ஒரத்தூர்

	


		
 
	
 
7:34:48 AM         Thursday, February 25, 2021

ஒரத்தூர்

ஒரத்தூர்
ஒரத்தூர் ஒரத்தூர் ஒரத்தூர் ஒரத்தூர் ஒரத்தூர் ஒரத்தூர் ஒரத்தூர் ஒரத்தூர் ஒரத்தூர் ஒரத்தூர்
Product Code: ஒரத்தூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                      ஒரத்தூர், மார்க்கசகாயேசுவரர் 

திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் ஒரத்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறத்தில் இக்கோயில் உள்ளது.

இறைவன் : மார்க்கசகாயேசுவரர்

இறைவி  : மரகதவல்லி

தல தீர்த்தம் : வெள்ளாறு

கோவில் அமைப்பு :  திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் அமைப்பில் சனீசுவரர் கிழக்கு நோக்கிய நிலையில் சன்னதியின் முன் புறம் உள்ளார். சித்தி விநாயகர், கஜலட்சுமி, சண்டிகேசுவரர், நவக்கிரகம், பைரவர, சூரியன் ஆகியோர் திருச்சுற்றில் உள்ளனர். இறைவி தெற்கு நோக்கிய நிலையில் தனி சன்னதியில் உள்ளார். முன் மண்டபத்தில் நடராசர் சன்னதி உள்ளது. இவரது பாதத்திற்கு கீழேயுள்ள முயலகன், முகத்தைத் தூக்கி, சுவாமியின் பாதத்தை பார்த்தபடி இருக்கிறான். மார்கழி திருவாதிரையன்று நடராஜருக்கு விசேஷ பூஜை நடக்கும். பிரகாரத்தில் உள்ள நால்வர் சன்னதியில் குருபூஜை வைபவம் விசேஷமாக நடக்கும். பங்குனி உத்திரத்தன்று முருகன் புறப்பாடாவார். சித்தி விநாயகர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகம், பைரவர், சூரியன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் அமைப்பில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி சன்னதியின் முன்புறம் இருக்கிறார். இங்கிருந்து 7 கி.மீ., தூரத்தில் மகான் ராகவேந்திரர் அவதரித்த புவனகிரி உள்ளது.

தல வரலாறு : திருத்தல யாத்திரை சென்ற சுந்தரர், விருத்தாச்சலம் சென்றார். அவர் இத்தலத்தைக் கடந்தபோது வழி தெரியவில்லை. எனவே, ஓரிடத்தில் அப்படியே நின்று விட்டார். தனக்கு வழி காட்டும்படி சிவனை வேண்டினார். அப்போது, அவர் முன் வந்த முதியவர் ஒருவர், “அடியவரே, காட்டுப்பாதையில் பாதியிலேயே நின்று விட்டீரே. எங்கு போகவேண்டும்’ என விசாரித்தார். அவர் தனக்கு பாதை தெரியாததைச் சொன்னார். முதியவர் அவரிடம் தான் வழி காட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். கூடலையாற்றூர் தலம் வரையில் அவருடன் சென்று, அங்கிருந்து வழியைக் காட்டினார். சுந்தரர் அவருக்கு நன்றி சொல்ல முயன்றபோது, அவர் மறைந்து விட்டார். அவர் குழப்பமாக நின்றவேளையில், சிவன் தானே வந்து வழி காட்டியதை உணர்த்தினார். மகிழ்ந்த சுந்தரர் பதிகம் பாடினார். சுந்தரருக்கு வழிகாட்டிய சிவன் இத்தலத்தில் அருளுகிறார். மார்க்கம் என்றால் வழி. எனவே, இத்தல இறைவனுக்கு “மார்க்கசகாயேஸ்வரர்’ என்று பெயர். வழித்துணைநாதர் என்றும் இவருக்குப் பெயருண்டு.

இவ்வூரின் எல்லையில் ஓடும் வெள்ளாறு நதி, இங்கு மட்டும் வளைந்து ஓடுகிறது. இந்நதிக்கரையில் அமைந்த கோயில் இது. வாழ்க்கை மீதான பயம் உள்ளோர் தெளிவு கிடைக்க, தங்கள் நட்சத்திர நாள் அல்லது ஏதேனும் ஒரு திங்களன்று இங்கு வந்து, சிவன் சன்னதியில் நெய் தீபமேற்றி, சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள். வாழ்வில் திசை தெரியாமல், குழப்பத்தில் இருப்போர் மனக்குறை நீங்கி, நிம்மதி பெறுவதற்காக வழிபட வேண்டிய விசேஷ தலம் இது. அம்பாள் மரகதவல்லி  நவராத்திரி நாட்களில்  ஊஞ்சலில் எழுந்தருளி காட்சி தருவாள். இந்நாட்களில் இவளுக்கு அபிராமி அந்தாதி பாடி விசேஷ பூஜை நடக்கும். ஆடி, தை வெள்ளியில் இவளுக்கு விளக்கு பூஜை நடக்கும்.  சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிசேகம், மார்கழியில் திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.  பயம் போக, மனக்குறை நீங்கி நிம்மதி பெற வழிபட வேண்டிய தலம். நெய் தீபமேற்றி, சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி 

அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×