நார்த்தாம்பூண்டி

	


		
 
	
 
7:39:33 AM         Thursday, February 25, 2021

நார்த்தாம்பூண்டி

நார்த்தாம்பூண்டி
நார்த்தாம்பூண்டி நார்த்தாம்பூண்டி நார்த்தாம்பூண்டி நார்த்தாம்பூண்டி நார்த்தாம்பூண்டி நார்த்தாம்பூண்டி நார்த்தாம்பூண்டி நார்த்தாம்பூண்டி நார்த்தாம்பூண்டி
Product Code: நார்த்தாம்பூண்டி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                              நார்த்தம்பூண்டி, கைலாசநாதர் 
 
திருத்தல அமைவிடம் :இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டம்  போளூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் நாயுடுமங்கலம் கூட்டுரோட்டில் இறங்கி, மேற்கு நோக்கி 5 கி.மீ. பயணித்து இத்தலத்தை அடையலாம். 
 
இறைவன் :  கைலாசநாதர்
 
இறைவி : பெரியநாயகி, உமையம்மை
 
தல மரம்  : இலந்தை 
 
தல சிறப்புகள் : நாரதர் இலந்தை மரத்தினடியில் தவமிருந்து, ஈசனை வழிபட்ட திருத்தலம். நாரத முனிவர், சேயாற்றின் தென்கரையில் உள்ள இத்திருத்தலத்தில், இலந்தை மரத்தினடியில் பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருந்து எம்பெருமானின் தரிசனமும், சாபவிமோதனமும் பெற்றார். "நாரதபூண்டி'யாகத் திகழ்ந்த ஊர் மருவி, நார்த்தாம்பூண்டி ஆகிவிட்டது. 
 
தல வரலாறு : சிவபெருமானிடம் இடப்பாகத்தைப் பெறவேண்டி காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்ட உமையம்மை திருவண்ணாமலை நோக்கி செல்லும் போது வாழைப்பந்தல் என்ற இடத்தில் தங்கினாள். அங்கு சிவலிங்க வழிபாடு செய்வதற்காக இலிங்கத்தை தேடி அலைந்தாள். இலிங்கம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மணலால் ஆன இலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய தீர்மானித்தாள். லிங்கத்தை வடிப்பதற்கு தண்ணீர் தேவைப்பட்டது. எனவே முருகனை வரவழைத்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்யும்படி சொன்னாள். முருகன் தனது வேலாயுதத்தை மேல் திசைநோக்கி வீசினார். அங்கிருந்த மலைகுன்றுகளை பிளந்த வேல் செந்நீரை கொண்டு வந்தது. அந்த மலையில் புத்திராண்டன், புருகூதன், பாண்டுரங்கன், போதவான், போதன், கோமன், வாமன் ஆகிய ஏழு முனிவர்கள் தவமிருந்து வந்தனர். முருகன் வீசியவேல் அந்த ஏழு முனிவர்களையும் ஊடுருவிச் சென்றதால் ரத்தம் கொட்டி செந்நீராக வந்தது. அதே நேரம் முருகனின் திருவேல் பட்ட புனிதத்தால் அந்த ஏழு பேரும் சாபவிமோசனம் பெற்று முக்தி அடைந்தனர். பின்பு உமையம்மை சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஏழு பேரை கொன்ற பாவம் முருகனை பிடித்தது. இந்த பாவம் தீர அம்பாளின் அறிவுரைப்படி முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் ஏழு கோயில்களையும், தென்கரையில் ஏழு கோயில்களையும் ஏற்படுத்தினார்.
 
காஞ்சிபுரம், கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகியவை வடகரையில் உள்ள சப்த கரை கண்டங்கள் என அழைக்கப்பட்டன. தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு, நார்த்தம்பூண்டி, தென்பன்றிப்பட்டு, பழங்கோவில், கரப்பூண்டி, மண்டகுளத்தூர் ஆகியவை தென்கரையில் உள்ள சப்த கைலாயங்கள் எனப்பட்டன. சப்த கைலாயங்களில் மூன்றாவதாக திகழ்வது நாரதர் பூஜித்த நார்த்தம் பூண்டி சிவன் கோயிலாகும். கந்தபுராண வரலாற்றில் இந்த தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. தட்சன் தனது மூன்று பிள்ளைகளை தனக்கு சமமாக ஆக்க விரும்பினார். ஆனால் நாரதர் அவர்களுக்கு சிவானுபோத உபதேசம் செய்து அவர்களை நல்வழிப்படுத்தினார். தனது பிள்ளைகளைத் தன் வழிக்கு வரவிடாமல் தடுத்த நாரதருக்கு, உடல் நிலை கெட தட்சன் சாபம் கொடுத்தான். நாரதர் அந்த சாப நிவர்த்திக்காக நார்த்தம் பூண்டியிலுள்ள கயிலாசநாதரை பூஜித்து 12 ஆண்டு காலம் தவமிருந்தார். இறைவன் பஞ்சமூர்த்திகளோடு ரிஷபவாகனத்தில் நாரதருக்கு காட்சிதந்து சாபத்தை நீக்கினார். பின்பு நாரதர் முருகப்பெருமானை வணங்கி சப்தமுனிவர்களின் தலைமைப்பதவியை அடைந்தார். நாரதரின் பேரால் இவ்வூர் நாரத பூண்டியாக இருந்து காலப்போக்கில் நார்த்தம் பூண்டி என அழைக்கப்படுகிறது. கயிலாசநாதர் கோயிலை சம்புவராயர் மற்றும் வல்லாள மன்னர்கள் கட்டினர். விஜயநகர அரசர்களால் இந்த கோயில் பராமரிக்கப்பட்டு வந்தது.  முருகன் தனது தோஷம் நீங்க சிவபூஜை செய்த தலங்களில் இது மிகவும் முக்கியமான தலமாகும்.
 
கோவில் அமைப்பு : ராஜகோபுரம் இல்லாத குறை அன்பர் ஒருவரின் பெருமுயற்சியால் தீர்ந்து திருப்பணி செய்விக்கப்பட்டு குடமுழுக்கையும் கண்டுள்ளது. கொத்தளத்து விநாயகர் திருமதிலையொட்டி வெளிப்புறம் மேற்கில் அமைந்துள்ளது கொத்தளத்து விநாயகர் சன்னதி. நார்த்தம்பூண்டி பகுதியை ஆண்டுவந்த மன்னன் ஒருவன். போருக்குச் செல்லும்போது, தனது கோட்டை, கொத்தளங்களைக் காத்திடுமாறு விநாயகரை வணங்கிடுவானாம்.ஒருசமயம், ஈசன் தனது மைந்தன் ஆனைமுகனையே தளபதியாகக் கொண்ட யானைப்படையை அவனுக்குத் துணையாக அனுப்பி வெற்றி ஈட்டித் தந்ததால் கொத்தளத்து விநாயகருக்கு தனிச் சன்னதி எழுப்பி மகிழ்ந்தான். மகாமண்டபம், இருபத்தாறு கற்தூண்கள் தாங்கி நிற்கும் அழகிய மண்டபம். அதனையடுத்து ஆறுகால் மண்டபத்தில் "கனகசபை' அமைந்துள்ளது. அடுத்து அர்த்தமண்டபமும், மூலவர் கருவறையும் உள்ளன.
 
நாரதருக்கு அருள்பாலித்த கைலாசநாதர், உயர்ந்த பாணமாக சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மகாமண்டபத்தின் உள்காற்றில் விநாயகர், நால்வர், சப்தமாதர், முருகன் சன்னதிகள் உள்ளன. மூலவரின் வடக்கே, பெரிய நாயகி கிழக்கு நோக்கியபடி நின்ற கோலத்தில் நான்கு கரங்களோடு, அபய வரத முத்திரையோடு காட்சி தருகிறாள்.கோஷ்ட தேவதைகள் அனைத்தும், சிறிய விமானங் கொண்ட சன்னதிகளில் எழுந்தருளியுள்ளதும் தனிச்சிறப்பு. திருஅண்ணாமலையைப் போல, இங்கும் வேணுகோபால சுவாமி எழுந்தருளியிருப்பதும், நார்த்தாம் பூண்டிக்குப் பெருமை சேர்ப்பதாகும். ஆறுமுகப்பெருமானும், வள்ளி தெய்வானையுடன் சன்னதி கொண்டுள்ளார். நாரதர் தவமிருந்த இலந்தை மரம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தழைத்து நிற்கும் இலந்தை மரமே இங்கு தலமரம் ஆகும். நாரத முனிவர் தவமிருக்க, சிறிய சிவலிங்கத் திருமேனியும், அதன் முன்னே நந்தியும், அருகில் கரங்கூப்பி அமர்ந்தபடி நாரத முனிவரையும் காண்கிறோம்.
 
பிரம்மோற்சவம், கிருத்திகை, மாசி மகம் ஆகியவை முக்கியமானவை. திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமான நிலையம் :  சென்னை 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் :  காட்பாடி, வாலாஜா ரோடு, திண்டிவனம் 
 
பேருந்து வசதி  : உண்டு   
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு 
Mail this page Printable view
×
×
×
×
×
×
×