அக்கராப்பாளையம்

	


		
 
	
 
8:08:32 AM         Thursday, February 25, 2021

அக்கராப்பாளையம்

அக்கராப்பாளையம்
Product Code: அக்கராப்பாளையம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                          அக்ராபாளையம், மார்க்கசகாயீஸ்வரர் 

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலையில் இருந்து  வேலூர் செல்லும் வழியில், சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன் :  ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர்

இறைவி : ஸ்ரீமரகதாம்பிகை

தல சிறப்புகள் : பொதுவாகவே கோயிலின் வாசற்படி கிழக்கு நோக்கி அமைந்து இருக்கும்.ஆனால் பரிகார தளங்களில் மட்டும் கோயிலின் வாசற்படி தெற்கு நோக்கி அமைந்து இருக்கும். இக்கோயிலின் வாசற்படி தெற்கு நோக்கி அமைந்து பரிகாரதலமாக விளங்குகின்றது.குறிப்பாக நீண்ட நாட்களாக திருமண தடை , குழந்தை பேறு இல்லாமை போன்றவற்றிற்கு இத்தலம் சிறந்த பரிகார தலமாக விளங்குகின்றது.  இக்கோயிலில் மார்கசகாயஈஸ்வரர், அபிதாகுஜாம்பாள் சன்னதிகளும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன.  நல்ல விஷயங்களைத் தந்தருளும் ஈசன் வீற்றிருக்கிறான் என்பதால், இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர் எனத் திருநாமம் சூட்டப்பட்டது.

தல வரலாறு : சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கித் திளைத்தான். ‘இந்த இடம் மிகவும் சாந்நித்தியமான இடம். இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன’ என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல மகிழ்ந்து போனான் மன்னன். அப்படியென்றால், இங்கே அருமையானதொரு சிவாலயத்தைக் கட்டுங்கள். நம் தேசத்து மக்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ, நம் வாழ்க்கைப் பயணம் எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் நம் வழித் துணையாக சிவனார் வரட்டும். வழியில் ஏதும் சிக்கல்களோ பிரச்னைகளோ வராமல் இருக்கவும், சரியான வழி எது என்று நமக்குக் காட்டவும் அந்தத் தென்னாடுடைய ஈசன் அருள் புரியட்டும் என்று மன்னன் மனத்துள் வேண்டிக்கொண்டு உத்தரவிட்டான்.அதன்படி, அந்த வனப்பகுதியின் ஓரிடத்தில், சுபயோக சுபதினமான ஒரு முகூர்த்த நாளில் பூமி பூஜை போடப்பட்டது. அஸ்திவாரம் தோண்டப் பட்டது. கற்கள் இறக்கப்பட்டன. சிற்பிகள் வந்திறங்கினார்கள். மளமளவென அங்கே கோயில் எழும்பியது.

இந்த ஊரின் மையத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர். அம்பாளின்  ஸ்ரீமரகதாம்பிகை அவளின் கண்களில் அப்படியொரு மரகத ஒளி மின்னுவதை உணர்ந்து சிலிர்த்தபடி ஆலயத்தை வலம் வந்தால், நம் கண்ணில் நீர் ததும்பித் திரையிடும். ஒருகாலத்தில் மிகப் பிரமாண்டமாக இருந்த கோயில், இன்றைக்குப் பிராகார வலம் வரமுடியாதபடி, முள்ளும் புதரும் முளைத்துக் கிடக்கிறது.

திருவண்ணாமலையில், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறத் துவங்கிவிட்டால் வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு எனப் பல ஊர்களில் இருந்து மாட்டு வண்டி கட்டிக்கொண்டு புறப்படும் பக்தர்கள், வழியில் உள்ள தலங்களைத் தரிசித்தபடியே திருவண்ணாமலை நோக்கிச் செல்வார்களாம். அப்படிச் செல்கிறபோது, ஆரணியை அடுத்த அக்ராபாளையம் சிவாலயத்துக்கும் வந்து, அன்றிரவு அங்கேயே தங்கி, மறுநாள்தான் கிளம்பிச் செல்வார்களாம். அப்போது, ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள் செய்து, ருத்ரம் சொல்லி வழிபாடுகள் நடைபெறும். பிறகு, விடிய விடிய அன்னதானம் நடைபெறும். அதையடுத்து, அந்த பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டுச் செல்வார்கள். காலப்போக்கில், கோயிலும் கோயிலுக்குச் செல்லும் வழியும் உருமாறிப் போனது. மெள்ள மெள்ள வழிபாடுகளும் குறைந்து, பூஜைகளும் நின்று, திருவீதியுலாக்களும் இல்லாமல் போய்விட்டது என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  விழுப்புரம் , மேல்மருவத்தூர், திண்டிவனம் 

பேருந்து வசதி  : உண்டு   

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×