முடுக்கங்குளம்

	


		
 
	
 
1:40:37 PM         Friday, May 14, 2021

முடுக்கங்குளம்

முடுக்கங்குளம்
முடுக்கங்குளம் முடுக்கங்குளம் முடுக்கங்குளம் முடுக்கங்குளம் முடுக்கங்குளம் முடுக்கங்குளம்
Product Code: முடுக்கங்குளம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                               முடுக்கங்குளம், அம்பலவாணர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள முடுக்கங்குளம் பகுதியில் அமைந்துள்ளது 

இறைவன் : அம்பலவாணர்

இறைவி :  சிவகாமசுந்தரி 

தல தீர்த்தம்  : சிவகாமி புஷ்கரணி

தலச் சிறப்புகள் :   மகாசிவராத்திரி அன்று மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புதமான காட்சியைக் காணலாம். இதற்காக பலகணி என்னும் கல்சாளரம் ஒன்று மூலவரின் சந்நிதி எதிரே உள்ளது. மண்டோதரி இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து வந்தாள். சிவபக்தனான ராவணனைத் திருமணம் செய்யும் பாக்கியம் பெற்றாள். சிதம்பரம் நடராஜரின் திருநாமமான அம்பலவாணர் என்ற பெயர் சுவாமிக்கு சூட்டப்பட்டுள்ளது. அதுபோல அம்பாளுக்கும், சிவகாம சுந்தரி என்ற பெயர் உள்ளது. 

கோவில் அமைப்பு :  பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில். ஆறுகால் மண்டபம் , பைரவர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. இங்கு சிவகாமி புஷ்கரணி தீர்த்தக்குளம் உள்ளது. கோயிலுக்குள் சதுர கிணறு ஒன்றும் உள்ளது. கோயில் வாசலில் வடக்கு முகமாக வீற்றிருக்கும் கல்யாண விநாயகர், கல்யாண வரம் அருள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.  பண்டைய காலத்தில் இந்த கோயிலுக்கும், மதுரை மீனாட்சியம்மன்  கோயிலுக்கும் சுரங்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மண்டோதரி, தனது திருமணம் நடக்க அம்பலவாணரை வணங்கி அருள் பெற்றதால், இந்த கோயில் கல்யாணத் தலமாக விளங்குகிறது. முடுக்கங்குளம் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள், இங்கு அதிகளவில் திருமணங்களை நடத்துகின்றனர்.

தல வரலாறு : அம்பலவாணர் கோயில் முற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயில் கட்டப்பட்ட ஆண்டு, கட்டிய மன்னர் குறித்து விபரம் தெரியவில்லை. பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதற்கான அடையாளமாக கோயில் வளாகத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மூலவருக்கு சிதம்பரம் நடராஜரின் திருநாமமான அம்பலவாணர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அம்மனும் சிவகாமசுந்தரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.இலங்கையை ஆண்ட ராவணனின் மனைவி மண்டோதரி. இவர் திருமணத்திற்கு முன்பு, திருமணத் தடை நீங்க வேண்டி அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரை நாடினார். முடுக்கங்குளத்தில் வீற்றிருக்கும் அம்பலவாணரை பூஜிக்குமாறு மண்டோதரியிடம், சுக்ராச்சாரியார் தெரிவித்தார். இதன்படி மண்ேடாதரியும் அம்பலவாணர் கோயில் முன்புள்ள குளத்தில் நீராடி, மூலவரை வணங்கி வழிபட்டாள். இதனால் மகிழ்ந்த அம்பலவாணர், சிவபக்தனான ராவணனை திருமணம் செய்யும் பாக்கியத்தை மண்டோதரிக்கு வழங்கினார் என்பது புராணம்.

சூரியதிசை, சூரியபுத்தி நடப்பில் உள்ளவர்கள் அம்பலவாணசுவாமியை மாத சிவராத்திரி, பிரதோஷ நாளில் தரிசிப்பது நல்லது. அரசுப்பணியில் உள்ளவர்களுக்கும், அரசியல்வாழ்வில் இடைஞ்சலைக் களைந்து முன்னேற விரும்புபவர்களுக்கும் இக்கோயில் வழிபாடு நன்மை தரும்.  சிவராத்திரி, பிரதோஷம், மார்கழி மாத விழா உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்கள். சூரியதிசை, சூரியபுத்தி உள்ளவர்கள் அம்பலவாணரை மாத சிவராத்திரி, பிரதோஷ நாளில் தரிசிப்பது நல்லது. எதிர்காலம் சிறக்க பக்தர்கள் மூலவரையும், அம்மனையும் வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மூலவர் மற்றும் அம்மனுக்கு புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : விருதுநகர்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×