சிதம்பரம் ஆத்மநாதசுவாமி





	


	



























	




 




	








 




8:20:34 AM         Thursday, February 25, 2021

சிதம்பரம் ஆத்மநாதசுவாமி

சிதம்பரம் ஆத்மநாதசுவாமி
சிதம்பரம் ஆத்மநாதசுவாமி சிதம்பரம் ஆத்மநாதசுவாமி சிதம்பரம் ஆத்மநாதசுவாமி சிதம்பரம் ஆத்மநாதசுவாமி சிதம்பரம் ஆத்மநாதசுவாமி சிதம்பரம் ஆத்மநாதசுவாமி சிதம்பரம் ஆத்மநாதசுவாமி சிதம்பரம் ஆத்மநாதசுவாமி சிதம்பரம் ஆத்மநாதசுவாமி சிதம்பரம் ஆத்மநாதசுவாமி
Product Code: சிதம்பரம் ஆத்மநாதசுவாமி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                         சிதம்பரம் ஆத்மநாதசுவாமி 

திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் தில்லைவனம் என்றழைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறத்தில் இக்கோயில் உள்ளது

இறைவன் : ஆத்மநாதசுவாமி 

இறைவி : யோகாம்பாள்

தல தீர்த்தம் : பாற்கடல்

தல சிறப்புகள் : இக்கோயில் திருப்பெருந்துறையை பல வகையிலும் ஒத்திருக்கிறது. கருவறையில் சிவலிங்கம் தெற்கு நோக்கி உள்ளது. இந்த இலிங்கம் முழுமையானதாக இல்லை. அம்பாள் சன்னதியில் பாதம் மட்டும் இருக்கிறது.  நடராசரின் நடனத்தைக் காண வந்த வியாக்ரபாதர் சிதம்பரத்தில் தங்கியிருந்தபோது அவருடைய குழந்தை பசியால் அழுததாகவும், சிவன் அக்குழந்தைக்காகப் பாற்கடலை இங்கு பொங்கச் செய்ததாகவும் கூறுவர். 

கோவில் அமைப்பு :  மாணிக்கவாசகர் இங்கு குரு அம்சமாகக் காட்சியளிக்கிறார். மாணிக்கவாசகர் கட்டிய கோயிலாக இதனைக் கூறுகின்றனர். திருச்சுற்றில் விநாயகர், துர்க்கை, நந்தி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கோயில் முன் மண்டபத்தில் யோக தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கிய நிலையில் உள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் லிங்க பாண வடிவில் காணப்படுகின்றனர். யோக விநாயகர், அகோர வீரபத்திரர், பைரவர் ஆகியோரும் உள்ளனர்.  மாணிக்கவாசகர் சின்முத்திரை காட்டி குரு அம்சத்துடன் காட்சியளிக்கிறார். அநேகமாக எல்லா தலங்களிலும் நின்ற நிலையில் இருக்கும் மாணிக்கவாசகர், இங்கே அமர்ந்திருக்கிறார். பாற்கடல் தீர்த்தம் எனப்படும் தீர்த்தத்தின் வட கரையில் கோயில் அமைந்துள்ளது.

தல வரலாறு : சிவனடியார்களால் பெரிதும் போற்றப்படுவது திருவாசகம். “திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்னும் சொல் வழக்கே இதற்குச் சான்று. இதை இயற்றிய மாணிக்கவாசகப் பெருமான், சிதம்பரத்திலுள்ள தில்லை திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி கோயிலில் குரு அம்சமாகக் காட்சியளிக்கிறார். மாணிக்கவாசகரே கட்டிய கோயில் இது.

மதுரையில் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர், திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவிலில் சிவனிடம் உபதேசம் பெற்றார். இவருக்காக சிவபெருமான் மதுரையில் நரிகளை பரிகளாக்கியும், வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தும் திருவிளையாடல் நிகழ்த்தினார். இவர் ஒருமுறை சிதம்பரம் வந்தார். முனிவர்கள் தங்கியிருந்த ஒரு பர்ணசாலையில் தங்கினார். ஆனாலும், திருப்பெருந்துறை ஆத்மநாதரை அவரால் மறக்க முடியவில்லை. எனவே, இங்கும் ஆத்மநாதருக்கு அளவில் சிறிய கோயில் கட்டினார். சுவாமிக்கு ஆத்மநாதர் என்றும், அம்பிகைக்கு யோகாம்பாள் என்றும் பெயர் சூட்டினார். இத்தலம்“தில்லை திருப்பெருந்துறை” என்றழைக்கப்பட்டது.

மாணிக்கவாசகர் இங்கு தங்கியிருந்தபோது, சிவன் அடியார் வேடத்தில் வந்து, அவரது பாடல்களைக் கேட்க விரும்புவதாக கூறினார். மாணிக்கவாசகரும் பாடினார். சிவன் அந்தப் பாடல்களைத் தொகுத்து “இப்பாடல்கள் மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளியவண்ணம் எழுதப்பட்டது” என எழுதி “திருச்சிற்றம்பலம் உடையார்” என கையெழுத்திட்டார். மறுநாள் அதை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் வைத்துவிட்டு மறைந்தார். வேத பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் திருவாசகத்திற்கு விளக்கம் கேட்டனர். அப்போது சிவனே ஒரு அடியாராக வந்தார். பண்டிதர்களிடம் சிவனைக்காட்டிய மாணிக்கவாசகர், “இவரே இதற்கான பொருள்” என்று சொல்லி அவருடன் இரண்டறக் கலந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் ஆத்மநாதர் சன்னதி முகப்பில் சிவன், அடியார் வடிவில் காட்சியளிக்கிறார். அருகில் மாணிக்கவாசகர் அவரை நோக்கி கை காட்டியபடி இருக்கிறார்.

மாணிக்கவாசகர் சிவ பூசையன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது. மாணிக்கவாசகர் இறைவன் சன்னதியுள் எழுந்தருளி இறைவனுடன் இரண்டறக் கலக்கும் நிகழ்ச்சி நடைபெறும். சிவனுக்கு புழுங்கல் அரிசி சாத ஆவி, பாகற்காய் நிவேதனம் செய்கின்றனர். மாணிக்கவாசகர் குருபூஜையன்று ஆத்மநாத சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று மதியம் மாணிக்கவாசகர், ஆத்மநாதர் சன்னதிக்குள் எழுந்தருளி சிவனுடன் இரண்டறக்கலக்கும் வைபவம் நடக்கும். தவம் செய்யவும், முக்தி கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி 

அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×