நீலமங்கலம்

	


		
 
	
 
6:17:34 AM         Monday, March 08, 2021

நீலமங்கலம்

நீலமங்கலம்
நீலமங்கலம் நீலமங்கலம் நீலமங்கலம் நீலமங்கலம் நீலமங்கலம் நீலமங்கலம் நீலமங்கலம்
Product Code: நீலமங்கலம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                      நீலமங்கலம், செம்பொற்சோதிநாதர்  

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில்  நீலமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.

இறைவன் : செம்பொற்சோதிநாதர்

உற்சவர் : சிவகாமி, நடராஜர், மாணிக்கவாசகர்,திருநாவுக்கரசர் 

இறைவி : திருநாற்றம்மை 

தல விருட்சம் : வில்வம் 

தல தீர்த்தம் : பாதாள கங்கை 

தலச் சிறப்புகள் : வடக்கு நோக்கிய சன்னதி, அம்மை ஸ்வாமிக்கு வலப்புறம் திகழ்வதால் திருமணக்கோலம் ஆகும். சுவாமி குபேர திசை நோக்கி உள்ளார். சகல யோகங்களும், செல்வங்களும் கிடைக்கும். சுவாமியின் இடப்புறம் வேல் கொண்ட முருகன் இருப்பதால் எமபயம் நீங்கியும், சகல தோஷங்கள் நீங்கும் தலமாகும் விளங்குகிறது. சுவாமிக்கு மிக அருகிலேயே நந்தி இருப்பதால் தீய பழக்கம் உள்ளவர்கள் நீங்கப்பெற்று வாழ்வு பெறுவர்.

கோவில் அமைப்பு : கருங்கல் திருப்பணி, மாடக்கோவில், தரைத்தளம், தெற்கு திசை நோக்கிய நடராஜர், சிவகாமியம்மை, மாணிக்கவாசகர் யாளி ஐந்து படிகளுடன் அமையப்பெற்ற தலமாகும். யாளி தூண்களில் விநாயகர், முருகர், திருஞானசம்பத்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், நீரிலிங்கம், நெருப்பு லிங்கம், காற்றுலிங்கம், ஆகாயலிங்கம், சூர்யலிங்கம், ஆன்ம லிங்கம், சந்திர லிங்கம் என எட்டு லிங்கங்கள் உள்ளன. விமானம் 31 அடி உயரமும், கருவறை 24 அடி  உயரமும் 9.6 அடி நீள அகலம் கொண்டதாக உள்ளது.

தல வரலாறு : 250 ஆண்டுகளுக்கு முன் சாமியார் ஒருவர் தனது சொந்த நிலத்தில் சிவாலயம் அமைத்து தினமும் அன்னதானம் வழங்கினார். இவ்விடம் சாமியார் மடம் என விளங்கியது. தினமும் அன்னதானம் முடிந்ததும் இரவு ஊருக்குள் தனது கையை பிட்சை பாத்திரமாக கருதி பிட்சை எடுத்து சாப்பிட்டதால் கரபாத்திர சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். இப்பகுதி மக்கள் குழந்தைகளுக்கு நோய் நொடி வந்தால் இம்மண்ணை எடுத்து பூச நீங்கும் என்று கருதுகின்றனர். கரபாத்திர சுவாமிகள் சமாதி தலத்தில் உள்ளது. இவரது வாரிசுகள் இன்றும் வாழ்ந்து கொண்டு கோவிலை பரமர்த்தித்துக்கொண்டு வருகின்றனர். சிவனடியார்கள் தாங்களே கருவறையில் வழிபாடு செய்யலாம்.

திருமணம் கைகூடியவர்கள் திருத்தலத்தில் திருமணம் செய்கின்றனர். பங்குனி உத்திரத்தில் திருமண விழாவில் பலரும் பங்கேற்கின்றனர். சுவாமிக்கு அன்னபிஷகம், ருத்ராட்சம் அணிந்து தீய பழக்கம் நீங்கியவர்கள் மகா சிவராத்திரி வழிபாடு செய்கின்றனர். கடன் தொல்லை நீங்கியவர்கள், பொருளா தர உயர்வு அடைந்தவர்கள் ஸ்வாமிக்கு சொர்னபிஷகம் செய்கின்றனர். தினமும் 500 பேருக்கு கேழ்வரகு கூழ் வழங்குகின்றனர். ஸ்வாமிக்கு தினமும் கேழ்வரகு கூழ் படைக்கிறார்கள். ஞாயிறு தோறும் இசைப்பயிற்சி, செய்வாய்க்கிழமைகளில் பாரத நாட்டியம், சொற்பொழிவு, சைவ பாட வகுப்பு, பிரதி சதயம் நட்சத்திரத்தில் திருநாவுக்கரசர் குரு பூஜை நடைபெறுகிறது. ஆடிக்கிருத்திகை, திருவாதிரை, மகம், சதயம், ஆனி திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிஷேகம்,கார்த்திகை தீபம், தைப்பூசம், மாத சிவராத்திரி, பங்குனி உத்திரம் , வருடத்தில் 6 நாட்கள் நடராஜர் அபிஷேகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

காலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : விழுப்புரம், பண்ருட்டி, விருத்தாச்சலம்  

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×