நல்லூர்

	


		
 
	
 
5:27:29 AM         Monday, March 08, 2021

நல்லூர்

நல்லூர்
நல்லூர் நல்லூர் நல்லூர் நல்லூர் நல்லூர் நல்லூர் நல்லூர் நல்லூர் நல்லூர் நல்லூர்
Product Code: நல்லூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                             நல்லூர், வில்வனேஸ்வரர் 

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின்  சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் வேப்பூர் என்ற ஊரில், விருத்தாசலம் அருகில் கண்டபங்குறிச்சி என்ற இடத்தில் இறங்கி 4 கி.மீ  சென்றால் இவ்வூரை அடையலாம். 

இறைவன் : வில்வனேஸ்வரர்

இறைவி : பிரகன்னாயகி, பாலாம்பிகை

தல விருட்சம் : வில்வம்

தல தீர்த்தம் : மணி முத்தாறு 

தல சிறப்புகள் : இக்கோயிலுக்கு தனி சிறப்பு தருவது மூன்று நதிகள் கூடும் இடத்தில் நடுநாயகமாக உயர்ந்த இடத்தில் கம்பிரமாக அமைந்துள்ளது. இந்தத் திருத்தலத்தையொட்டி ஆலயத்திற்கு வடபுறம் மணிமுத்தாறு , கோமுகி நதியும் கிழக்கு நோக்கி பாய்கின்றன. ஆலயத்திற்கு முன்புறம் மயூரநதி கிழக்கு நோக்கி பாய்ந்து ஆலயத்தின் முன்பாக மூன்றும் கூடிடும் சிறப்பு கொண்ட தலம். இங்கு முருகனும் வடக்கு நோக்கிய சன்னதியில் பெரிய திருஉருவமாக உள்ளார். இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு. 

கோவில் அமைப்பு : இங்குள்ள மகாமண்டபத்தில் சோழர்கால தூண்களை கொண்டுள்ளது ,தூண்களில் வடக்குபுறம் ஒரு தூணில் கல்வெட்டு காணப்படுகிறது. தூண்களும் மண்டப அமைப்பும், கட்டடக் கலைத்திறனும், சோழர் காலத்திய கலை முறை என்பதை உணர முடிகிறது. மேலும் இம்மண்டபம் மூன்று பக்கங்களிலும் திறந்த நிலையிலும் ,விதானத்தில் மீனின் பெரிய உருவமும் செதுக்கப்பட்டுள்ளது .இக்கோயில் மூலத்தானம் முதல் மகா மண்டபம் வரையில் சோழர்கால கலைப்பணியாக திகழ்கின்றது.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இக்கோயிலின் உள் மண்டபத்தில் அழகிய சோழர்கால வண்ண சித்திரங்கள் மேல் சுவற்றில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது இவூரில் சிறிது காலம் தங்கியிருந்ததாக கூறுகிறார்கள்.  இக்கோயிலில் பஞ்சபாண்டவ்ர்கள் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. மற்றும் பீமன் மணலால் சிவலிங்கத்தை செய்து பூஜித்து அவர் வராததால் கோபத்தில் தன் கதையால் சிவனின் தலையில் அடித்தார் உடனே இறைவன் காட்சி தந்தார் என்று கூறுகிறார்கள். இவ் மண்ணால் ஆனா பிளவு பட்ட லிங்கம் இறைவனின் கருவறை முன் மண்டபத்தில் வலது ஓரத்தில் இன்றும் உள்ளது. மற்றும் ஆற்றை கடந்தால் அங்கு பஞ்சபாண்டவ்ர்கள் தங்கி பூஜித்த சிறு சிறு கோயில்கள் உள்ளது.

ஒரு காலத்தில் வில்வமரங்கள் உள்ள காடுகளுக்கு நடுவே எம்பெருமான் உள்ளதால் இவருக்கு வில்வனேஸ்வர் என்ற பெயர் கிட்டியது.
முருகன் அசுரர்களை அழித்தபோது வீரகத்தி தோஷம் பீடித்தது, அதனை போக்க முருகன் இந்த முக்கூடலில் வந்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக ஐதீகம். நுழைவு வாயிலில் கோபுரமும்,  முன்மண்டபங்களும்,  திருமண மண்டபம் காணப்படுகிறது .நந்தி மண்டபம் இறைவனை நோக்கி எழுப்பட்டுள்ளது . இறைவன் கிழக்கு  நோக்கியும் அவரது இடது புறத்தில் அம்பிகையும் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார். 

கருவறை சுற்றி சுற்றாலை மண்டபங்கள் உள்ளன அதில் அறுபத்து மூவர் உள்ளனர். பின் புறம் பிராண தியாகர் லிங்கமும், தண்டபாணி, லட்சுமி நாராயணர், மகாலட்சுமி உள்ளனர்.  கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், மாதவபெருமாள், பிரமன், துர்க்கை உள்ளனர் அது போல் இறைவியின் கருவறை சுற்றி ஞானசக்தி, கிர்ரியாசக்தி, பிரம்மா சக்தி என சிலைகள் உள்ளன.  இறைவியின் முகப்பு மண்டபம் ஒட்டி வீரபத்திரர் தெற்கு நோக்கியுள்ளார். இறைவியின் எதிரிலும் இறைவனின் எதிரிலும் தனி தனி கொடிமரங்கள் உள்ளன. வடகிழக்கில் நவகிரகம், பைரவர், சூரியன் உள்ளன. 

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வீற்றியிருக்கும் பாலாம்பிகையை வேண்டிக்கொள்கின்றனர். இக்கோயிலில் நடைபெறும் மாசி திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அதிலும் ஆறாம் நாள் திருவிழா பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் இறைவன் ஊர்வலம் வரும் அழகை காண கோடி கண்கள் வேண்டும். இந்த கோவிலில் மாசி மகம் ஆறாம் நாள் திருவிழா ரொம்ப விசேஷமானது. திருவட்டத்துறையில் 5 ஆம் நாள் திருவிழாவும் ,ஆறாம் நாள் திருவிழாவின் காலை விருதாச்சலத்திலும் இரவு இங்கேயும் வரிசையாக காண்பவர்கள் காசிக்கு போய் கிட்டும் புன்னியம் கிட்டுவதாக ஐதீகம். அதுபோல் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாழ்ந்தது. கடக ராசிக்காரர்கள் பரிகார தலமாகும்.

காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி 

அருகிலுள்ள ரயில் நிலையம் : விருத்தாசலம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×