திட்டக்குடி

	


		
 
	
 
7:06:34 AM         Thursday, February 25, 2021

திட்டக்குடி

திட்டக்குடி
திட்டக்குடி திட்டக்குடி திட்டக்குடி திட்டக்குடி திட்டக்குடி திட்டக்குடி திட்டக்குடி திட்டக்குடி
Product Code: திட்டக்குடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                              திட்டக்குடி, வைத்தியநாதர் 
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் வெள்ளாற்றங்கரையில், கடலூர் திருச்சி வழித்தடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. விருத்தாசலத்தில் இருந்து மேற்கே 30 கி.மீ. தொலைவில்  உள்ளது. திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து வெகு அருகில் கோவில் அமைந்துள்ளது. 
இறைவன்: வைத்தியநாதர்
இறைவி : அசனாம்பிகை , வேங்கைவன நாயகி
தல மரம் :   வேங்கை மரம்
தல தீர்த்தம் : 22 தீர்த்தங்கள் காண்டீபத் தீர்த்தம், வெள்ளாறு 
தல சிறப்புகள் : வசிஷ்டர் வழிபட்டதால் இவ்விடம் வசிட்டபுரி என்றழைக்கப்பட்டு, வசிட்டக்குடி என்றாகி பின்னர் திட்டக்குடி என்றழைக்கப்படுகிறது. இறைவன் நோய் தீர்க்கும் மருத்துவராக அருள்புரிவதால் இத்திருத்தலம் வைத்தியநாத சுவாமி கோயில் எனும் பெயரை பெற்றது.  சூரியன் தனது கிரகணங்களால் வழிபடும் கோவில்களில் இதுவும் ஒன்று. சுயம்புவாக தோன்றியதால் சுவாமிக்கு தான்தோன்றீஸ்வரர் நாயனார் கோயில் என்ற பெயரும் உண்டு.  வசிஷ்டர் மகாரிஷிக்கு அருந்ததியை தேவேந்திரன் கன்னிகாதானம் செய்து கொடுத்த சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். மேலும், இங்கு வசிஷ்டரின் சாபத்தினால் காகம் இரவில் இங்கு தங்காது. இது ஏழு துறைகளுள் 5 ஆவது துறையாகும். 
தல வரலாறு : வசிஷ்டர் முனிவர் இங்கு வசித்ததால் இது திருவதிட்டக்குடி என்று அழைக்கப்பட்டு இந்நாளில் திட்டக்குடி என்று அழைக்கப்படுகின்றது. இங்குதான் வசிஷ்டர் அருந்ததியை மணந்து தவவாழ்க்கையை தொடர்ந்தார். இதற்குச் சாட்சியாக இருவரின் சிலா வடிவங்களுடன் தனிச் சன்னிதி இங்கு அமைந்துள்ளது. வசிஷ்டர் தான் செய்த பெரும் தவத்தால் காமதேனுவைப் பெற்றார். அந்த காமதேனு, இத்தலத்தில் இருந்த ஒரு புற்றின் மீது கால் வைக்க, அந்த புற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளிவந்தது. அந்த ரத்தப் பெருக்கைத் தணிக்க, காமதேனு புற்றின் மீது பால் சுரந்தது. அப்போது அங்கு வந்த வசிஷ்டர், புற்றினுள் சுயம்புலிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டார். அந்த இடத்தில் காமதேனுவின் உதவியால் கருவறை உருவாக்கப்பட்டது. பின்னர் அங்கேயே அமர்ந்து தவம் இயற்றினார். அப்போது அங்கு மனு சக்கரவர்த்தி வருகை தந்தார். தவம் இருந்த வசிஷ்டரிடம், தங்கள் சூரிய வம்சத்திற்கு குருவாக இருக்க வேண்டினார். வசிஷ்டரும் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் அதற்கு கைமாறாக, இத்தலத்தில் ஆலயம் எழுப்பிட கேட்டுக் கொண்டார். மனு மன்னனும், வேங்கை வனத்தை அகற்றி, அங்கு ஒரு பெரிய ஆலயத்தை உருவாக்கினான். அங்கு தவ நிலையில் உயர்வை அடைந்தார் . அப்போது இராமனின் முன்னோரான மனு சக்ரவர்த்தி வசிஷ்டரை வணங்கி தனது சூரியவம்சத்துக்கு அவரே குலகுருவாக இருக்க வேண்டும் என வேண்டினார். அதனை வசிஷ்டரும் ஏற்றுக் கொண்டார். மனு சக்ரவர்த்தி வனத்தை அழித்து ஒரு ஊரை உருவாக்கினார். அதுவே திருவதிட்டக்குடி என்று அழைக்கப்பட்டது. பல முனிவர்களும் ரிஷிகளும் வேதங்களையும் கலைகளையும் இங்கு கற்றனர் . எனவே வித்யாரண்யபுரம் எனும் பெயரும் இத்திருத்தலத்திற்கு உண்டு. மனு சக்ரவர்த்தி இத்திருக்கோயிலை ஆகம விதிப்படியும் , தெய்வாம்சம் பொருந்திய கோயிலாகவும் கட்டினார். வைத்திநாத சுவாமி உடனுறை அசனாம்பிகை அம்மனை வழிபட்டு தவம்புரிந்து வதிட்டர் “ராஜ ரிஷி“ என்னும் சிறப்பை பெற்றார். பழங்காலத்தில் திட்டக்குடி, வேங்கை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்துள்ளது. எனவே இத்தலம் ‘வேங்கை வனம்’ என அழைக்கப்பட்டது. இதன் காரணமாகவே இங்கு எழுந்தருளியிருக்கும் அன்னைக்கு ‘வேங்கைவன நாயகி’ என்ற பெயர் வழங்கலானது. 
உயிர்களை படைக்கும் கடவுளான பிரம்மன் வியாக்ருதி என்ற மகாமந்திரத்தை பிரயோகப்படுத்தி, பூமியில் பஞ்சபூதங்களை உருவாக்கி, ஜீவாத்மாக்களை உருவாக்கினார். பிரம்மனின் மகன் வசிஷ்டர், பூலோகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் முக்தியடைய வழிவகை காண வேண்டும் என்ற உயரிய சிந்தனையை பெற்றிருந்தார். இதை அவர் பிரம்மதேவனிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, பிரம்மன் அன்னப்பட்சி வடிவம் கொண்டு சிவபெருமானை நாடி சென்றார். ஆனால், எங்கும் அவரை காண முடியவில்லை. அப்போது, விஷ்ணுபெருமான் திட்டக்குடியில் உள்ள வைத்தியநாத சுவாமியை தரிசிக்குமாறு, பிரம்மனிடம் கூறினார். இதையடுத்து பிரம்மதேவன் திட்டக்குடி சென்று வைத்தியநாத சுவாமியை வழிபட்டு, இறைவனின் சன்னிதி முன்பு அசுவமேத யாகம் நடத்தினார். மேலும், சிவபெருமானை நினைத்து தவமும் மேற்கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், இத்தலத்தில் திருமண கோலத்தில் பிரம்மதேவனுக்கு காட்சி அளித்தார். அப்போது, வைத்தியநாத சுவாமி, அசனாம்பிகையை கண்ட பிரம்மன், தன்னுடைய மகன் வசிஷ்டருடன் சிவன் காலில் விழுந்து வணங்கினார். அந்த சமயத்தில் வசிஷ்டருக்கு ஞானப்பிரகாசம் என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்யுமாறு சிவபெருமானிடம், பிரம்மதேவர் வேண்டுகோள் வைத்தார். இதை ஏற்ற சிவபெருமான், 'நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை வசிஷ்டருக்கு கொடுத்தார். இதனால், இக்கோவில் நமசிவாய மந்திரம் உபதேசம் பெற்ற தலமாக பெருமை பெற்று விளங்குகிறது. திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் சிவபெருமான், பக்தர்களுக்கு திருமண தடைகளையும், தீராத நோயை தீர்க்கும் கடவுளாக உள்ளார். நீதிநெறி தவறாத மன்னன் மனுநீதி சோழன் தன்னுடைய சந்ததிகளுக்கு ஒரு ராஜகுரு அவசியம் என்று கருதினார். இதற்காக அவர் தேவலோகத்தில் உள்ள பிரகஸ்பதியை வணங்கி வேண்டினாராம். அப்போது, பூலோகத்தில் பிரம்மாவின் மகனான வசிஷ்டனை குலகுருவாக ஏற்று கொள்ளுமாறு பிரகஸ்பதி கூறினார். இதையடுத்து, மனுநீதி சோழன், வசிஷ்டரை தன்னுடைய ராஜகுருவாக ஏற்றுக் கொண்டார். வசிஷ்டரின் கோரிக்கையை ஏற்று மனுநீதி சோழன் வசிஷ்டபுரி என்ற பட்டிணத்தை உருவாக்கினாராம். 
சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் போற்றி வழிபட்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயம், திட்டக்குடி வைத்தியநாதன் கோவில். இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னன் பெருமளவில் இக்கோவில் திருப்பணிகள் செய்துள்ளதாக வரலாறு உண்டு. இதை தொடர்ந்து, ராஜேந்திர சோழன், ராஜராஜசோழன், சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களும், விஜய நகர சாம்ராஜ்யத்தின் வீரகண்ண உடையார், பூபதிராய உடையார் ஆகியோரும் அவரவர் ஆட்சியின் போது திருப்பணிகள் செய்துள்ளார்களாம். இருப்பினும், வசிஷ்டரின் முழு ஆலோசனைப்படி கோவில் கட்டப்பட்டது. இதனால் வசிஷ்டர் உருவாக்கிய தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாய் எழுந்து நிற்க, உள்ளே கொடிமரம், பலிபீடம், பெரிய வடிவிலான நந்திதேவர் காட்சி தருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தைப் போல இங்கும் அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ளன. முதல் பிரகாரத்தில் அறுபத்துமூவர், எமலிங்கம், நிருதிலிங்கம், சப்தமாதர்கள் அமைந்துள்ளனர். கருவறை உள் மண்டபத்தில் நவக்கிரகங்கள், பின்புற வளாகத்தில் வனதுர்க்கை சன்னிதிகள் உள்ளன. அம்மன் கோவில் பின்புற வளாகத்தில் பல்லவர் கால விநாயகர் கோவில் மற்றும் முருகன் கோவில்கள் அமைந்துள்ளன. இறைவன் தனிச் சன்னிதியாகக் கிழக்கு முகமாய் ஒளிவீசும் பெரிய அளவிலான வடிவம் கொண்டு காட்சியளிக்கிறார். வெளிப்புறம் உயர்ந்து நிற்கும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர். இறைவிக்கு தனித் திருக்கோவில் வலது புறம் அமைந்துள்ளது. தனி கோபுரம், கொடி மரம் ஆகியன உள்ளன. அன்னை பெரிய வடிவத்தில் அழகான தோற்றம் கொண்டு, கம்பீரமாக காட்சி வழங்குகிறாள். கருவறைக் கோட்டத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.  கோவிலில் விநாயகர், பாலசுப்பிரமணியன், பன்னிருமுருகன், சனீஸ்வரர், துர்க்கை, சப்த கன்னிகள், எமலிங்கம், நாகதேவ லிங்கம், வாயு லிங்கம், வர்ண லிங்கம், அண்ணாமலையார், தட்சிணாமூர்த்தி, சட்டநாதர், சண்டீகேஸ்வரி, குபேர லிங்கம், கஜலட்சுமி,பல்லவ பாலசுப்பிரமணியன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனி சன்னிதி உள்ளது. இதுதவிர கோவிலில் திருமஞ்சன கிணறும், குபேர லிங்க மண்டபமும் உள்ளது. பிரம்மன் சிலை இரு காந்தவர்களுடன் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இக்கோவிலில் அம்மன், சிவபெருமானின் வலது புறம் வீற்றிருக்கிறார். மேலும், அம்மன் பாதம், சிவபெருமானை நோக்கி சற்று திரும்பியவாறு அமைந்துள்ளது சிறப்பாகும். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 
தீராத நோய்வாய்ப்டடவர்கள் இங்கு வந்து வைத்தியநாத சுவாமியையும் , அசனாம்பிகை அம்மனையும் வழிபட்டால் நோய் குணமடையும். கண் இழந்த குலோத்துங்க சோழன் கண் பார்வை பெற்றது , ராமன் பிரம்மஃகத்தி தோஷம் நீங்கப் பெற்றதும் இத்தலத்தில்தான்.  இந்த ஆலயத்தில் ஆடி மாதத்தில் நடைபெறும் 10 நாள் பிரம்மோற்சவமும், பங்குனி மாதத்தில் தேரோட்டத்துடன் நடைபெறும் 10 நாள் உற்சவமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இது தவிர ஏனைய சிவ ஆலயங்களில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளும், விழாக்களும் இந்த ஆலயத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், ஆடிப்பூரம், நவராத்திரி, மகாசிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
 காலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி 
அருகிலுள்ள ரயில் நிலையம் : விருத்தாசலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×