உடையவர் தீயனூர்





	


	



























	




 




	








 




4:46:35 AM         Monday, March 08, 2021

உடையவர் தீயனூர்

உடையவர் தீயனூர்
உடையவர் தீயனூர் உடையவர் தீயனூர் உடையவர் தீயனூர் உடையவர் தீயனூர் உடையவர் தீயனூர் உடையவர் தீயனூர்
Product Code: உடையவர் தீயனூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                    உடையவர் தீயனூர், ஜமதக்னீஸ்வரர்
 
திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள பழைமையான தேவார வைப்புத் தலம். அரியலூரிலிருந்து 28 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. அரியலூரிலிருந்து வாரனவாசி, பளுவூர், பொய்யூர் வழியாகவும், அயனாத்தூர், தெலூர் வழியாகவும் இரண்டு வழித்தடங்களில் இந்த இடத்தை அடையலாம்.
 
இறைவன் : ஜமதக்னீஸ்வரர்
 
இறைவி : அமிர்தாம்பிகை
 
தல தீர்த்தம்  : அக்னி தீர்த்தம்
 
தல விருட்சம் : வில்வம்
 
தல சிறப்புகள் : மூலவர் ஜமதக்னீஸ்வரர் கருங்கல்லால் ஆன சதுரவடிவில் அமைந்த பலகை போன்ற பீடத்தின்மேல் சிவலிங்கத் திருமேனியராகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூவகை சிறப்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புதத்தலம். 
 
தல வரலாறு : இந்த ஊர் புராணகாலத்தில் வெப்பம் மிகுந்த பிரதேசமாக இருந்ததால் தீயனூர் என்று அழைக்கப்பட்டது. இங்கு வில்வமரங்கள் நிறைய இருந்தன. இதனால் வில்வாரண்யம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் ஜமதக்னி எனும் முனிவர் ஒருவர் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கினார். இதே இடத்தில்தான் தற்போது இந்த கோயில் அமைந்துள்ளது.  இந்த ஊருக்கு புராண காலத்தில் வில்வாரண்யம் என்று பெயர். தற்போது உடையவர் தீயனூர் பெருமாள் தீயனூர் என்று இரண்டுஊர்கள் அடுத்தடுத்து உள்ளன. சிவன்கோயில் அமைந்துள்ள பகுதி, உடையவர் தீயனூர், விஷ்ணு கோயில் அமைந்துள்ள பகுதி, பெருமாள் தீயனூர் சிவனை உடையார் எனவும், விஷ்ணுவை பெருமாள் எனவும் வழங்குவதை ஒட்டி இப்படி ஊர் பெயர்கள் அமைந்து விட்டனவாம். பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித் தலமாக திகழ்வது திருவண்ணாமலை இங்குள்ள இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்றும், தலத்துக்கு அக்னீச்சுரம் என்றும் பெயருள்ளதால் இதுவும் திருவண்ணாமலைக்கு உரிய சிறப்புகள் கொண்ட தலமாக கருதப்படுகிறது.
 
கோவில் அமைப்பு :  இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவர் வில்வ மரங்கள் நிறைந்து வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். இதனால் இத்தல சிவபெருமான் ஜமதக்னீஸ்வரர் என்றழைக்கப்பட்டார். விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் கோஷ்ட நாயகர்கள் காணப்படுகின்றனர். அன்னை அமிர்தாம்பிகை சன்னதியின் விமானம் கூம்புவடிவ அமைப்பில் உள்ளது. தலையில் அழகிய கரண்ட மகுடம் அலங்கரிக்க, இரண்டு காதுகளிலும் பத்ர, மகர குண்டலங்கள், கழுத்தில் அழகிய தாலி, கைகளில் வளையல், கால்களில் சதங்கை என அணிமணிகள், மேல் வலது கையில் அட்சமாலை, இடது கையில் நீலோற்பவ மலர், முன் வலக்கையை அபயமுத்திரையுடனும், இடக்கையை தொடையில் ஊன்றியவாரும் அம்மன் காட்சி தருகிறார்.
 
ஊரின் வடகிழக்கு மூலையில் கிழக்கு திசையை நோக்கியபடி அமைந்துள்ளது ஜமதக்னீஸ்வரர் ஆலயம். கோயிலின் முன் அழகிய பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. கோயிலின் நுழைவு வாயிலில் வெள்ளைக்கல்லினால் கட்டப்பெற்ற கோபுரம் அமைந்து ள்ளது. அடித்தளம் மட்டும் கட்டப்பெற்று மேல்பகுதி மொட்டையாக விடப்பட்டுள்ளது. கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் மகா மண்டபமும் அதையடுத்து அமிர்தாம்பிகை சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. முகத்தில் சாந்தமும்ம, புன்னகையும் தவழ எழில்மிக்க கோலத்தில் இறைவி அமிர்தாம்பிகை காட்சி தருகிறாள். அம்மன் சன்னதியின் முன்புறம் வடகீழ் மூலையில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் தேவார மூவர், விநாயகர், நந்திதேவர் சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தை கடந்து சென்றால் அர்த்த மண்டபமும் அதைத்தாண்டி கருவறையும் காணப்படுகிறது. கருவறை கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரம் அர்த்த மண்டப கோஜ்டத்தில் விநாயகர், துர்க்கையின் வாகனமான எருமை தலையும் உள்ளது. துர்க்கையின் வாகனமான எருமை தலையும் உள்ளது. துர்க்கையின் சிற்பத்திற்கு மாறாக சிறிய அளவில் லிங்கோத்பவர் சிற்பம் எருமை தலையின் மேல் வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு பின்புறம் மேற்கு திசையில் அக்னி தீர்த்தம் என்னும் திருக்குளம் அமைந்துள்ளது.\
 
1000 வருடங்கள் வரை பழமையானதாக கருதப்படும் இந்த கோயிலுக்கு சென்றால் குழந்தையின்மை நீங்கி குழந்தை பிறக்குமாம்.  பிரதோச நாள்களில் மிகச் சிறப்பானதாக இருக்கும். மேலும் இந்த கோயிலில் கொண்டாடப்படும் மற்றொரு திருவிழா மகாசிவராத்திரி ஆகும். வயிற்று பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், கண்களில் பிரச்னை இருப்பவர்கள் அனைவரும் அந்தந்த நோய்களிலிருந்து விடுபட இங்குள்ள மூலவரை வழிபடுகின்றனர். இங்குள்ள மூலவரை வணங்கினால் குழந்தை இன்மை, திருமணத் தடை ஆகியன நீங்கும். பல்வேறு நோய்களிலிருந்து விடுபட விரும்புபவர்கள் இங்கு வருவதாக நேர்ச்சை செய்கின்றனர். இதனால் தங்களுக்கு இந்த இறைவனின் அருள் கிடைப்பதாக நம்புகின்றனர் பக்தர்கள். அப்படி வேண்டியவற்றை நிறைவேற்றினால், நேர்த்திக்கடனாக இந்த கோயிலுக்கு வந்து சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
 
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையும்,  மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சிராப்பள்ளி 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : அரியலூர்
 
பேருந்து வசதி  : உண்டு 
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு
Mail this page Printable view
×
×
×
×
×
×
×