ரிஷிவந்தியம்





	


	



























	




 




	








 




11:38:56 AM         Friday, May 14, 2021

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ரிஷிவந்தியம் ரிஷிவந்தியம் ரிஷிவந்தியம் ரிஷிவந்தியம் ரிஷிவந்தியம் ரிஷிவந்தியம் ரிஷிவந்தியம்
Product Code: ரிஷிவந்தியம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                             ரிஷிவந்தியம், அர்த்தநாரீஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. விழுப்புரத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகள் இத்தலத்திற்குச் செல்லும் வகையில் உள்ளது.

இறைவன்  : அர்த்தநாரீஸ்வரர்

இறைவி :  முத்தாம்பிகை

தலமரம் : புன்னை

தல தீர்த்தம் : அகஸ்த்திய,  இந்திர, ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம்

தலச் சிறப்புகள் : இலிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்யும் போது, இலிங்கத்தில் இடை நெளிந்த, கையில் கிளியுடன் இருக்கும் அம்மன் காட்சி தரும் அதிசயத்தைக் ரிஷிவந்தியம் முத்தாம்பிகா உடனுறை அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் காண முடியும். பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் இத்தலம் “ரிஷிவந்தியம்” என வழங்கப்பட்டது. விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக வீரவன்னியர் பரம்பரையினர் காடு வெட்டும்போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு லிங்கம் தான் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம்.

இங்குள்ள கல்வெட்டுக்களில் இந்தக் கோவில் துவாபரயுகத்தில் தோன்றியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில், ராமர், அகத்தியர், குக நமச்சிவாயர் உள்ளிட்டோரும் வந்து வழிபட்டதற்கான சான்றுகள் கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது. இந்த கோயில் துவாபராயுகத்தில் தோன்றியதென்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு வந்து வழிபட்ட இராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும், பூஜைசெய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்டுள்ளனர். குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, “தாயிருக்க பிள்ளை சோறு” என்ற செய்யுளை பாடினார். உடனே அம்மன் அவர் முன் தோன்றி “நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக” என்று கூற குக நமசிவாயரும் அதன்படியே “மின்னும்படிவந்த சோறு கொண்டு வா” என்ற பாடலைப்பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என்பர்.

தல வரலாறு : தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அத்தலத்தில் இருந்த பார்வதிக்கும் அம்மனை அவர் வழிபடவில்லை. ஒரு நாள் கோபமடைந்த அம்மன், இந்திரனின் பால் குடத்தை மறைத்துவிட்டார். பால் குடத்தை காணாததால் மனமுடைந்த இந்திரன் கோவில் பலிபீடத்தில் தலையை மோதி உயிர்விட முயற்சித்த போது ஈசன் இந்திரன் முன் தோன்றி இனி பார்வதிக்கும் பாலாபிஷேகம் செய்யக் கூறினார். மேலும், இவ்வாறு அபிஷேகம் செய்யும் போது எனது உருவத்துடன் இணைந்து பார்வதியும் தோன்றும் எனக் கூறி சிவன் மறைந்தார். அன்று முதல் இன்று வரை தேனபிஷேக பூஜை செய்யும் தருணத்தில் சுயம்பு லிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஆண் பாதி, பெண் பாதியான தோற்றத்தில் கையில் கிளியுடன் அம்மனும், சிவனும் தோற்றமளிக்கின்றனர்.  அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். தேன் கெடாது தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேனபிசேக பூசையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஆண்பாதி பெண்பாதியான ஒளி வடிவில் காட்சி தருகிறார். மற்ற அபிசேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும்.

சிவனுக்கும், பார்வதிக்கும் கைலாயத்தில் திருமணம் நடைபெற்றுக் கொண்ருந்த போது தென் திசை உயர்ந்து வட திசை தாழ்ந்தது. இதைச் சமன் செய்ய அகத்தியரைத் தென் திசை நோக்கிச் செல்ல சிவன் பரிந்துரைத்தார். சிவனின் சொல்படி அகத்தியர் தென்னகத்தில் பல பகுதிகளில் தங்கி சிவ பெருமானுக்குப் பூஜைகள் செய்தார். அவ்வாறு ஒரு பகுதியில் அகத்தியர் பூஜையில் ஈடுபட்டிருந்த போது சிவன் திருமணக்காட்சி தந்தார். இக்காட்சியினை பிற மக்களும் கண்டு பிரார்த்திக்க வேண்டும் என அகத்தியர் வேண்டவே, எனக்கு அபிஷேகம் செய்து வழிபடும் போது நானும், பார்வதியும் இணைந்து அருள்பாலிப்போம் என சிவன் கூறினார். அதனாலேயே இன்றும் லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்கையில் இருவரும் இணைந்து தோன்றுவதாக கூறப்படுகிறது. ரிஷ்கள் பலர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால் இப்பகுதி ரிஷிவந்தியம் என பெயர் பெற்றுள்ளது. 

சிவபெருமானுக்கு உகந்த நாளான சிவராத்திரி சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது.  ஆனியில் பிரம்மோற்சவம் 10 நாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மூன்றாவது திங்கள் கிழமையில் சுவாமிக்கு 108 சங்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பேச்சில் குறைபாடு உள்ளவர்கள், தேன் வாங்கி சிவனுக்கு அபிசேகம் செய்து அந்த தேனை சாப்பிட்டால் பேச்சு குறைபாடு நீங்கும். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்தில் உள்ள சுயம்பு லிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்வதன் மூலம் விரைவில் குழந்தைப்பேரு அடைவதாகப் பக்தர்கள் இடையே கருத்துள்ளது. மேலும், சரிவர பேச்சு வராதவர்கள் சிவனுக்கு தேனில் அபிஷேகம் செய்து அத்தேனை பிரசாதமாக பெற்று சாப்பிட்டால் பேச்சு குறைபாடுகள் நீங்கும். 

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : விழுப்புரம் 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×