சேவூர்





	


	



























	




 




	








 




8:04:21 AM         Thursday, February 25, 2021

சேவூர்

சேவூர்
சேவூர் சேவூர் சேவூர் சேவூர் சேவூர் சேவூர் சேவூர் சேவூர் சேவூர் சேவூர்
Product Code: சேவூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                            சேவூர், வாலீஸ்வரர் 

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில்  கோயம்புத்தூர் மாவட்டத்தில் சேவூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 

இறைவன் : வாலீஸ்வரர், கபாலீஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர் 

இறைவி :  அறம் வளர்த்த நாயகி

தல தீர்த்தம் : வாலி தீர்த்தம்

பாடியவர் : சம்பந்தர், சுந்தரர்

தல சிறப்புகள் : இத்தல இறைவனை இராமாயண காலத்து வாலி பிரதிஷ்டை செய்து பூஜை செய்ததாக தல வரலாறு குறிப்பிடுகிறது. இங்கு புலியொன்று பசுவின் மீதேறி விளையாடிய காட்சியைக்கண்ட வாலி அவ்விடத்தில் சிவபூஜை செய்ததால் இங்குள்ள சிவபெருமானுக்கு வாலீஸ்வரர் என்றும் தீர்த்தம் வாலி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்குச் சான்றாக கருங்கல் விளக்குத் தூணின் அடிப்பகுதியில் வாலி இறைவனை வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளதைப் பார்க்கலாம். இறைவனுக்கு கபாலீஸ்வரர் என்று பெயரும் உள்ளது. கல்வேட்டுக்களில் இக்கோவில் கபாலீச்சுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில் அமைப்பு : ஆலயம் ஒரு 5 நிலை கோபுரத்துடன் சுற்றிலும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. இவ்வாலயம் முற்றிலும் கற்றளியால் ஆனது. ஆலயத்திற்கு வெளியே கோபுரத்திற்கு எதிரே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் விளக்குத்தூண் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் விசாலமான இடத்தில் மூலவர் வாலீஸ்வரர், முருகர் மற்றும் அம்பாள் அறம்வளர்த்தநாயகி சந்நிதிகள் கிழக்கு நோக்கி உள்ளன. முருகர் சந்நிதி நடுவிலிருக்க இறைவன் மற்றும் இறைவி சந்நிதிகள் அதன் இருபுறமும் சோமஸ்கந்த அமைப்பில் இருப்பதைக் காணலாம். இறைவன் மற்றும் இறைவி இருவர் சந்நிதிகளுக்கும் தனிதனியே பலிபீடம் மற்றும் நந்தி இருக்கின்றன. முருகர் சந்நிதிக்கு எதிரே பலிபீடம் மற்றும் மயில் உள்ளது. மூன்று சந்நிதிகளுக்கும் சேர்த்து முன் மண்டபம் அமைந்துள்ளது. முன் மண்டபத்தின் தெற்குப் பக்கம் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. நடராஜர் உருவம் தொன்மையும், அழகும் வாய்ந்தது. சனீஸ்ரனுக்கும் தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது. கொங்குதாட்டுத் தலங்கள் எல்லாவற்றிலும் சனி பகவானுக்கு தனி சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது. அம்பாள் அறம் வளர்த்த நாயகி கையில் தாமரை மலர் ஏந்தி நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். பாலா தண்டாயுதர் அம்மாள் சன்னதிக்கு பின்புறம் தண்டத்துடன் காணப்படுகிறார்.இத்தலத்தில் அம்பாள் சந்நிதியில் மாங்கல்ய பூஜை ஆண்டு தோறும் மிக சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது. 

தல வரலாறு : சேவூரின் முந்தைய பெயர் செம்பியன் கிழானடி நல்லூர். புராணங்களில் ரிஷபகிரி, ரிஷபபுரி என்றும், தமிழில் மாட்டூர் என்றும் அழைக்கப்பட்ட இன்றைய சேவூர் கோவிலின் தலவிருட்சமாக வன்னிமரம் விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் பட்டையும் இலையையும் வீட்டில் வைத்தல் செல்வம் பெருகும்.

உறையூரை தலைநகரகாக கொண்டு ஆண்டு வந்த சோழ மன்னனனுக்க சிங்களாதேவி, சியாமளாதேவி என்ற இரு தேவிமார்கள் இருந்தார்கள், ஒரு சமயம் உறையூர் பாண்டிய மன்னனின் தாக்குதலுக்கு உள்ளான போது மண் மாரியால் உறையூர் அழிக்கப்பட்டது. அப்பொழுது இருதேவிமார்களையும் சந்திர பட்டர், ராம பட்டர் என்று இருபிராமணர்கள் காப்பாற்றி கொங்கு நாடு அழைத்து செல்வார்கள். அப்பொழுது சிங்களாதேவி கர்ப்பமாக இருப்பார். கொங்கு நாட்டில் வைத்து இருவரும் பாதுகாக்க படுவார்கள். அப்பொழுது சிங்களா தேவிக்கு அழகிய ஆண் குழந்தை பதினாங்கு வருடங்கள் அங்கேயே வளர்ந்து போர் கலைகளை அனைத்தையும் கற்று தேர்ந்து மீண்டும் தனது ராஜ்ஜியத்தை கைப்பற்றவேண்டி பாண்டியன் மீது போர் தொடுக்கிறான். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் சோழதேசத்தை கைப்பற்ற இயலவே இல்லை. அதுசமயம் தன்னை காப்பாற்றிய சந்திர பட்டர், மற்றும் ராம பட்டரிடம் வந்து உபதேசம் கேட்கிறான்.

வாலி என்பவன் சிறந்த சிவபக்தன் அவனின் எதிரில் யார் வந்தாலும் அவர்களின் பாதி பலம் வாலிக்கு வந்துவிட வேண்டும் என்று வரம் பெற்றவன். அதனால் அவனை யாராலும் வெல்ல முடியாமல் இருந்தது. அவ்வளவு பெரிய பலசாலியான வாலியே சூழ்ச்சியால் தான் இழந்த கிஸ்கிந்தா நாட்டை மீண்டும் கைப்பற்ற வேண்டி வசிஷ்டரிடம் உபதேசம் பெற்று அவினாசிக்கு வடக்கே 5 மைல் தொலைவில் உள்ள சேவூர் என்னும் இடத்தில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிறகே தனது ராஜ்ஜியத்தை மீண்டும் பெறுகிறான். இதனை அறிந்த ராமபிரான் கூட வாலியை நேருக்கு நேராக நின்று எதிர்க்க முடியாமல் மறைதிருந்தே அம்பெய்தி அவனை கொல்லுவார். இதனால் ராமரால் கூட எதிர்க்க முடியாத மிக பெரிய பலசாலியான வாலியினால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட சிவாலயமான சேவூர் சிவாலயத்தில் ஏதாவது ஒரு பெளர்ணமி அன்று ஹோமம் செய்து காரம் பசுவை கோவிலுக்கு தானமாக கொடுக்குமாறு உபதேசம் செய்தனர். அவர்களின் உபதேசம் பெற்ற சோழ இளவரசன் பெளர்ணமி அன்று சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஹோமம் செய்து கோவிலுக்கு காரம்பசுவை தானமாக வழங்கினான்.

அதன்பிறகு மீண்டும் உறையூர் மீது படையெடுத்து உறையூரை கைப்பற்றி கரிகால சோழன் என்று பட்டமெய்தி சோழ தேசத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அத்துடன் தனது ராஜ்ஜியம் திரும்ப கிடைக்க காரணமாக இருந்த சேவூர் வாலீஸ்வரர் கோவிலை பெரியதாக கட்டி அறம்வளர்த்த நாயகி அம்பாளுக்கு தனி சன்னதியும் அமைத்து கொடுத்துள்ளான். அத்துடன் தனது ராஜ்ஜியத்தை திரும்ப பெற உதவியாக இருந்த சந்திர பட்டர் மற்றும் ராம பட்டருக்கு சிங்களாதேவியின் நினைவாக சிங்காநல்லூர் என்றும் ஊரையும், சியாமள தேவி நினைவாக சியாமளபுரம் என்ற ஊரையும் உருவாக்கி முறையே சந்திர பட்டர் மற்றும் ராம பட்டருக்கு தானமாக வழங்கினான்.

காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரை, மாலை 4.30 மணிமுதல் இரவு 7.00 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :   இருகூர், மேட்டுப்பாளையம் 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×