சத்திரம்

	


		
 
	
 
7:41:18 AM         Thursday, February 25, 2021

சத்திரம்

சத்திரம்
Product Code: சத்திரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                சத்திரம், காசி விசுவநாதர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் இக்கோயில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் சத்திரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன் : காசி விசுவநாதர்

இறைவி :  அன்னபூரணி

தல தீர்த்தம்  : தீர்த்தக்கிணறு

தலச் சிறப்புகள் :  சிவபெருமான் அன்னபூரணியுடன் இருப்பது சிறப்பாகும். காசியின் நேர்பார்வையில் அமைந்துள்ளது. முன்மண்டபத்தில் கொடிமரம் உள்ளது. தென் முகம் திரும்பி அன்னபூரணி அம்மனை தரிசிக்கும் படியாக அமர்ந்த நிலையில் நந்தீஸ்வர் அமைந்துள்ளது. வடக்கு திசை நோக்கி அம்மன் சந்நதி உள்ளது.

கோவில் அமைப்பு : சுமார் 1100 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் என்பதை கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது. காசியின் நேர்ப் பார்வையில் இக்கோயில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். முன் மண்டபத்தை அடுத்து கொடி மரம் காணப்படுகிறது. தென் திசை நோக்கி இறைவியை தரிசிக்கும் வகையில் நந்தி காணப்படுகிறது. அருகில் மூலவர் சன்னதி உள்ளது. இறைவி சன்னதி வடக்கு நோக்கி உள்ளது. இங்கு நவக்கிரகங்கள் காணப்படவில்லை. சப்த கன்னியருடன் தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. சனீசுவரர், கால பைரவர், கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன் ஆகியோர் உள்ளனர்.  கோவிலின் உள்ளே தீர்த்த கிணறும் உள்ளது.

சிவராத்திரி, வைகாசி பெருவிழா, பௌர்ணமி,  பிரதோஷ நாளில் தரிசிப்பது நல்லது. எதிர்காலம் சிறக்க பக்தர்கள் மூலவரையும், அம்மனையும் வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மூலவர் மற்றும் அம்மனுக்கு புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் :  மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : சிவகாசி, விருதுநகர் 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×