருக்கிறது. எனவே “தெய்வம்பாடி வலசு” என்றழைக்கப்பட்ட இவ்வூர், “தேவம்பாடிவலசு” என்று மருவியது.

கோவில் அமைப்பு :  கருவறை சுற்றுச்சுவரில் தெய்வங்கள், எதுவும் இல்லை. கொடிமரம், பலிபீடமும் கிடையாது.  பிரகாரத்தில் விநாயகர், நவக்கிரகங்களும் உள்ளனர். இரட்டை அம்பிகை தலம் என்பதால் வேம்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அருகே சண்டிகேஸ்வரர் சிவனுடன் இருக்கிறார். இத்தலத்தின் விநாயகர் வேம்பு விநாயகர் எனப்படுகிறார். பார்வதி, கங்காதேவி ஆகிய இருவருடன் உள்ள இந்த சிவனது தரிசனம் விசேட பலன்களைத் தரக்கூடியது. அம்பாள் கோயில்களில் தலவிருட்சமாக இருக்கும் வேப்ப மரம் இந்த சிவத் தலத்தின் விருட்சமாக இருப்பது சிறப்பாகும்.

மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தம்பதியர் தங்களுக்குள் ஒற்றுமையுடன் இருக்க இத்தலத்தில் வேண்டிக் கொள்ளலாம். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  பொள்ளாச்சி 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×